மேலும் அறிய
Advertisement
Bribe: மாறுவேடத்தில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் - வட்டார போக்குவரத்து அலுவலருக்கு காத்திருந்த ஷாக்
போலீசார் ரசாயணம் கலந்த ரூபாய் நோட்டுகளை வெங்கடாஜலபதியிடம் வழங்கி அதிகாரிகளிடம் அளிக்குமாறு அறிவுறுத்தினர்.
கடலூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பெயர் மாற்றம் மற்றும் வாகன தகுதிச்சான்றிதழ் வழங்க லஞ்சம் வாங்கிய வட்டார போக்குவரத்து அலுவலர் மற்றும் புரோக்கர் சிவா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
கடலூர் கூத்தப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். இவரும் பத்திரக்கோட்டை பகுதியை சேர்ந்த வெங்கடாஜலபதி ஆகிய இருவரும் நண்பர்கள். இருவரும் சேர்ந்து தொழில் தொடங்குவதற்காக சென்னையில் கழிவுநீர் அகற்றும் வாகனம் வாங்கியுள்ளனர்.
கழிவுநீர் அகற்றும் வாகனத்தின் பெயர் மாற்றம் மற்றும் வாகன தகுதி சான்று பெறுவதற்காக செல்வராஜின் நண்பர் வெங்கடாஜலபதி, கடலூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு வந்தார்.
அப்போது வாகனத்திற்கு பெயர் மாற்றம் மற்றும் தகுதி சான்று பெற வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சுதாகர் ரூபாய் 5500 லஞ்சம் கேட்டுள்ளார். இதனால் மன உளைச்சல் அடைந்த வெங்கடாஜலபதி லஞ்சம் கேட்டது தொடர்பாக கடலூர் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு துறை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தேவநாதன் தலைமையிலான போலீசார் ரசாயணம் கலந்த ரூபாய் நோட்டுகளை வெங்கடாஜலபதியிடம் வழங்கி அதிகாரிகளிடம் அளிக்குமாறு அறிவுறுத்தினர்.
இதனை அடுத்து வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு பணத்துடன் வந்த வெங்கடாஜலபதியிடம் பணத்தை புரோக்கரிடம் அளிக்குமாறு வட்டார போக்குவரத்து அலுவலர் சுதாகர் கூறிய போது, வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் மாறு வேடத்தில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் புரோக்கரை கையும் களவுமாக பிடித்தனர். பின்னர் இருவரிடமும் விசாரணை மேற்கொண்டு வட்டார போக்குவரத்து அலுவலர் சுதாகர் மற்றும் புரோக்கர் சிவா ஆகிய இருவரையும் கைது செய்யப்பட்டனர். மேலும் அலுவலகத்தில் கணக்கில் வராத 2½ லட்சம் ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
கிரிக்கெட்
அரசியல்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion