Crime : டியூசனுக்கு சென்ற 11 வயது சிறுமி..! பாலியல் வன்கொடுமை செய்த வாட்ச்மேன்..! மகாராஷ்ட்ராவில் கொடூரம்..
மகாராஷ்டிரா மாநிலத்தை அடுத்த தானேவில் 11 வயது சிறுமியை 58 வயது வாட்ச்மேன் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தை அடுத்த தானேவில் 11 வயது சிறுமியை 58 வயது வாட்ச்மேன் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தை அடுத்த தானேவில் 11 வயது சிறுமி பள்ளி முடிந்ததும் மாலை டியூசனுக்கு செல்வது வழக்கம். அதேபோல், நேற்று முன்தினமும் தங்கள் வீட்டுக்கு அருகிலுள்ள டியூசன் சென்றுள்ளார். அப்போது அவரது டியூசன் டீச்சர் வர வெகு நேரமாகியுள்ளது. இதனால் 11 வயது சிறுமி நீண்ட நேரமாக காத்திருந்ததாக கூறப்படுகிறது. அந்த நேரத்தில் பக்கத்து பில்டிங் வாட்ச்மேனாக பணிபுரியும் 58 வயதான நபர் சிறுமியை நோட்டமிட்டு, யாரும் இல்லாததை அறிந்து அருகில் சென்றுள்ளார்.
தொடர்ந்து, அந்த சிறுமியிடம் நெருங்கி, எதற்காக இங்கே நின்று கொண்டு இருக்கிறாய் என்று கேட்டுள்ளார். அதற்கு அந்த சிறுமியும் பதிலளிக்கவே, அந்த நபர் “ இது மிகவும் மோசமான பகுதி. இங்கே நிற்பது ஆபத்து. பாதுகாப்பான இடம் அங்கே ஒன்று இருக்கிறது. அங்கு கொஞ்சம் நேரம் வந்து நில். உன் டீச்சர் வந்ததும் நான் தகவல் கொடுக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
வயதில் மூத்தவர் என்பதால் அந்த சிறுமியும் அவரை நம்பி சென்றுள்ளது. சிறுமியை ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்துசென்ற அந்த வாட்ச்மேன் யாரும் இல்லாததை உறுதிப்படுத்தியுள்ளார். தொடர்ந்து அந்த சிறுமியிடம் அத்துமீறி கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
மீண்டும் சிறுமி தான் முன்பு நின்றிந்த இடத்திற்கு சென்றபோது, அங்கே அவரது டியூசன் டீச்சர் நின்றுள்ளார். அதை வேகமாக பார்த்த சிறுமி ஓடிச்சென்று தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து தகவல் தெரிவித்துள்ளார். உடனடியாக டியூசன் டீச்சர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து, டியூசன் டீச்சர் அளித்த புகாரின் அடிப்படையில் போக்சோ சட்டத்தின்கீழ் அந்த வாட்ச்மேனை கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்ட காவலாளியை காவலில் எடுத்துள்ள போலீசார், தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.
போக்சோ சட்டம் :
கடந்த சில ஆண்டுக்களாக 16 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. தினந்தோறும் இதுபோன்ற செய்திகள் சமூக ஊடங்கள் வாயிலாகவும், தொலைக்காட்சிகள் வாயிலாகவும் நாம் காதுகளில் வந்து தஞ்சமடைக்கின்றது. இத்தகைய கொடுமைகள் இனி எந்தவொரு சிறுமிகளுக்கும் நடைபெற கூடாது எனவும், பொதுமக்கள் கடுமையான சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் எனவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதுபோன்ற தவறு செய்பவர்களுக்கு காவல்துறையினரால் போக்சோ சட்டம் பதியப்பட்டு கைது செய்யப்படுகின்றனர். இந்த நிலையில், போக்சோ சட்டம் என்ன என்பது பற்றி இங்கு தெரிந்து கொள்வோம்.
18 வயதிற்க்குட்பட்ட ஆண், பெண் குழந்தைகளை பாதுகாக்கப்படுபதற்கு கொண்டுவரப்பட்டதே இந்த போக்சோ சட்டம். இந்த சட்டம் எந்த அளவிற்கு பாதுகாப்பானது. இதன் சட்டம் மற்றும் ஷரத்துகள் பின்வருமாறு :
- Penetrative sexual Assault - பலவந்தமான பாலியல் வன்கொடுமை செய்தல்
- Aggravated penetrative sexual assault - தீவிரமான ஊடுருவும் பாலியல் தாக்குதல்
- Sexual Assault - பாலியல் தொல்லை
- Aggravated Sexual Assault - எல்லைமீறிய பாலியல் தொல்லை
- Sexual Harassment - பாலியல் தொந்தரவு
- Taking pornographic pictures of children - குழந்தைகளை வைத்து ஆபாச படம் எடுத்தல்
இந்த ஆறுவகை பாலியல் குற்றங்களும் இந்த போக்சோ சட்டத்தின் கீழ் வருகின்றனர்.
- 18 வயதிற்குட்பட்ட குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்தால் 7 ஆண்டு முதல் ஆயுள் தண்டனை
- இதே குற்றத்தை பெற்றோர், பாதுகாவலர் செய்தால் 10 ஆண்டுகள் சிறை
- 12 வயதிற்கு கீழான குழந்தைகளை வன்கொடுமை செய்தால் - மரண தண்டனை (இந்த சட்டம் 2018ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது)