Crime : 10-ஆம் வகுப்பு மாணவயின் கழுத்தை அறுத்த 12 ஆம் வகுப்பு மாணவன்.. நடந்தது என்ன?
Karur Crime : கரூரில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியை பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் கத்தியால் கழுத்து பகுதியில் குத்தி தாக்கியுள்ளார்.

கரூர் அருகே பத்தாம் வகுப்பு மாணவியை வீட்டின் முன்பே மாணவர் ஒருவர் கழுத்தை அறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.
10 ஆம் வகுப்பு மாணவி:
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே அண்ணாவி பூசாரிபட்டியை சேர்ந்தவர் துரைராஜ். விவசாய அணி இவருக்கு 15 வயதில் மகள் உள்ளார்.இவர் தரகம்பட்டியில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று விடுமுறை என்பதால் இரவு வீட்டிலிருந்து உள்ளார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த 12-ம் வகுப்பு படிக்கும் மாணவன் மாணவயிடம் பழகி வந்த நிலையில் செல்போனில் தொடர்பு கொண்டு வீட்டிற்கு வெளியே வரவழைத்துள்ளார். மாணவி வெளியே வர மறுத்த நிலையில் பரிசு வாங்கி வைத்திருப்பதாக ஆசை வார்த்தைக்காட்டி அந்த மாணவியை வீட்டிற்கு வெளியே வரவழைத்ததாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: Tirupathur : சாலை வசதி இல்லாத மலை கிராமம்.. இறந்தவர் உடலை 7 கி.மீ தூக்கிச்சென்ற அவலம்
கழுத்து அறுப்பு:
இதனை நம்பிச் சென்ற அந்த மாணவியை 12 ஆம் வகுப்பு மாணவன் கத்தியால் கழுத்து பகுதியில் குத்தி தாக்கியுள்ளார். மேலும் மாணவியின் கழுத்து பகுதியில் இருந்த ஒரு பவுன் தங்க செயினையும் அறுத்துச் சென்றுள்ளார். இதனால் பயந்து போன மாணவி கூச்சலிட்டுள்ளார். அப்போது அவர் அபாய குரல் எழுப்பவே சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் வருவதைக் அந்த மாணவன் தப்பி ஓடிவிட்டார்.கழுத்தில் படுகாயம் உடன் இருந்த மாணவி மீட்ட பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் திண்டுக்கல் மாவட்டம் குச்சிலியம்பாறையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.அங்கு மாணவி அவசர சிகிச்சை பிரிவு தற்போது சிகிச்சையில் உள்ளார்.
இதையும் படிங்க: Telangana Tunnel: கண்முன்னே பறிபோகும் 8 உயிர்கள்? சுரங்கப்பாதையை அடைத்த தண்ணீர், சேறு & சகதியால் பிரச்சனை
போலீசார் விசாரணை:
இது குறித்து தகவல் அறிந்த பால விடுதி போலீசார் 12ஆம் வகுப்பு மாணவனை பிடித்து விசாரித்து வருகின்றனர். இந்த விசாரணையில் மாணவி அந்த மாணவனை தவறாக பேசியதாகவும் அந்த கோபத்தின் காரணமாக மாணவியை கத்தியால் குத்தியதாகவும் போலீஸ்சாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.






















