மேலும் அறிய

15 வயது சிறுவன் கொடுத்த தகவலால் பரபரப்பான காஞ்சிபுரம்.... காவலர் செய்த சம்பவம்..!

பிரபல தனியார் பால் விற்பனை நிலையத்தில் ரூ.2 லட்சத்து 43 ஆயிரம் ரொக்கப் பணத்தை கொள்ளையடித்து மர்ம நபர்கள் கைவரிசை

காஞ்சிபுரம் மாநகராட்சிகுட்பட்ட பூக்கடைச்சத்திரம் அருகிலுள்ள செங்கழுநீரோடை வீதி பகுதியில் பிரபல தனியார் பால் நிறுவனத்தின் மொத்த மற்றும் சில்லரை  விற்பனைய நிலையமானது இயங்கி வருகிறது. காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை இயங்கி வரும் இந்த விற்பனை நிலையத்தில் கடந்த வெள்ளிக் கிழமையான 20ந் தேதியன்றும்  வழக்கம் போல் விற்பனைகள் நடைபெற்ற நிலையில் விற்பனை நிலைய விநியோகஸ்தர் எத்திராஜ் என்பவர் பணி நிமிர்ததமாக தனது வீட்டிற்கு சென்றுள்ளார். இதையடுத்து விற்பனை நிலையத்தில் பணியாற்றும் ஊழியர்களே  விற்பனையை முடித்துவிட்டு அன்றிரவு கடையை வழக்கம் போல் பூட்டிவிட்டு சென்றுள்ளனர்.

15 வயது சிறுவன் கொடுத்த தகவலால் பரபரப்பான காஞ்சிபுரம்.... காவலர் செய்த சம்பவம்..!
 
100-ஐ தொடர்புக்கொண்டு
 
இந்நிலையில்,அன்றைய தினம் நள்ளிரவு சுமார் 1 மணியளவில்  மர்ம நபர்கள் 5 பேர் திடீரென இந்த விற்பனை நிலையத்தின் பூட்டை உடைத்து உள்ளே சென்றுள்ளதை அருகில் வசிக்ககூடிய சுமார் 15 வயது மதிக்கதக்க சிறுவன் ஒருவன்  கண்டு அதிர்ச்சியடைந்த போதிலும் மிக சாதூர்யமாக சிந்தித்து உடனடியாக காவல்துறையின் அவசரநிலை உதவி எண்ணான 100-ஐ தொடர்புக்கொண்டு அது குறித்தான தகவலை தெரிவித்துள்ளான். அதன் பின் அச்சிறுவன் தனது செல்போனில் கொள்ளையர்கள் விற்பனை நிலையத்திலிருந்து வெளியில் வருவதைவும்  வீடியோ பதிவு செய்துள்ளான். மேலும் அங்கு போலீசார் வருவதற்குள்ளாகவே மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இதனையெடுத்து இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிவகாஞ்சி காவல்துறையினர் விற்பனை நிலையத்தின் உரிமையாளரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வரவழைத்து கடையில் மேற்கொண்ட சோத்தனையில் ரூபாய் 2 இலட்சத்து 43ஆயிரம் ரொக்கப் பணம் கொள்ளையடிக்கப்பிட்டிருப்பது தெரியவந்தது.
 
காலில் இடுக்கி பிடித்த 
 
இதனையெடுத்து  கொள்ளையர்களின் அடையாளங்கள் குறித்து அப்பகுதியில் வசிப்பவர்கள் போலீசாருக்கு தெரிவித்ததன் அடிப்படையில் சிவ காஞ்சி காவல் ஆய்வாளர்  தலைமையில் போலீசார் மூன்று குழுக்களாக பிரிந்து காஞ்சிபுரம் மாநகர பகுதிகள் முழுவதும் வலைவீசி தேடினர். மேலும் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலிருந்து சிசிடிவி கேமரா காட்சியை விழிப்புடன் பார்த்துக்கொண்டிருந்த போலீசார், நெல்லுகாரத்தெரு பகுதியிலுள்ள ஓர் பெட்ரோல் பங்கின் அருகே மர்ம நபர்கள் 5 பேர் நின்று கொண்டிருப்பதை பார்த்து உடனடியாக, தங்களது வாக்கி டாக்கி மூலம் தகவல் தெரிவித்த நிலையில் உடனடியாக அங்கு சென்ற சிவகாஞ்சி காவலர் இளங்கோவை கண்டதும் மர்ம நபர்கள் ஐந்து பேரும்  தப்பி செல்ல முயன்ற நிலையில், காவலர் இளங்கோ மர்ம நபர்களின் இருசக்கர வாகனத்தின் மீது மோதி கீழே விழ செய்துள்ளார்.

15 வயது சிறுவன் கொடுத்த தகவலால் பரபரப்பான காஞ்சிபுரம்.... காவலர் செய்த சம்பவம்..!
 
பின்னர் அதில் ஒருவரை மட்டும் காவலர் இளங்கோ  தனது காலில் இடுக்கி பிடித்த நிலையில் மீதமிருந்த மர்ம நபர்கள் காவலர் இளங்கோவை மறைத்து வைத்திருந்த பட்டாகத்திகளைக் கொண்டு தாக்கியுள்ளனர்.  அதனையும் பொருட்படுத்தாத காவலர் இளங்கோ அவரை இறுக பிடித்தபடி மர்ம நபர்களுக்கு  ஆட்டம் காட்டிக்கொண்டிருந்த போது அடுத்தடுத்து  அப்பகுதிக்கு விரைந்த போலீசாரை கண்டதும் உயிர் தப்பினால் போதுமென பிடிபட்ட சக மர்ம நபர்கள் நால்வரும் அவரை  நிற்கெதியாக  விட்டுவிட்டு   இருசக்கர வாகனத்தில் சிட்டாக பறந்து சென்றுள்ளனர்.
 
பெட்ரோல் பங்க்கிலும் 
 
இதனையெடுத்து போலீசராரிடம் பிடிபட்ட அந்த மர்ம நபரை காவல்நிலையம் அழைத்து சென்ற  அவரிடம் போலீசார்  நடத்திய கிடுக்குபிடி விசாரணையில் அவர் பெயர் பிரேம் குமார் வயது (20) என்பதும்  சென்னை அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் என்பதும் பால் விற்பனை நிலையத்தில் நள்ளிரவு நடைபெற்ற  கொள்ளை சம்பவத்தினை அறங்கேற்றி பெட்ரோல் பங்க்கிலும்  கொள்ளையடிக்க ஈடுபட முயன்றதும் தெரியவந்தது. மேலும் இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எம்.சுதாகர் உத்தரவின் படி 3 தனிப்படைகள் அமைத்து போலீசார் மர்ம நபர்களை வலைவீசி தேடி வந்தனர்.

15 வயது சிறுவன் கொடுத்த தகவலால் பரபரப்பான காஞ்சிபுரம்.... காவலர் செய்த சம்பவம்..!
 
இந்நிலையில் நேற்று முன் தினம் காலை 21ந் தேதியன்று  சிவகாஞ்சி சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான தனிப்படை போலீசாரின் தேடுதல் வேட்டையில், காஞ்சிபுரம் பொன்னேரிக்கரை அருகே நின்று கொண்டிருந்த சென்னை அன்னை சத்யா நகரை சேர்ந்த ஜோசப் (19) என்கிற மற்றொரு கொள்ளையனும் அதிரடியாக சுற்றி வளைத்து போலீசாரால் கைது செய்யப்பட்டார். மேலும் இவர்கள் ஐவரும்  கொள்ளையடித்த பணத்தில்,   பங்கு பிரித்து வைத்திருந்த 1 இலட்சத்து 5ஆயிரம் ரூபாயையும் சிவ காஞ்சி போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்து  புழல் சிறையில் அடைத்தனர். மேலும் இந்த துணிகர கொள்ளை சம்பவத்தில் மீதமுள்ள கொள்ளையர்கள் மூவரையும் போலீசார் வலைவீசி தீவிரமாக  தேடி வருகின்றனர். 

15 வயது சிறுவன் கொடுத்த தகவலால் பரபரப்பான காஞ்சிபுரம்.... காவலர் செய்த சம்பவம்..!
 
பட்டபகலிலேயே கொள்ளை சம்பவங்கள் அறங்கேறினாலும் தனக்கென்ன என்று இருந்திடுவோர் மத்தியில் 15 வயது சிறுவன் ஒருவன் கொள்ளை சம்பவம் குறித்து காவல்துறைக்கு தகவல் கொடுத்து போலீசாருக்கு உதவிடும் வகையில் தனது செல்போனில் வீடியோ பதிவு செய்திருக்கும் செயல் அனைவரிடத்திலும் பாராட்டுகளையும், வரவேற்பையும் பெற்றுள்ளது. அதேபோல் உயிரை பணயம் வைத்து கொள்ளையர்களை எப்படியாவது பிடித்திட வேண்டும் என்பதற்காக தனது யுக்தியை பயன்படுத்தி கொள்ளையர்களின் இருசக்கர வாகனத்தில் மோதி கொள்ளையன் ஒருவனை காவலர் ஒருவர் பிடித்த செயலும் அனைவரிடத்திலும் பெரும் பாராட்டுக்களை பெற்றுள்ளது. மேலும் தற்போது பெட்ரோல் பங்க்கில் இருந்து கொள்ளையர்கள் அடுத்த கொள்ளை குறித்து திட்டம் தீட்டி கொண்டிருந்த போது காவலர் அவர்களது இரு சக்கர வாகனத்தின் மீது மோதி கொள்ளையனை பிடித்ததும், பட்டாகத்திகளை கொண்டு காவலரை தாக்க முயன்ற சிசிடிவி காட்சிகளும்  தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

SIR 2026 Voter List: தமிழ்நாட்டில் லட்சக்கணக்கில் நீக்கப்பட்ட வாக்காளர்கள் - எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை பேர்?
SIR 2026 Voter List: தமிழ்நாட்டில் லட்சக்கணக்கில் நீக்கப்பட்ட வாக்காளர்கள் - எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை பேர்?
TN SIR Voter List LIVE: சென்னையில் இத்தனை பேர் நீக்கமா! SIR வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு:மொத்த எண்ணிக்கை எவ்வளவு?
TN SIR Voter List LIVE: சென்னையில் இத்தனை பேர் நீக்கமா! SIR வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு:மொத்த எண்ணிக்கை எவ்வளவு?
TN SIR Voter List: வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா.? புதிதாக பெயரை சேர்க்க என்ன செய்ய வேண்டும்.? இதோ ஈசியான வழிமுறை
வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா.? புதிதாக பெயரை சேர்க்க என்ன செய்ய வேண்டும்.? இதோ ஈசியான வழிமுறை
PIT BULL , ROTTWEILLER DOG: பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் இனி அவ்வளவு தான்.. நாளை முதல் ரூ.1 லட்சம் அபராதம்
பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் இனி அவ்வளவு தான்.. நாளை முதல் ரூ.1 லட்சம் அபராதம்
ABP Premium

வீடியோ

Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்
TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SIR 2026 Voter List: தமிழ்நாட்டில் லட்சக்கணக்கில் நீக்கப்பட்ட வாக்காளர்கள் - எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை பேர்?
SIR 2026 Voter List: தமிழ்நாட்டில் லட்சக்கணக்கில் நீக்கப்பட்ட வாக்காளர்கள் - எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை பேர்?
TN SIR Voter List LIVE: சென்னையில் இத்தனை பேர் நீக்கமா! SIR வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு:மொத்த எண்ணிக்கை எவ்வளவு?
TN SIR Voter List LIVE: சென்னையில் இத்தனை பேர் நீக்கமா! SIR வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு:மொத்த எண்ணிக்கை எவ்வளவு?
TN SIR Voter List: வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா.? புதிதாக பெயரை சேர்க்க என்ன செய்ய வேண்டும்.? இதோ ஈசியான வழிமுறை
வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா.? புதிதாக பெயரை சேர்க்க என்ன செய்ய வேண்டும்.? இதோ ஈசியான வழிமுறை
PIT BULL , ROTTWEILLER DOG: பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் இனி அவ்வளவு தான்.. நாளை முதல் ரூ.1 லட்சம் அபராதம்
பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் இனி அவ்வளவு தான்.. நாளை முதல் ரூ.1 லட்சம் அபராதம்
TN SIR Voter List: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
TN SIR Voter List: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
Country Chicken : ‘நாட்டுக்கோழியை கண்டுபிடித்து வாங்குவது எப்படி?’ சென்னை மக்களுக்கு ஒரு அடடே அப்டேட்..!
‘நாட்டுக்கோழியை கண்டுபிடித்து வாங்குவது எப்படி?’ சென்னை மக்களுக்கு ஒரு அடடே அப்டேட்..!
BS6 Vs BS5 Vs BS4: கார்களுக்கு விதிக்கப்பட்ட தடை.. BS6 Vs BS5 Vs BS4 என்ன வித்தியாசம்? ஏன் அவசியம்?
BS6 Vs BS5 Vs BS4: கார்களுக்கு விதிக்கப்பட்ட தடை.. BS6 Vs BS5 Vs BS4 என்ன வித்தியாசம்? ஏன் அவசியம்?
Robotics Labs: அரசுப் பள்ளிகளில் ரோபோட்டிக்ஸ் புரட்சி; மாணவர்கள் எதிர்காலத்தை வடிவமைக்கும் புதிய லேப்கள் தொடக்கம்!
Robotics Labs: அரசுப் பள்ளிகளில் ரோபோட்டிக்ஸ் புரட்சி; மாணவர்கள் எதிர்காலத்தை வடிவமைக்கும் புதிய லேப்கள் தொடக்கம்!
Embed widget