கரூரில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட நபர் கைது
கரூர் தனியார் டெக்ஸ்டைல் பணிபுரியும் சிவக்குமார் டெக்ஸ் முன்பாக தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு மாலை வந்து பார்த்தபோது வாகனத்தை காணவில்லை என கரூர் நகர காவல் நிலையத்தில் புகாரளித்தார்.
கரூரில் தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட நந்து (எ) நந்துகுமாரை போலீசார் கைது செய்தனர். இதேபோன்று கரூர் மட்டுமல்லாமல் பல்வேறு மாவட்டங்களில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த நிலையில் இவர் மீது இருசக்கர வாகன திருட்டு வழக்கு சுமார் 47 வழக்குகள் உள்ளது விசாரணையில் தெரிய வந்தது.
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள தனியார் டெக்ஸ்டைலில் பணிபுரியும் சிவக்குமார் என்பவர் (11.12.2023) அன்று தான் வேலை பார்க்கும் டெக்ஸ் முன்பாக தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு வேலைக்கு சென்று விட்டு மாலை வந்து பார்த்தபோது தனது இருசக்கர வாகனத்தை காணவில்லை என கரூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதனைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் நந்து (எ) நந்து குமார் என்பவர் காந்தி நகர் வடக்கு, ஆத்தூர் பகுதியைச் சார்ந்தவர் என்பதும் இவர் சிவகுமாரின் இருசக்கர வாகனத்தை திருடி சென்றவர் என்பதும் தெரிய வந்தது
தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில், இதேபோன்று கரூர் மாநகரப் பகுதி மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இதே போன்று இருசக்கர வாகன திருட்டு சம்பவத்தில் இவர் மீது சுமார் 47 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது. இதனை அடுத்து கரூரில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு ஆஜர் படுத்தப்பட்ட நிலையில் நீதிமன்ற காவலுக்கு சிறைக்கு அனுப்பப்பட்டார்.