Karur: லாரி மோதி தாத்தா, பேரன் உயிரிழப்பு - கரூரில் சோகம்
கரூரில் தனது தாத்தாவுடன் சென்ற சிறுவன் திடீரென டூவீலரை வலது புறம் திருப்பியதால் பின்னால் வந்த சரக்கு லாரி மோதி விபத்து.
கரூரில் டூவீலரில் தனது தாத்தாவுடன் சென்ற சிறுவன் திடீரென டூவீலரை வலது புறம் திருப்பியதால் பின்னால் வந்த சரக்கு லாரி மோதி விபத்து ஏற்பட்டதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் மகன் கார்த்திக் வயது 14. இந்த சிறுவனின் தாத்தா கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே உள்ள பெத்தான் கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடாசலம் வயது 80. இவர்கள் இருவரும் இன்று காலை 8.30 மணி அளவில் டிவிஎஸ் 50- வாகனத்தில் பெத்தான் கோட்டை பிரிவு அருகே சென்று கொண்டிருந்தனர்.
அப்போது கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள வாடமங்கலம் பகுதியைச் சேர்ந்த பிரபு வயது 35 என்பவர் டாரஸ் லாரியில் தூத்துக்குடியில் இருந்து பள்ளிபாளையத்தில் உள்ள பேப்பர் மில்லுக்கு சுண்ணாம்பு பவுடர் ஏற்றிக்கொண்டு வந்து கொண்டிருந்தார். கார்த்தியின் டூ வீலர் திடீரென வலதுபுறம் திரும்பியதால் பின்னால் பிரபு ஓட்டி வந்த லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் டூவீலரில் பின்னால் அமர்ந்து வந்த வெங்கடாசலம் சம்பவ இடத்தில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிரிழந்தார்.
கார்த்திக்கும் இதில் பலத்த காயம் அடைந்ததால் உடனடியாக அவரை மீட்டு அரவக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உயிரிழந்த இருவர் உடலையும் அரவக்குறிச்சி அரசு மருத்துவமனை சவக்கிடங்கிற்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக அரவக்குறிச்சி காவல்துறையினர் விசாரணை கொண்டு வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்