சென்னையில் நடந்த கொடூர கொலை.. கர்நாடகா போலீசை அலறவிட்ட பின்னணி இது ?
"சென்னை மறைமலைநகர் பகுதியில் கொலை செய்து விட்டு கர்நாடகா மாநிலத்தில் உடலை வீசிய கொலையாளிகள் "

சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த அழகுராஜ் மற்றும் அதே பகுதியை சேர்ந்த முருகேசன் இருவருக்கும் முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக 2011 -ஆம் ஆண்டு அழகுராஜின் அப்பா பழனியாண்டி என்பவரை முருகேசன் மற்றும் அவரது சகோதரர் ஆகியோர் தலையில் மரக்கட்டையால் சராசரியாக அடித்துகொலை செய்துள்ளார்.
தொடர் முன்விரோதம்
தனது அப்பா சாவிற்கு காரணமான முருகேசன் மற்றும் அவரது சகோதரர் இருவர் மீதும் விரோதம் கொண்ட அழகுராஜ் முருகேசனின் தந்தை முத்துக்குமார் மற்றும் அவரது மனைவியை கத்தியால் தலையில் பதிலுக்கு வெட்டியுள்ளார். இதற்கு பழி வாங்கும் விதமாக முருகேசன் மற்றும் அவரது சகோதரர் ஆகியோர் அழகுராஜின் அண்ணன் ராஜசேகரை கத்தியால் வெட்டி கொலை முயற்சியில் ஈடுபட்டனர். இது சம்பந்தமாக வழக்கு சிவகங்கை காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளது.
தலைமறைவு வாழ்க்கை
இந்நிலையில் முருகேசன் மற்றும் அவரது அண்ணன் ஆகியோர் சிவகங்கையை விட்டு தலைமறைவாகி வெவ்வேறு பகுதிக்கு சென்றுவிட்டனர். இதில் அழகுராஜ் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் பகுதியில் தங்கி நெய் வியாபாரம் செய்து வந்துள்ளார். இதற்கிடையில் அழகுராஜை கொலை செய்ய திட்டமிட்டு முருகேசன் பத்தாண்டுகளாக தே டிவந்துள்ளார்.
அதற்கான சந்தர்பத்தை எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், அழகுராஜ் தாம்பரம் ரெங்கநாதன் தெருவில் தங்கி நெய் வியாபாரம் செய்து வருவதை அறிந்து கொண்ட முருகேசன் கடந்த 21.11.2024 அன்று முருகேசனின் கூட்டாளிகளான அன்பரசு மற்றும் கதிர்வேல் ஆகியோர் உதவியோடு சிங்க பெருமாள் கோவிலில் சாமி கும்பிட்டுவிட்டு வெளியே வந்த அழகு ராஜாவிடம் வியாபாரம் பேசுவதைப் போல் பேசியுள்ளார்.
திட்டம் திட்டி கொலை
அழகுராஜை அழைத்துச்சென்ற கதிர்வேல், அன்பரசு ஆகியோர் ஏற்கனவே தயார்நிலையில் காத்திருந்த முருகேசனின் இண்டிகா காரில் கடத்திச் சென்று மறைமலைநகர் காவல் எல்லைக்கு உட்பட்ட காட்டுப்பகுதியில் வைத்து அழகுராஜை கத்தியால் சரமாரியாக வெட்டி கொலை செய்து அழகுராஜின் சடலத்தை காரிலயே கொண்டு சென்று ஓசூர் பகுதியில் ஒரு காட்டுப்பகுதியில் வீசிவிட்டு சென்றுவிட்டனர். மேலும் கர்நாடகா நீதிமன்றத்தில் இக்கொலை சம்பந்தமாக சரணடைந்துள்ளனர்.
இது சம்பந்தமாக கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளி காவல் நிலையத்தில் குற்ற எண் 458/24u/s 103,238(A) BNS act வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த கொலை வழக்கு சம்பந்தமாக கொலை செய்யப்பட்ட மறைமலைநகர் காவல் எல்லைக்கு உட்பட்ட அந்த சம்பவ இடத்தை கண்டறிவதற்காக கர்நாடகா போலீசார் மறைமலைநகர் காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிட்டு இக்கொலை குறித்து மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு மாதத்திற்கு பிறகு இந்த கொலை விவகாரம் வெளியே வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

