மேலும் அறிய

Kerala Model Death: "தினமும் என் மக அழுவா” : பிறந்தநாளில் முடிந்த வாழ்க்கை.. கேரள நடிகை மர்ம மரணம்..என்ன நடந்தது?

கேரளாவை சேர்ந்த 21 வயதான மாடல் அழகி பிறந்தநாளில் மர்ம முறையில் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவின் கோழிக்கோட்டைச் சேர்ந்த இளம் மாடலும், சிறு வயது நடிகையுமான சஹானா (நேற்று) மே 12, வியாழன் அன்று தனது 21வது பிறந்தநாளைக் கொண்டாடினார். ஆனால் அன்று இரவு, நள்ளிரவு 1 மணியளவில், சஹானா இறந்து கிடப்பதாக காசர்கோடு மாவட்டத்தில் வசிக்கும் அவரது குடும்பத்தினருக்கு தகவல் கிடைத்தது.

மே 13 ம் தேதியான இன்று சஹானாவின் குடும்பத்தினர் அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று காவல்துறையினருக்கு அளித்த புகாரின் அடிப்படையில் அவரது கணவர் சஜ்ஜத்தை காவல்துறையினர் கைது செய்தனர்.

இதுகுறித்து சஹானாவின் தாயார் அளித்த தகவலில், “என் மகள் ஒருபோதும் தற்கொலை செய்துகொள்ளும் அளவிற்கு கோலை இல்லை. அவளை நிச்சயம் கொலைதான் செய்திருப்பார்கள்.  சஹானா அப்பொழுது என்னிடம் அவரது கணவர் வீட்டார்கள் சித்ரவதை செய்வதாக கூறி என்னிடம் அழுவாள். தினமும் அவரது கணவர்  குடித்துவிட்டு வந்து பிரச்னையை செய்வதுதான் வழக்கம்.

மேலும், சஹானா கணவரின் பெற்றோர் மற்றும் சகோதரியும் கொடுமை செய்வதாகவும் கூறினாள். நாங்கள் தனியாக தங்குமாறு கூறினோம். அதன் பிறகும் என் மகள் கணவர் சித்ரவதை செய்வதாகவும், பணம் வேண்டும் தெரிவித்தாள். நாங்கள் கொடுத்த 25 சவரன் தங்கத்தை பெற்று கொண்ட பின்னரும் அவரது கணவர் தொடர்ந்து கொடுமை செய்துள்ளார். அவள் பிறந்தநாளில் எங்களை சந்திக்க விரும்பியதாகவும், அவரது வீட்டார்கள் அனுமதிக்கவில்லை என்றும் எங்களிடம் கூறினாள்" என்றார். 

காசர்கோடு மாவட்டம் செருவத்தூரைச் சேர்ந்த சஹானா கடந்த சில ஆண்டுகளாக நகை விளம்பரத்தில் நடித்து வந்தார். இந்தநிலையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு சஹானா சஜ்ஜத் என்பவரை திருமணம் செய்து கொண்டார். கத்தாரில் பணிபுரிந்து வந்த சஜ்ஜாத், சஹானாவுடன் கோழிக்கோட்டில் உள்ள தனது வீட்டில் வசிக்கத் தொடங்கினார். சஜ்ஜாத்துடன் இணைந்து மாமியார் மற்றும் கணவரின் சகோதரி தன்னை சித்திரவதை செய்வதாக சஹானா தனது குடும்பத்தினரிடம் கூறியபோது, ​​அந்த வீட்டை விட்டு வெளியே செல்ல அவரது தாய் கோரிக்கை வைத்தார். சில வாரங்களுக்கு முன்பு கோழிக்கோடு நகரின் பரம்பில் பஜாரில் உள்ள வாடகை வீட்டில் குடியேறிய நிலையில் சஹானா நேற்று தனது பிறந்தநாளில் மர்மமான முறையில் உயிரிழந்தார். 

சஹானாவின் சகோதரரும் இது கொலையென சந்தேகித்தார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில்,  சஜ்ஜாத்தின் வார்த்தையின் அடிப்படையில் தான் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் முதலில் சந்தேகிக்கின்றனர். "அவர்கள் உள்ளே வரும்போது அவள் உடல் அவன் மடியில் இருந்ததாகவும், அவள் தற்கொலை செய்துகொண்டாதாக தெரிவித்துள்ளார். இதை நாங்கள் ஏன் நம்ப வேண்டும்?" என்று கேள்வி எழுப்பினார். தொடர்ந்து, காவல்துறையினர் சஜ்ஜாத்திடம் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

பெற்றோர்களே உஷார்! வீட்டின் முன்னே விளையாடிய குழந்தைகளுக்கு 'பேட் டச்'... முதியவரை தூக்கிய போலீஸ்!
பெற்றோர்களே உஷார்! வீட்டின் முன்னே விளையாடிய குழந்தைகளுக்கு 'பேட் டச்'... முதியவரை தூக்கிய போலீஸ்!
விழுப்புரத்தில் கொடூரம்! 3 குழந்தைகளின் தாய் மீது நடுரோட்டில் ஆசிட் வீசிய கணவர் அதிரடி கைது!
விழுப்புரத்தில் கொடூரம்! 3 குழந்தைகளின் தாய் மீது நடுரோட்டில் ஆசிட் வீசிய கணவர் அதிரடி கைது!
" கள்ளக் காதலை கைவிடாத தாய் " கஞ்சா போதையில் மகன் செய்த கொடூர காரியம்
போதைப்பொருள் கும்பலுக்கு பேரதிர்ச்சி! முதல்வர் அதிரடி ஆக்ஷன் – தமிழ்நாடே அதிரும் 65 சிறப்பு படைகள் அமைப்பு!
போதைப்பொருள் கும்பலுக்கு பேரதிர்ச்சி! முதல்வர் அதிரடி ஆக்ஷன் – தமிழ்நாடே அதிரும் 65 சிறப்பு படைகள் அமைப்பு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK Slams CM Vijay : ‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
EPS vs Cv Shanmugam :சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
CM Vijay : ‘போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்’ உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!
CM Vijay : ‘போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்’ உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!
Donald Trump: கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?
கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?
Mahindra EV: சூடுபறக்க தயாராகும் மஹிந்த்ராவின் புதிய, பெரிய மின்சார SUV - ட்ரிபிள் ஸ்க்ரீன், ரேஞ்ச் & பல விவரங்கள்
சூடுபறக்க தயாராகும் மஹிந்த்ராவின் புதிய, பெரிய மின்சார SUV - ட்ரிபிள் ஸ்க்ரீன், ரேஞ்ச் & பல விவரங்கள்
CM Vijay: பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
TTV DHINAKARAN : ஒரு கிராம் தங்க மோதிரத்துக்காக ஓடி வருவார்களா? – அமைச்சரின் சர்ச்சை பேச்சுக்கு டிடிவி தினகரன் பதிலடி
ஒரு கிராம் தங்க மோதிரத்துக்காக ஓடி வருவார்களா? – அமைச்சரின் சர்ச்சை பேச்சுக்கு டிடிவி தினகரன் பதிலடி
Free Wi-Fi scheme : இலவசமாக WiFi.! மெரினா, பெசன்ட் நகர் பீச் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.! இணைப்பை பெறுவது எப்படி.?
இலவசமாக WiFi.! மெரினா, பெசன்ட் நகர் பீச் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.! இணைப்பை பெறுவது எப்படி.?
Embed widget