கரூரில் அதிமுக வழக்கறிஞர் வீட்டின் முகப்பு விளக்கு சேதம் - சிசிடிவியில் சிக்கிய சக வழக்கறிஞர் கைது
காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் செல்லாண்டிபாளையத்தை சார்ந்த வழக்கறிஞர் பாலசுப்ரமணியை என்பதும் மேலும் பாலசுப்பிரமணியனை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கரூரில் பிரபல அதிமுக வழக்கறிஞர் வீட்டின் முன்பகுதியில் வைக்கப்பட்ட முகப்பு விளக்கை அரிவாளால் வெட்டி சேதப்படுத்திய சக வழக்கறிஞரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சுங்ககேட் அடுத்துள்ள ஆதிமாரியம்மன் கோவில் தெருவில் வசிப்பவர் வழக்கறிஞர் மாரப்பன். இவர் கரூர் மாவட்ட அதிமுக வழக்கறிஞர் சங்க தலைவர் மற்றும் தமிழ்நாடு அதிமுக பார் கவுன்சிலில் உறுப்பினராகவும் இருந்து வருகிறார். இவருக்கு மஞ்சு என்கின்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். மகன் வெளி நாட்டில் படித்து வரும் நிலையில், மாரப்பனும் வெளியூர் சென்றுள்ளார்.
அவரது மனைவி வீட்டில் தனியாக நேற்று இரவு தூங்கியுள்ளார். வழக்கம் போல் இன்று காலை தூங்கி எழுந்து வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க சுற்று சுவரில் வைக்கப்பட்டிருந்த முகப்பு விளக்குகள் சேதப்படுத்தி இருந்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போது, நள்ளிரவு 1.30 மணியளவில் காரில் வந்த இளைஞர், அரிவாளால் முகப்பு விளக்குகளில் ஒன்றை கழட்டி எடுத்துக் கொண்டும், மற்றொன்றை உடைக்கும் காட்சிகள் பதிவாகி இருந்தது. சிசிடிவி காட்சியில் இருக்கும் அந்த இளைஞர் செல்லாண்டிபாளையத்தை சேர்ந்த சுப்பிரமணியன் என்பதும், இவர் வழக்கறிஞர் மாரப்பன் உடன் இருக்கும் சக வழக்கறிஞர் என்பதும் தெரிய வந்தது. இது தொடர்பாக மஞ்சு தாந்தோன்றிமலை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் செல்லாண்டிபாளையத்தை சேர்ந்த வழக்கறிஞர் பாலசுப்ரமணியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதிமுக வழக்கறிஞரான இவர் பல்வேறு ஆண்டு காலமாக கரூர் மாவட்ட பார் கவுன்சிலர் தேர்தலில் தொடர்ந்து தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கடந்த ஆட்சி காலத்தில் திமுகவிலிருந்து அதிமுகவில் இணைந்த பிறகு தற்போது வரை இவர் அதிமுகவில் வழக்கறிஞர் ஆக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரபல அதிமுக வழக்கறிஞர் வீட்டின் முன்பகுதியில் வைக்கப்பட்ட முகப்பு விளக்கை அரிவாளால் வெட்டி சேதப்படுத்தி இருந்ததை அடுத்து நள்ளிரவில் இந்த சம்பவம் அரங்கேறியதால், அதனை அறிந்த ஆதி மாரியம்மன் கோவில் தெருவில் வசிக்கும் அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். இதனால் காலையில் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்