திருவண்ணாமலையில் ஆன்மிக சுற்றுலா வந்த பெண்களை கிண்டல் செய்த காஷ்மீர் வாலிபர் கைது
திருவண்ணாமவையில் ஆன்மிக சுற்றுலா வந்த பெண்களை கேலி, கிண்டல் செய்த காஷ்மீர் பகுதியை சேர்ந்த வாலிபரை போலீசார் கைதுசெய்தனர்.
உலக பிரசித்தி பெற்ற திருத்தலமாகவும் பஞ்சபூத தலங்களில் அக்னி தளமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் ஆகும். கோவிலின் பின்புறத்தில் 2668 உயரம் கொண்ட மலையை சுற்றிலும் உள்ள கிரிவலப் பாதையில் பல்வேறு ஆசிரமங்கள் உள்ளது. இதனை காண வெளிநாடு, வெளி மாநிலங்கள், மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். மேலும் ஆன்மீக ரீதியாக திருவண்ணாமலைக்கு அதிக அளவில் வெளிநாட்டின் வந்து கொண்டு இருக்கின்றனர். இந்நிலையில் திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள ஆசிரமங்கள் மற்றும் விடுதிகளில் தங்கி மன அமைதிக்கான தியானங்கள் மற்றும் பல்வேறு சேவைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி மும்பையை சேர்ந்த மித்தேஷ் தக்கர் என்பவரின் மனைவி ரேபக்கா தக்கர் வயது (40) என்பவர் கடந்த டிசம்பர் மாதம் 20-ந் தேதி வெளிநாட்டைச் (சுவிட்சர்லாந்து) சேர்ந்த 2 இளம்பெண்களுடன் ஆன்மிக சுற்றுலாவிற்காக திருவண்ணாமலைக்கு வருகை புரிந்த னர். பின்னர் அவர்கள் திருவண்ணாமலையில் உள்ள தனியார் அறக்கட்டளை விடுதியில் தங்கியுள்ளனர்.
அதனைத்தொடர்ந்து அவர்கள் அண்ணாமலையார் கோவிலில் சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு பல்வேறு ஆசிரமங்களுக்கு சென்று வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 16-ந் தேதி திருவண்ணாமலை செங்கம் சாலையில் உள்ள சேஷாத்திரி ஆசிரமத்தின் அருகில் அவர்கள் செல்லும் போது அந்த பகுதியில் பல்வேறு வெளி மாநில பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் பணியாற்றி வந்த ஜம்மு காஷ்மீர் பட்கம் பகுதியை சேர்ந்த அப்துல்ரஷித் என்பவரின் மகன் முபாஷிர் ரஷீத் வயது (22) என்பவர் வெளிநாட்டு பெண்களை கேலி, கிண்டல் செய்தும் அவர்களிடம் சைகை மூலமாக கிண்டல் செய்துள்ளார். இது குறித்து உடனடியாக ரேபக்கா தக்கர் திருவண்ணாமலை நகர காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து வெளிநாட்டு பெண்களை கிண்டல் செய் முபாஷிர் ரஷீத்தை கைது செய்தனர்.
அதனைத்தொடர்ந்து தமிழகத்திற்கு அதிகமான வெளிநாட்டை சேர்ந்த நபர்கள் ஆன்மீகத்திற்காக வருகின்றனர். அதிலும் குறிப்பாக திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வருகின்றனர். வருகை தரும் வெளிநாட்டினர் கிரிவலப் பாதையில் உள்ள ஆசிரமங்களிலும் தங்கி வருகின்றனர். ஆனால், திருவண்ணாமலைக்கு வரக்கூடிய வெளிநாட்டு ஆன்மீக பக்தர்களுடைய பாதுகாப்பு கேள்வி குறியாக உள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க வெளிநாட்டு பக்தர்கள் கூடும் இடங்களில் காவல்துறையினர் ரோந்து செல்லவேண்டும், காவல்துறையினரின் தகவல் பலகை வேண்டும் என பலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.