மேலும் அறிய

கரூரில் காதல் கணவனை மீட்டுத் தருமாறு இளம்பெண் தர்ணா போராட்டம் - பரபரப்பான எஸ்பி அலுவலக வளாகம்

கரூரில் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்த கணவனை தன்னுடன் சேர்த்து வைக்க கோரி இளம் பெண் ஒருவர் கரூர் எஸ்பி அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

கரூர் மாவட்டம், சிந்தாமணிபட்டி பகுதியை சேர்ந்தவர் ரேவதி. இவர் நர்சிங் படித்து வருகிறார்.  இவரை சசிகுமார் என்பவர் காதல் திருமணம் செய்து மூன்று மாதத்திற்கு ரகசியமாக குடும்பம் நடத்திய பிறகு, தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் என காரணம் காட்டி கணவர் சசிகுமார் கைவிட்டுவிட்டார். இதனைத்தொடர்ந்து, சசிகுமார் மீது நடவடிக்கை எடுக்க கோரி கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார்.

புகாரை விசாரித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு குளித்தலை டிஎஸ்பி-யிடம் எஸ்.பி அனுப்பி வைத்தார். ஆனால், புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் டிஎஸ்பி காலம் தாழ்த்தி வந்துள்ளார்.  இதையடுத்து நடவடிக்கை எடுக்காத டிஎஸ்பி மீது நடவடிக்கை எடுக்கவும்,  திருமணம் செய்த பிறகு சாதியை காரணம் காட்டி ஏமாற்றிய சசிகுமார் மீதும் வழக்கு பதியக்கோரி நர்சிங் மாணவி ரேவதி தனது உறவினர்களுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு இரவு நேர தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கரூரில் காதல் கணவனை மீட்டுத் தருமாறு இளம்பெண் தர்ணா போராட்டம் - பரபரப்பான எஸ்பி அலுவலக வளாகம்

இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட இளம் பெண் ரேவதி கூறியதாவது: கரூரில் நர்சிங் படித்தபோது தரகம்பட்டி சசிகுமாருக்கும், எனக்கும் இடையே காதல் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் நாங்கள் கோவை சென்று திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தோம். எனது தந்தை கொடுத்த புகாரால் எங்களை மீட்டு வந்த போலீசார், என்னை என் தந்தையுடன் ஒப்படைத்தார். சசிகுமார் என்னை அழைத்துக் கொண்டு ஊரை விட்டு மீண்டும் வெளியேறினார். மீண்டும் எங்களை அழைத்து வந்த சசிகுமார் குடும்பத்தினர், என்னை திட்டியும், அடித்தும் துன்புறுத்தினர்.

அவர்களிடமிருந்து நான் தப்பி என் வீட்டிற்கு வந்தேன். காவல் நிலையத்தில் நாங்கள் இதுகுறித்து புகார் அளித்தும் வெள்ளியணை போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எஸ்பியிடம் புகார் அளித்தோம். எஸ்பி- யின் உத்தரவின் படி குளித்தலை டிஎஸ்பி,  வெள்ளியணை காவல் நிலையம் என்று பல காவல் நிலையங்கள் சென்றும் எந்த நடவடிக்கையும் இல்லை. 

கரூரில் காதல் கணவனை மீட்டுத் தருமாறு இளம்பெண் தர்ணா போராட்டம் - பரபரப்பான எஸ்பி அலுவலக வளாகம்

அதனால் இப்பொழுது எஸ்பி அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தை தொடங்கியுள்ளோம். நாங்கள் அளித்த புகாரின் பேரில் சசிகுமார் குடும்பத்தார் மீது வழக்கு பதிய வேண்டும். எனது கணவரை என்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் என்று அப்பெண் கூறினார். அப்பெண் மற்றும் குடும்பத்தாருடன் எஸ்பி அலுவலகம் காவல்துறை அதிகாரிகள் பேசி வருகின்றனர்.

கரூரில் காதல் கணவனை மீட்டுத் தருமாறு இளம்பெண் தர்ணா போராட்டம் - பரபரப்பான எஸ்பி அலுவலக வளாகம்

ரேவதி காதல் கல்யாணம் செய்துகொண்டு வாழ்ந்து வந்த நிலையில், தற்போது தன் கணவனை பிரிந்து இருக்கும் இந்த நிலையில் மிகவும் உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். இதனால் அப்பெண்ணுக்கு சரியான தீர்வை காவல்துறையினர் அளிக்குமாறு அப்பெண்ணின் குடும்பத்தாரால் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட அப்பெண் தன் கணவன் குடும்பத்தார் துன்புறுத்தியதாகவும், கணவனை தன்னுடன் சேர்த்து வைக்க கோரியும் எஸ்பி அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டது காவல் நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து கரூர் சரக டிஎஸ்பி தேவராஜ் தலைமையிலான போலீசார் சசிகுமார் மீது உறுதியாக வழக்குப்பதிய சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாக, உறுதி அளித்ததன் பேரில் போராட்டத்தை கைவிட்டு அனைவரும் களைந்து சென்றனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

விழுப்புரத்தில் அடுத்தடுத்து 2 கடைகளில் கொள்ளை! ரூ.7.10 லட்சம் பணம் அபேஸ்; CCTV ஹார்டு டிஸ்க்குகளும் மாயம்!
விழுப்புரத்தில் அடுத்தடுத்து 2 கடைகளில் கொள்ளை! ரூ.7.10 லட்சம் பணம் அபேஸ்; CCTV ஹார்டு டிஸ்க்குகளும் மாயம்!
பணியிட மாறுதலால் ஆத்திரம்... கிளை மேலாளரை கத்தியால் கிழித்த பஸ் டிரைவர்
பணியிட மாறுதலால் ஆத்திரம்... கிளை மேலாளரை கத்தியால் கிழித்த பஸ் டிரைவர்
வாயைக் கொடுத்து சிக்கிய மதுபிரியர்: ஒத்த ஸ்டிக்கரால் பறிபோன 10,000 ஆயிரம் ரூபாய்...
வாயைக் கொடுத்து சிக்கிய மதுபிரியர்: ஒத்த ஸ்டிக்கரால் பறிபோன 10,000 ஆயிரம் ரூபாய்...
தந்தை என்ற உறவுக்கே களங்கம்! பெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் அதிரடி கைது!
தந்தை என்ற உறவுக்கே களங்கம்! பெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் அதிரடி கைது!

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay:
CM Vijay: "தளபதி விஜய்.." ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு சொன்னதும் அதிர்ந்த அரங்கம்!
Special Bus: ஆயுதபூஜைக்கு ஊருக்கு போறீங்களா? 15 ஆயிரம் பஸ் ரெடி - எந்த ஊருக்கு போக எங்கே ஏறணும்?
Special Bus: ஆயுதபூஜைக்கு ஊருக்கு போறீங்களா? 15 ஆயிரம் பஸ் ரெடி - எந்த ஊருக்கு போக எங்கே ஏறணும்?
Udhayanidhi: ஒரு யூனிட் மின்சாரம் ரூபாய் 35; நாட்டின் நம்பர் 1 டுபாக்கூர் விஜய் - விமர்சித்த உதயநிதி
Udhayanidhi: ஒரு யூனிட் மின்சாரம் ரூபாய் 35; நாட்டின் நம்பர் 1 டுபாக்கூர் விஜய் - விமர்சித்த உதயநிதி
CM Vijay: உள்ளே வரும் பாமக? திருமாவை சமாதானப்படுத்த முயற்சி! கழட்டிவிட அமைச்சர்கள் ஐடியா! விஜய் முடிவு என்ன?
CM Vijay: உள்ளே வரும் பாமக? திருமாவை சமாதானப்படுத்த முயற்சி! கழட்டிவிட அமைச்சர்கள் ஐடியா! விஜய் முடிவு என்ன?
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் எல்.முருகன் - ஏன் இந்த திடீர் முடிவு?
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் எல்.முருகன் - ஏன் இந்த திடீர் முடிவு?
திருநெல்வேலி, தூத்துக்குடியில் நாளை மறுநாள் (15.10.2026) மின்தடை ! முழு விவரம்!
திருநெல்வேலி, தூத்துக்குடியில் நாளை மறுநாள் (15.10.2026) மின்தடை ! முழு விவரம்!
கமிஷன் வாங்குவதற்காக ஆந்திரா சென்றுள்ளீர்களா? முதலமைச்சர் விஜய்க்கு முன்னாள் சபாநாயகர் கேள்வி
கமிஷன் வாங்குவதற்காக ஆந்திரா சென்றுள்ளீர்களா? முதலமைச்சர் விஜய்க்கு முன்னாள் சபாநாயகர் கேள்வி
சினிமா துறையினருக்கு அரசுப் பதவி... தகுதி இல்லையா? - ஆவேசமடைந்த பிரபல பாடகர்
சினிமா துறையினருக்கு அரசுப் பதவி... தகுதி இல்லையா? - ஆவேசமடைந்த பிரபல பாடகர்
Embed widget