பிறந்தநாளில் புது ட்ரெஸ், சாக்லெட்டுக்கு நோ சொன்ன பெற்றோர்... கோபத்தில் பஸ் ஏறிய சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்!
சிறுமியின் பலத்த அலறல் சத்தம் கேட்டு கிராம மக்கள் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்த காம கொடூரர்களை கைது செய்தனர்.
கர்நாடகாவில் 14 வயது சிறுமி தனது பிறந்தநாளில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமி ஒரு தனியார் பேருந்தில் தனிமடகு கிராமத்திற்கு அழைத்துச் சென்றபோது, 4 பேர் வழியில் மது அருந்திவிட்டு, தனிமைப்படுத்தப்பட்ட இடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.
கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் உள்ள காமசமுத்ரா காவல் நிலைய எல்லையில் இந்த கொடூரமான சம்பவம் நடந்துள்ளது. இந்த அதிர்ச்சிகரமான சம்பவத்தைத் தொடர்ந்து, இந்த வழக்கு தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், கைது செய்யப்பட்டவர்கள் ஆனந்தகுமார், காந்தராஜு, பிரவீன் மற்றும் வேணு என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட சிறுமி 9 ஆம் வகுப்பு படித்து வருகிறார். தனது பிறந்தநாளில் புதிய டிரஸ் மற்றும் சாக்லேட்களை பெற்றோர் வாங்கித் தராததால் சிறுமி கோபமடைந்துள்ளார். இதனால், கடந்த வெள்ளிக்கிழமை பள்ளிக்குச் செல்லாமல் பங்காரப்பேட்டைக்கு பேருந்தில் சென்றார்.
இதற்கிடையில், சில மர்மநபர்கள் சிறுமி தனியாக இருப்பதைக் கண்டு அவளிடம் வந்து பேச ஆரம்பித்தனர். பின்னர் அவர்கள் அவளை ஒரு பூங்காவிற்கு அழைத்துச் சென்று மாலை வரை அவளுடன் நேரத்தை செலவிட்டனர் என்று ஐஏஎன்எஸ் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து, மாலையில், அந்த 4 பேர் சிறுமியை தனியார் பேருந்தில் தனிமடகு கிராமத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது அவர்கள் வழியில் மது அருந்திவிட்டு, தனிமைப்படுத்தப்பட்ட இடத்திற்கு அழைத்துச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.
சிறுமியின் பலத்த அலறல் சத்தம் கேட்டு கிராம மக்கள் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்த காம கொடூரர்களை கைது செய்தனர்.
அதிர்ச்சிகரமான சம்பவத்தை தொடர்ந்து, சிறுமிக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அந்த 4 பேர் மீது பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் (போக்சோ) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறுமிக்கு நேர்ந்த இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்