மேலும் அறிய
Advertisement
ஹலோ போலீஸ் சார்! நான் என் மனைவியை கொலை செய்து விட்டேன்.. இந்த இடத்துல பாருங்க.. சரணடைந்த கணவர்.!
" கணவன் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்துவிட்டு காவல் துறைக்கு போன் செய்து அவர்களிடம் சரணடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது "
வாலாஜாபாத் அருகே கொண்டிருந்த மனைவியின் மீது மது போதையில் இருந்த கணவன் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்துவிட்டு காவல் துறை போன் செய்து அவர்களிடம் சரணடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சரிவர வேலைக்கு செல்லாத கணவர்
காஞ்சிபுரம் ( Kanchipuram News ) காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அடுத்த சாலவாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சங்கராபுரம் கிராமத்தில் வசிப்பவர் ஸ்ரீதர். கல்தச்சர் ஆன இவருக்கு செல்வராணி என்ற மனைவியும், ஒரு பெண், இரு ஆண் மகன்களுடன் அப்பகுதியில் வசித்து வந்தார். கல்தச்சர் ஆன இவர் சரிவர வேலைக்கு செல்வதில்லை என்பதும் வேலைக்கு சென்றால் அப்பணத்தில் மது அருந்திவிட்டு வீட்டிற்கு பணம் தருவதில்லை என குற்றச்சாட்டு இருந்துள்ளது.
போதையில் கணவன் மனைவிக்கு இடையே தகராறு
இதுகுறித்து செல்வராணி அவரிடம் கேட்கும் போது இருவருக்கும் தகராறு ஏற்படுவது வழக்கமான ஒன்றாக இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று வழக்கு போல் அதிக மது போதையில் ஸ்ரீதர் இருந்துள்ளார். செல்வராணி தனது குழந்தைகளுடன் இரவு உணவு அருந்திவிட்டு தூங்க சென்ற நிலையில் அதிகாலை ஸ்ரீதர் செல்வராணியின் தலைமையின் மீது வீட்டில் இருந்து அம்மி கல்லை போட்டு கொலை செய்துவிட்டு அங்கிருந்து சென்று விட்டார்.
காவலர்களுக்கு கால் செய்த கணவர்
இதை எண்ணி சற்று நேரத்துக்கு பிறகு மனம் வருந்தி காவல்துறை எண்ணான 100 போன் செய்து கொலை குறித்த தகவல்களை தெரிவித்து, சங்கராபுரம் பேருந்து நிறுத்தம் அருகே இருப்பதாக கூறியுள்ளார். உடனடியாக இது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அப்பகுதியில் அருகில் இருந்த ரோந்து சென்ற காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.
சோகத்தில் ஆழ்த்திய கொலைச் சம்பவம்
இதனைத் தொடர்ந்து சாலவாக்கம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து ஸ்ரீதரை விசாரணை செய்து வருகின்றனர். மது போதையில் மனைவி கொலை செய்துவிட்டு அதன் பின் வருந்தி சரணடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பள்ளி செல்லும் குழந்தைகள் இச்சம்பவம் நிலை கண்டு மனம் வருந்தி செய்வது, அறியாமல் இருக்கும் நிலை அனைவருக்கும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
கிரிக்கெட்
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion