மேலும் அறிய

Kanchipuram Cylinder Blast :10 பேரை பலிகொண்ட சிலிண்டர் விபத்து; பாதிப்படைந்தோர் தொடர்ந்து கவலைக்கிடம்

காஞ்சிபுரம் அருகே கேஸ் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

கேஸ் சிலிண்டர் விபத்து
 
காஞ்சிபுரம் மாவட்டம் தேவரியம்பாக்கம் கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் அஜய் குமாரின் மனைவி சாந்தி என்பவர் கேஸ் ஏஜென்சி நடத்தி வந்தார். அஜய்குமார் தம்பி ஜீவானந்தத்தின் வீட்டின் அருகே உள்ள கிடங்கில் சிலிண்டர்கள் இருப்பு வைக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இங்கு பெரிய சிலிண்டர்களில் இருந்து சிறிய சிலிண்டர்களுக்கு கேஸ் முறையான அனுமதியின்றி கேஸ் நிரப்பும் வேலையை செய்து வந்ததாக கூறப்படுகிறது.
 
Kanchipuram Cylinder Blast :10 பேரை பலிகொண்ட சிலிண்டர் விபத்து; பாதிப்படைந்தோர் தொடர்ந்து கவலைக்கிடம்
 
12 பேர் தீவிர சிகிச்சை
 
இந்நிலையில் கடந்த மாதம் 28ம் தேதி இரவு சுமார் 7 மணி அளவில் தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்தப்படும் பெரிய சிலிண்டர் ஒன்று தவறி கீழே விழுந்து வெடித்தது. இதில், அருகில் இருந்த மற்ற சிலிண்டர்களுக்கும் தீ பரவியது. இதில் காஸ் குடோன் உரிமையாளர் ஜீவானந்தம், அவருடைய மகள்கள் நிவேதா, சந்தியா, பூஜா மற்றும் வடமாநில ஊழியர்கள் உள்ளிட்ட 12 பேர்கள் படுகாயம் அடைந்தனர். இவர்களில் 80 முதல் 90 சதவீதத்துக்கு மேல் படுகாயம் அடைந்த ஜீவானந்தம், சந்தியா, பூஜா, அருண், குணா ஆகிய 5 பேர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையிலும், 30 முதல் 50 சதவீத காயம்பட்ட 7 பேரும் சென்னை கே.எம்.சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 
Kanchipuram Cylinder Blast :10 பேரை பலிகொண்ட சிலிண்டர் விபத்து; பாதிப்படைந்தோர் தொடர்ந்து கவலைக்கிடம்
 
மேலும் தீவிபத்தில் காயமடைந்த வடமாநிலத்தை சேர்ந்த அமோத்குமார், மற்றும் ஜீவானந்தம், அவரின் மகள் சந்தியா ஆகியோர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தனர். இதனைத்தொடர்ந்து, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வடமாநிலத்தை சேர்ந்த குணால், சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மதுராநல்லூர் பகுதியை சேர்ந்த கிஷோர், சண்முகப்பிரியன், கோகுல், அருண் ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கடைசி நபர், பூஜா என்ற பெண்ணும் உயிரிழந்தார். இதன் மூலம் கேஸ் குடோன் தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10-ஆக உயர்ந்துள்ளது.
 
5 பேர் மீது வழக்கு பதிவு
 
இந்த விபத்து தொடர்பாக தேவரியம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் அஜய், அவருடைய மனைவி சாந்தி தம்பிகள் ஜீவானந்தம், பொன்னிவளவன், மேலாளர் மோகன்ராஜ் ஆகிய ஐந்து பேர் மீது ஐந்து பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஜீவானந்தம் உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Kanchipuram Cylinder Blast :10 பேரை பலிகொண்ட சிலிண்டர் விபத்து; பாதிப்படைந்தோர் தொடர்ந்து கவலைக்கிடம்
 
உயிரிழந்தவர்களின் பட்டியல்..
 
1. ஜீவானந்தம்
2. பூஜா
3. கிஷோர்
4 .அமோத்குமார்
5. குணால்
6. கோகுல்
7. சண்முகப்பிரியன்
8. அருண்
9. தமிழரசன்
10. பூஜா
 
சிகிச்சை பெற்று வருபவர்கள் விவரம்..
 
1. நிவேதா (21) (60% தீக்காயம்) - வாலாஜபாத்.
 
2.  சக்திவேல் (32) (40 % தீக்காயம்) - பண்ருட்டி.
 
ஆகிய 2 நபர்களுக்கு  சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
 
தலைப்பு செய்திகள்

சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!
சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்
தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்
கள்ளத் தொடர்பு சந்தேகத்தில் காதலி கொலை !! தனிமையில் இருந்த போது நேர்ந்த கொடூரம்
கள்ளத் தொடர்பு சந்தேகத்தில் காதலி கொலை !! தனிமையில் இருந்த போது நேர்ந்த கொடூரம்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: 12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
Hyundai Creta EV On EMI: 475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
Embed widget