இந்திக்கு பதிலாக தமிழ்...! அஞ்சலக அதிகாரியின் அசத்தல் முன்னெடுப்பு: வாழ்த்திய சு.வெங்கடேசன்
சுதந்திரத்துக்குப் பிறகான 75 ஆண்டுகளில் மதுரை அஞ்சலக அதிகாரியின் முயற்சியால் முதன்முறையாக தமிழில் அச்சடிக்கப்பட்ட அஞ்சல் பைகள் வழங்கப்பட்டுள்ளன.
மதுரையில் உள்ள 33 அஞ்சல் கோட்டங்களில், இந்தி மொழிக்கு பதிலாக முதன்முறையாக தமிழ் மொழியில் எழுத்துக்கள் அச்சடிக்கப்பட்ட அஞ்சல் பைகள் புழக்கத்துக்கு வந்துள்ளன.
முதன்முறையாக தமிழில் தபால் பை!
இந்நிலையில், முன்னதாக இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள மதுரை எம்பி சு.வெங்கடேசன், “மதுரை அஞ்சல் பொருள் கூடத்தால் கொள்முதல் செய்யப்பட்டு, 33 அஞ்சல் கோட்டங்களுக்கு ( postal division ) வழங்கப்பட்டுள்ள தபால் பை முதன்முறையாக தமிழில் அச்சடித்து வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான முயற்சிகளை மேற்கொண்ட மதுரை தலைமை அஞ்சலக அதிகாரிக்கு வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளார்.
தபால் பையில் தமிழ்.
— Su Venkatesan MP (@SuVe4Madurai) July 7, 2022
மதுரை அஞ்சல் பொருள் கூடத்தால் கொள்முதல் செய்யப்பட்டு, 33 அஞ்சல் கோட்டத்திற்கு ( postal division ) வழங்கப்பட்டுள்ள தபால் பை முதன் முறையாக தமிழில் அச்சடித்து வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான முயற்சிகள் மேற்கொண்ட
மதுரை தலைமை அஞ்சலக அதிகாரிக்கு வாழ்த்துகள். pic.twitter.com/FyNXoOQi87
அலுவல் மொழிகளான ஆங்கிலம், இந்தி மொழிகளே இதுவரை மத்திய அரசுத் துறைகளில் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், சுதந்திரத்துக்குப் பிறகான 75 ஆண்டுகளில் மதுரை அஞ்சலக அதிகாரியின் முயற்சியால் முதன்முறையாக தமிழில் அச்சடிக்கப்பட்ட அஞ்சல் பைகள் வழங்கப்பட்டுள்ளன.
தமிழ் பற்றாளர்கள் மகிழ்ச்சி!
இந்நிலையில் சு.வெங்கடேசனின் இந்தப் பதிவில் தமிழ் பற்றாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.
முன்னதாக இதேபோல் சென்னையில் உள்ள மாற்றுத்திறனாளி அதிகாரமளித்தல் தேசிய மையத்திற்கான தேர்வு அறிவிப்பில் காலியாக இருந்த தற்காலிக பணிக்கும் இந்தி தகுதியாக நிர்ணயிக்கப்பட்டிருந்தபோது சு.வெங்கடேஷன் கண்டனம் தெரிவித்து உத்தரவை திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தி இருந்தார்.
இந்தி திணிப்புக்கு எதிராக எம்.பி. சு.வெங்கடேசன் தொடர்ந்து குரல் கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: இசையால் நம் உள்ளங்களையும் மாநிலங்களையும் ஆண்டவர்... இளையராஜாவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்