Raina's Uncle Killers Arrest: ரெய்னாவின் மாமா கொலை வழக்கு - முக்கிய குற்றவாளி கைது!
விசாரணையின் போது, கும்பலை சேர்ந்த பெண்கள் கொள்ளைக்கு முன்னர் வீட்டை நோட்டமிட்டுள்ளனர். அவர்கள் செடிகளை விற்பதற்காக வீட்டிற்குள் நுழைந்து, திருட திட்டமிட்ட கும்பலுக்கு உதவியுள்ளனர்.
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவின் குடும்பத்தினர் மீது பயங்கர தாக்குதல் நடத்திய வழக்கில் முக்கிய குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 19 ஆம் தேதி பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டின் தரியால் கிராமத்தில் நடைபெற்ற கொள்ளையின் போது ரெய்னாவின் மாமா அசோக் குமார் கொல்லப்பட்டார் மற்றும் அவரது குடும்பத்தில் நான்கு பேர் காயமடைந்தனர். கொள்ளையர்கள் வீட்டிற்குள் நுழைந்து, குடும்பத்தினரை ஆயுதங்களால் அடித்து, பணம் மற்றும் மதிப்புமிக்க பொருட்களை கொள்ளை அடித்து சென்றனர்.
இந்த சம்பவம் நடைபெற்ற பிறகு, ரெய்னா 2020 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்தார். பஞ்சாப் முதலமைச்சர் அமரிந்தர் சிங் குற்றவாளிகளை பிடிக்க சிறப்பு விசாரணை குழு ஒன்றை அமைத்தார். அந்த குழு இந்த சம்பவம் தொடர்பாக 11 பேரை கைது செய்தது.
இந்நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றிவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.
பஞ்சாப் காவல்துறை, உத்தரபிரதேச சிறப்பு பணிக்குழு (எஸ்.டி.எஃப்) உடன் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையில், பஹேரி காவல் நிலையத்தின் கீழ் வரும் பச்ச்பேதா கிராமத்தைச் சேர்ந்த சஜ்ஜுவை நேற்று கைது கைது செய்யப்பட்டதாக கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சத்யாசென் யாதவ் தெரிவித்தார். குற்றம் சாட்டப்பட்டவர் கொள்ளை மற்றும் கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார்.
இந்த சம்பவத்திற்குப் பிறகு தான் ஹைதராபாத்திற்கு தப்பிச் சென்றதாகவும், சிறிது நேரம் அங்கேயே தங்கியிருந்ததாகவும், பின்னர் பரேலியில் உள்ள தனது கிராமத்திற்குத் திரும்பியபோது சஜ்ஜு கைது செய்யப்பட்டதாக போலீசார் கூறினார்கள்.
இதுதொடர்பாக போலீஸ் அதிகாரி அஜய் பால் சிங் கூறுகையில், உ.பி.யைச் சேர்ந்த சைமார் பழங்குடியினத்தைச் சேர்ந்த கொள்ளைக்காரர்களின் ஒரு கும்பலால் இந்த கொள்ளை நடந்துள்ளது. கொள்ளைக்கு திட்டமிட்ட சஜ்ஜு சைமார் பரேலியில் உள்ள பஹேடியைச் சேர்ந்தவர். அவர் குற்றத்தைச் செய்த பின்னர் ஹைதராபாத்தில் தலைமறைவாகிவிட்டார். குற்றம் சாட்டப்பட்டவர் தனது சொந்த கிராமமான பஹேதியில் உள்ள பச்பேடாவில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. நாங்கள் பஞ்சாப் போலீஸை எச்சரித்தோம், அந்த நபரின் அடையாளத்தை உறுதிப்படுத்திய பின்னர், ஒரு குழு ஞாயிற்றுக்கிழமை காலை கிராமத்தில் சோதனை நடத்தியது. குற்றம் சாட்டப்பட்டவர் பஞ்சாப் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்” என்று கூறினார்.
மேலும், “விசாரணையின் போது, கும்பலை சேர்ந்த பெண்கள் கொள்ளைக்கு முன்னர் வீட்டை நோட்டமிட்டுள்ளனர். அவர்கள் செடிகளை விற்பதற்காக வீட்டிற்குள் நுழைந்து, திருட திட்டமிட்ட கும்பலுக்கு உதவியுள்ளனர். இந்த கும்பலின் செயல்முறையானது, பாதிக்கப்பட்டவர்களை இரக்கமின்றி அடிப்பதே ஆகும். கொள்ளைக்குப் பிறகு கும்பலைச் சேர்ந்தவர்கள் கலைந்து பஞ்சாப் மற்றும் பிற மாநிலங்களின் வெவ்வேறு பகுதிகளுக்கு சென்றனர்” என்றும் கூறினார்.
Ajith 61 in Social Media: டிரெண்டாகும் #Thala61 ; போனிகபூர் தயாரிப்பில் மீண்டும் அஜித்?