மேலும் அறிய
Advertisement
ஓசி உணவு கேட்டு தொந்தரவு...! அடித்தே கொலை செய்த நபர்..! காஞ்சியில் நடந்தேறிய கொடூரம் ..!
அடித்து கொலை செய்த நபரை காஞ்சிபுரம் தாலுகா காவல்துறையினர் கைது செய்துள்ளனர்
அடிக்கடி இலவச உணவு கேட்டு தொந்தரவு செய்த நபரை, அடித்து கொலை செய்த நபரை காஞ்சிபுரம் தாலுகா காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
காஞ்சிபுரம்-உத்திரமேரூர் சாலையில் காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட ஓரிக்கை பகுதியில் பச்சையம்மாள் என்பவர் கணவனை இழந்த நிலையில், சிறிய ஹோட்டல் ஒன்றை நடத்தி வருகிறார். இவருக்கு உறுதுணையாக காஞ்சிபுரம் ரயில்வே சாலை, சன்னதி தெருவை சேர்ந்த ராமு என்கிற ராமச்சந்திரன் உடன் இருந்து வருகிறார்.
இந்நிலையில் ஓரிக்கை பகுதியை சேர்ந்த திருமலை என்பவர் உணவருந்த வரும் நிலையில் தனக்கு இலவச உணவு அளிக்க வேண்டும் என கூறி அவ்வப்போது தகராறு ஈடுபடுவது வழக்கமாம். இலவச உணவு தருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராமச்சந்திரன் மற்றும் பச்சையம்மாளுடன் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் , இன்று காலை மீண்டும் காலை உணவு கேட்டு தொந்தரவு செய்துள்ளார்.
இந்நிலையில் ராமச்சந்திரன் அவரை திருப்பி அனுப்பி விட்டபோது, மாலை 6 மணிக்கு மீண்டும் போதையில் வந்து இலவச உணவு கேட்டு தொந்தரவு செய்தால் ஆத்திரமடைந்த ராமச்சந்திரன் அவருடன் கைகலப்பில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் அருகில் இருந்த சவுக்கு கட்டையால் சரமாரியாக அவரது முகம், உடல் என பல பகுதியில் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே திருமலை ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.
இந்நிலையில் இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ராமச்சந்திரன் தலைமறைவாக இருந்த நிலையில், சம்பவம் அறித்து அப்பகுதிக்கு வந்த காஞ்சிபுரம் தாலுக்கா காவல்துறையினர் திருமலை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் ராமச்சந்திரனை காவல்துறையினர் கைது செய்து விசாரணைக்காக காவல்நிலையம் அழைத்து சென்றுள்ளனர். இலவச உணவு கேட்டு அடிக்கடி தொந்தரவு செய்ததாலே இது போன்ற நிலை ஏற்பட்டதாக தெரிய வருகிறது.
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
கல்வி
சேலம்
மயிலாடுதுறை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion