Pocso On Yediyurappa: கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது போக்சோவில் வழக்கு; நடந்தது என்ன?
Yediyurappa: சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கர்நாடக முன்னாள் முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான எடியூரப்பா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கர்நாடக முன்னாள் முதலமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான எடியூரப்பா மீது, சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் பெயரில் போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.
கடந்த பிப்ரவரி 2-ம் தேதி, 17 வயது சிறுமி மற்றும் அவரது தாயார் எடியூரப்பா வீட்டிற்கு உதவி கேட்பது தொடர்பாக சென்றபோது, சிறுமியை தனி அறைக்குள் அழைத்துச் சென்று பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் பெயரில், பெங்களூரு சதாசிவ நகர் காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சதாசிவநகர் காவல்துறையினரால், வியாழக்கிழமை (மார்ச் 14) இரவு பாஜக மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான பி.எஸ். எடியூரப்பா (81) மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகள் பாதுகாப்பு சட்டம், 2012 (போக்சோ) பிரிவுகளின் கீழ் கர்நாடக முன்னாள் முதல்வர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, நேற்று நள்ளிரவில் முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. காவல்துறை வட்டாரங்களின் தகவலின்படி, 2024 பிப்ரவரி 2 ஆம் தேதி தாயும் மகளும் மோசடி வழக்கில் உதவி கோரி முன்னாள் முதலமைச்சரிடம் சென்றபோது பாலியல் வன்கொடுமை சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது.