கரூரில் பயங்கரம் நிலப்பிரச்னையால் அண்ணன் எரித்து கொலை - தம்பி, தம்பி மனைவி, மகன் கைது
அண்ணனை கட்டி வைத்து மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து கொலை செய்த தம்பி.
![கரூரில் பயங்கரம் நிலப்பிரச்னையால் அண்ணன் எரித்து கொலை - தம்பி, தம்பி மனைவி, மகன் கைது Karur crime news younger brother was killed by pouring kerosene over a land dispute TNN கரூரில் பயங்கரம் நிலப்பிரச்னையால் அண்ணன் எரித்து கொலை - தம்பி, தம்பி மனைவி, மகன் கைது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/10/2c3238d663040464ca2463e8472f6b9f1686375976787183_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கரூர் அருகே ராசாகவுண்டனூர் பகுதியில் நிலப்பிரச்சனையில் அண்ணனை கட்டி வைத்து மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து கொலை செய்த தம்பி, தம்பி மனைவி, தம்பி மகன் உள்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
கரூர் மாவட்டம், மாயனூர் அருகே ராசாகவுண்டனூர் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பண்ணன் 72. அவரது தம்பி காத்தவராயன் 68 என்பவருக்கும் நிலப்பிரச்சினை இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் கடந்த 7ம் தேதி கருப்பண்ணன் வீட்டில் இருந்து தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதாக கூறி சென்று விட்டு நீண்ட நேரம் வராத நிலையில் அங்கே சென்று பார்த்த போது தென்னந்தோப்பில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து கொலை செய்யப்பட்டு உடல் கிடந்தது.
சம்பவ இடத்திற்கு சென்ற மாயனூர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் இரண்டு தனிப்படைகள் அமைத்து கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸார் விசாரித்து வந்தனர். கருப்பண்ணன் தம்பி குடும்பம், காத்தவராயன், அவரது மனைவி பழனியம்மாள், தம்பி மகன் சக்திவேல் மூன்று பேரும் சேர்ந்து கருப்பண்ணனை கட்டையால் அடித்து கை, கால்கள் கட்டப்பட்டு தென்னந்தோப்பில் வைத்து மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. தற்போது மூன்று பேர்களையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)