பண மோசடி வழக்கு : சவுக்கு சங்கருக்கு வருகின்ற 23-ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்
போலீசாரின் கோரிக்கையை பரிசீலித்த நீதிபதி 4 நாள் மட்டும் கஸ்டடி கொடுத்து உத்தரவிட்டார். இந்த நிலையில் நேற்று இரண்டாவது முறையாக சவுக்கு சங்கரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.
கரூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் பண மோசடி வழக்கில் இரண்டாவது முறையாக ஆஜரான சவுக்கு சங்கர்.
கரூர் காந்திகிராமம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் இவர் அப்பகுதியில் பிரியாணி கடை நடத்தி வருகிறார். இவருக்கு சவுக்கு யூடிபில் பணிபுரிந்த விக்னேஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதை அடுத்து எங்கள் youtube இல் விளம்பரம் செய்தால் உங்கள் நிறுவனம் மிகப் பெரிய அளவில் வளரும் என ஆசை வார்த்தை கூறியதால் கிருஷ்ணன் தன் மனைவியிடமிருந்து சுமார் 7 லட்சம் ரூபாய் பெற்று விக்னேஸ்வரனிடம் கொடுத்துள்ளார்.
ஆனால் விக்னேஷ் சொன்னபடி நடந்து கொள்ளாததால், விக்னேஷை தொடர்புகொண்ட கிருஷ்ணன் தனது பணத்தை திரும்ப கேட்டபொழுது பணம் தர முடியாது என ஆபாச வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் கொடுத்ததாக விக்னேஷ் மீது கரூர் நகர காவல் நிலையத்தில் கிருஷ்ணன் புகார் அளித்தார்.
அதன்படி விக்னேஷை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தியதன் அடிப்படையில் அந்த youtube நிறுவனத்தின் உரிமையாளர் சவுக்கு சங்கரை புழல் சிறையில் இருந்து அழைத்து வந்து நேற்று மாலை கரூர் கிளை சிறையில் அடைத்தனர்.
பின்னர் 09.07.24 ஆம் தேதி கரூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் குற்றவியல் நீதிபதி பரத் குமார் முன்னிலையில் சவுக்கு சங்கரை ஆஜர்படுத்தினர். போலீசாரின் கோரிக்கையை பரிசீலித்த நீதிபதி 4 நாள் மட்டும் கஸ்டடி கொடுத்து உத்தரவிட்டார். இந்த நிலையில் இன்று இரண்டாவது முறையாக சவுக்கு சங்கரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
பண மோசடி வழக்கில் சவுக்கு சங்கருக்கு வருகின்ற 23-ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து கரூர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு.
கரூர், காந்திகிராமம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவர் அப்பகுதியில் பிரியாணி கடை நடத்தி வருகிறார். இவருக்கு சவுக்கு யூடிபில் பணிபுரிந்த விக்னேஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதை அடுத்து தங்கள் யூடியூபில் விளம்பரம் செய்தால் உங்கள் நிறுவனம் மிகப் பெரிய அளவில் வளரும் என ஆசை வார்த்தை கூறியதால், கிருஷ்ணன் தனது மனைவியிடமிருந்து சுமார் 7 லட்சம் ரூபாய் பெற்று விக்னேஸ்வரனிடம் கொடுத்துள்ளார்.
ஆனால், விக்னேஷ் சொன்னபடி நடந்துகொள்ளாததால், விக்னேஷை தொடர்புகொண்ட கிருஷ்ணன் தனது பணத்தை திரும்ப கேட்டபொழுது பணம் தர முடியாது என ஆபாச வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் கொடுத்ததாக விக்னேஷ் மீது கரூர் நகர காவல் நிலையத்தில் கிருஷ்ணன் புகார் அளித்தார்.
அதன்படி விக்னேஷை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தியதன் அடிப்படையில் அந்த யூடியூப் நிறுவனத்தின் உரிமையாளர் சவுக்கு சங்கரை புழல் சிறையில் இருந்து அழைத்து வந்து கடந்த 09.07.24-ஆம் தேதி கரூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் குற்றவியல் நீதிபதி பரத்குமார் முன்னிலையில் சவுக்கு சங்கரை ஆஜர்படுத்தினர்.
போலீசாரின் கோரிக்கையை பரிசீலித்த நீதிபதி 4 நாள் மட்டும் கஸ்டடி கொடுத்து உத்தரவிட்டார். இந்த நிலையில் இன்று இரண்டாவது முறையாக சவுக்கு சங்கரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அதனை தொடர்ந்து வருகின்ற 23-ஆம் தேதி வரை சவுக்கு சங்கருக்கு நீதிமன்ற காவல் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.