மேலும் அறிய
Advertisement
மது கொடுத்து மயக்கமடைய செய்து நடந்த வன்கொடுமை.. ஐந்தாவது குற்றவாளி கைது..
கூட்டு பாலியல் அத்துமீறல் குறித்து புகார் அளித்த 30 மணி நேரத்தில் ஐந்து குற்றவாளிகளையும் கைது செய்து காஞ்சிபுரம் காவல்துறை நடவடிக்கை.
காஞ்சிபுரம் நகராட்சிக்குட்பட்ட ஜவஹர்லால் நேரு தெருவை சேர்ந்த 20 வயது இளம்பெண் பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்துள்ளார், தனியார் கடையில் ஒன்றில் வேலை செய்து வருகின்றார். அந்தக் கடைக்கு வாடிக்கையாக வந்து செல்லும், வணிகர் வீதியை சேர்ந்த குணசீலன் என்பவர் அந்தப் பெண்ணுக்கு காதல் வலை வீசியுள்ளார். அந்தப் பெண்ணுக்கு நல்ல இடத்தில் வேலை வாங்கி தருவதாக உறுதி அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அப்பெண்ணிடம் செல் நம்பர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களின் நண்பராக இணைந்து அந்த பெண்ணுடன் பழகி வந்துள்ளார்.
இந்த சூழ்நிலையில் குணசீலன் என்பவர் அந்தப் பெண்ணை காதலிப்பது போல், பொய்யாக நடித்து பேசி எங்களுடைய பூர்வீக சொத்துக்கள் உள்ள மேல்கதீர்பூர் கிராமத்துக்கு சென்று வருவோம் என கட்டாயப்படுத்தி, தன்னுடைய ஷிப்ட் காரில் அழைத்துச் சென்றுள்ளார். அவ்வாறு செல்லும் வழியிலேயே அந்த பெண்ணை கட்டாயப்படுத்தி பீர் குடிக்க வைத்துள்ளார் .
அந்தப் பெண்ணுக்கு போதை ஏறியவுடன் தன்னுடைய நண்பர்களான , மேட்டு காலனி சிறுவள்ளூர் பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் ஜெபநேசன் (வயது 29), ஓரிக்கை பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் குணசேகரன் (வயது 24), காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் வீதியை சேர்ந்த அஜித் (வயது 23) மற்றும் காமராஜ் என்பவர்களை செல்பேசியில் அழைத்து மேல்கதிர்பூரிலுள்ள தன்னுடைய பம்பு செட்டுக்கு வருமாறு கூறியுள்ளார். நான்கு நண்பர்களும் அந்த இடத்துக்கு வந்தவுடன், அந்த இளம்பெண்ணை காரில் வைத்து ஒருவர் பின் ஒருவராக பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர் .
ஒரு கட்டத்தில் அந்த இளம்பெண் வலி தாங்க முடியாமல் காரின் கண்ணாடியை ஓங்கி அடித்து உடைத்துள்ளார். அப்பகுதியில் விவசாய வேலை செய்துவிட்டு, அந்த வழியே சென்ற பெண்கள் காரில், இருந்து சத்தம் வருவதை கண்டு காரின் அருகே வந்து பார்த்துள்ளனர் . காரின் உள்ளே நிர்வாண கோலத்தில் இளம் பெண்ணும், இரண்டு ஆண்களும் இருந்துள்ளனர். பம்பு செட் அருகே போதையில் இருந்த குணசீலன் பொதுமக்கள் கூட்டம் கூடியுடன் சாவியை தூக்கி ஜெபநேசனிடம் வீசி உள்ளார் . அதை பெற்றுக்கொண்ட ஜெபநேசன் அந்தப் பெண்ணுடன் காரை எடுத்துக்கொண்டு வேகமாக ஓட்டி தப்பினார். மற்ற நண்பர்களும் அங்கிருந்து பைக்கில் தப்பிச் சென்றுள்ளனர்.
பெண்ணுடன் காரில் தப்பித்த இருவரும் அப்பெண்ணை கீழம்பி புறவழிச் சாலையில் இறக்கி விட்டுச்சென்றுள்ளனர். பாலியல் வன்கொடுமைக்கு உட்பட்ட அந்த இளம்பெண், காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று பாலுசெட்டி சத்திரம் காவல் நிலையத்தில் தன்னை 5 பேர் சேர்ந்த கும்பல் வன்கொடுமை செய்ததாக புகார் அளித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் அந்தப் பெண்ணிடம் நேரில், சென்று விசாரணை மேற்கொண்டார். அதன்பேரில் வழக்கறிஞர் ஜெபநேசன் , குணசேகரன், அஜித், மற்றும் தொழிலதிபர் குணசீலன் ஆகிய 4 பேரை அதிரடியாக கைது செய்து பாலுசெட்டி சத்திரம் காவல் நிலையத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டனர். தலைமறைவாக இருந்த காமராஜ் என்பவரை நேற்று காவல்துறை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். புகார் கொடுக்கப்பட்ட 30 மணிநேரத்தில் அனைத்து குற்றவாளிகளை, கைது செய்து நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு, காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகரன் பாராட்டுகள் தெரிவித்தார்
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
அரசியல்
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion