cyber crime: தன் காதலி என்று நினைத்து பிரைவேட் போட்டோவை பகிர்ந்த இளம்பெண்: காத்திருந்த அதிர்ச்சி!
பாதிக்கப்பட்ட பெண் சமீபத்தில் சமூக ஊடகம் ஒன்றில் friend request ஐ பெற்றிருக்கிறார். அது தனது காதலியின் புகைப்படத்தை காட்டியதாக அப்பெண் கூறுகிறார்.
தன்பால் ஈர்ப்பாளர் போல நடித்து பெண்ணிடம் 15 லட்சம் கேட்டு மிரட்டிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சைபர் கிரைம் :
மத்திய பிரதேசத்தை சேர்ந்த 27 வயது பெண்ணிடம் முகம் தெரியாத நபர் ஒருவர் ரூ. 15 லட்சம் ரூபாய் பணம் கேட்டிருக்கிறார். கொடுக்க மறுத்தால் அந்த பெண்ணின் அந்தரங்க புகைப்படங்களை இணையத்தில் கைசியவிடுவதாக மிரட்டியுள்ளார். பயந்து போன அந்த பெண் போபால் சைபர் போலீசில் புகார் செய்தார். புகாரில் தான் ஒரு தன்பால் ஈர்ப்பாளர் என்றும், முன்னதாக தான் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும் தெரிவித்திருக்கிறார். மேலும் இருவரும் திருமணம் செய்துக்கொள்ள முடிவெடுத்துள்ளனர். ஆனால் சில தனிப்பட்ட காரணங்களால் இருவரும் பிரேக் அப் செய்துள்ளனர். இந்த உறவு குறித்து தனது நண்பர்கள் சிலருக்கும் தெரியும் என்ற அந்த பெண் , தன்னை சமூக வலைத்தளம் வாயிலாக 15 லட்சம் கேட்டு முகம் தெரியாத நபர் மிரட்டுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
வழக்கு பின்னணி :
பாதிக்கப்பட்ட பெண் சமீபத்தில் சமூக ஊடகம் ஒன்றில் friend request ஐ பெற்றிருக்கிறார். அது தனது காதலியின் புகைப்படத்தை காட்டியதாக அப்பெண் கூறுகிறார். காதலிதான் என நினைத்து அந்த பெண்ணுடன் நெருக்கமாக பேசிய பாதிக்கப்பட்ட பெண் , தனது புகைப்படங்களை பகிர்ந்திருகிறார். அதில் சில அவரின் பிரைவட் புகைப்படங்கள் என கூறப்படுகிறது. சில நாட்கள் கழித்து எதிர்முனையில் பெண்ணுடன் பேசிக்கொண்டிருந்த நபர் ,15 லட்சம் பணம் கேட்டு மிரட்டியிருக்கிறார் . பணத்தை அந்த பெண் கொடுக்க மறுத்தால் அந்தரங்க புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றிவிடுவேன் என அந்த நபர் மிரட்டியுள்ளார். பின்னர் அந்த பெண் காவல்துறையை அணுகியுள்ளார். விசாரணைக் குழு ஐபிசியின் பிரிவு 384, 354, 509 மற்றும் ஐடி சட்டத்தின் 66-சி, 66-டி, 67-I ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்தது.
பின்னர் விசாரணையை தீவிரப்படுத்திய காவல்துறையினர் அந்த நபர் டாமோ மாவட்டத்தில் இருந்து சமூக வலைத்தள கணக்கை இயக்குவது தெரிய வந்திருக்கிறது. தனிப்படை அமைத்து போலீசார் ஆகாஷ் லோதி என்னும் 25 வயதுடைய இளைஞரை கைது செய்தனர். விசாரணையில் தனக்கு இரண்டு பெண்களுக்கும் இடையில் இருந்த உறவு தெரியும் என்றும், அவர்கள் பிரிந்து சென்றதை அறிந்துதான் இவ்வாறு செய்தேன் என்றும் கூறியுள்ளார். ஆகாஷை கைது செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்