மேலும் அறிய

மது போதையில் இளம் பெண் மயக்கம்... காரில் நாசம் செய்த நண்பர்கள்... காஞ்சிபுரம் கொடூரம்!

பெரிய காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த 20 வயது இளம்பெணை வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றி, பீர் குடிக்க வைத்து 5 பேர் கொண்ட கும்பல் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்துள்ளது.

காஞ்சிபுரம் நகராட்சிக்குட்பட்ட ஜவகர்லால் நேரு தெருவை சேர்ந்த  20 வயது இளம்பெண்  பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்துள்ளார், தனியார்  கடையில் ஒன்றில் வேலை செய்து வருகின்றார். அந்தக் கடைக்கு வாடிக்கையாக வந்து செல்லும், வணிகர் வீதியை சேர்ந்த குணசீலன் என்பவர் அந்தப் பெண்ணுக்கு காதல் வலை வீசியுள்ளார். அந்தப் பெண்ணுக்கு நல்ல இடத்தில் வேலை வாங்கி தருவதாக உறுதி அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அப்பெண்ணிடம் செல் நம்பர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களின் நண்பராக இணைந்து அந்த பெண்ணுடன் பழகி வந்துள்ளார்.

மது போதையில் இளம் பெண் மயக்கம்... காரில் நாசம் செய்த நண்பர்கள்... காஞ்சிபுரம் கொடூரம்!

இந்த சூழ்நிலையில் குணசீலன் என்பவர் அந்தப் பெண்ணை காதலிப்பது போல், பொய்யாக நடித்து பேசி எங்களுடைய பூர்வீக சொத்துக்கள் உள்ள மேல்கதீர்பூர் கிராமத்துக்கு சென்று வருவோம் என கட்டாயப்படுத்தி, தன்னுடைய ஷிப்ட் காரில் அழைத்துச் சென்றுள்ளார். அவ்வாறு செல்லும் வழியிலேயே அந்த பெண்ணை கட்டாயப்படுத்தி பீர் குடிக்க வைத்துள்ளார் .
மது போதையில் இளம் பெண் மயக்கம்... காரில் நாசம் செய்த நண்பர்கள்... காஞ்சிபுரம் கொடூரம்!

அந்தப் பெண்ணுக்கு போதை ஏறியவுடன் தன்னுடைய நண்பர்களான , மேட்டு காலனி சிறுவள்ளூர் பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் ஜெபநேசன் (வயது 29), ஓரிக்கை பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் குணசேகரன் (வயது 24), காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் வீதியை சேர்ந்த அஜித் (வயது 23) மற்றும் காமராஜ் என்பவர்களை செல்பேசியில் அழைத்து மேல்கதிர்பூரிலுள்ள தன்னுடைய பம்பு செட்டுக்கு வருமாறு கூறியுள்ளார். நான்கு நண்பர்களும் அந்த இடத்துக்கு வந்தவுடன், அந்த இளம்பெண்ணை காரில் வைத்து ஒருவர் பின் ஒருவராக பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர் .
மது போதையில் இளம் பெண் மயக்கம்... காரில் நாசம் செய்த நண்பர்கள்... காஞ்சிபுரம் கொடூரம்!

ஒரு கட்டத்தில் அந்த இளம்பெண் வலி தாங்க முடியாமல் காரின் கண்ணாடியை ஓங்கி அடித்து உடைத்துள்ளார். அப்பகுதியில் விவசாய வேலை செய்துவிட்டு, அந்த வழியே சென்ற பெண்கள் காரில், இருந்து சத்தம் வருவதை கண்டு காரின் அருகே வந்து பார்த்துள்ளனர் . காரின் உள்ளே நிர்வாண கோலத்தில் இளம் பெண்ணும், இரண்டு ஆண்களும் இருந்துள்ளனர். பம்பு செட் அருகே போதையில் இருந்து , குணசீலன் பொதுமக்கள் கூட்டம் கூடியுடன் சாவியை தூக்கி ஜெபநேசனிடம் வீசி உள்ளார் . அதை பெற்றுக்கொண்ட ஜெபநேசன் அந்தப் பெண்ணுடன் காரை எடுத்துக்கொண்டு வேகமாக ஓட்டி தப்பினார். மற்ற நண்பர்களும் அங்கிருந்து பைக்கில் தப்பிய சென்றுள்ளனர்.
மது போதையில் இளம் பெண் மயக்கம்... காரில் நாசம் செய்த நண்பர்கள்... காஞ்சிபுரம் கொடூரம்!

பெண்ணுடன் காரில் தப்பித்த இருவரும் அப்பெண்ணை கீழம்பி புறவழிச் சாலையில் இறக்கி விட்டுச் சென்றுள்ளனர். பாலியல் பலாத்காரத்திற்கு உட்பட்ட அந்த இளம்பெண், காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று பாலுசெட்டி சத்திரம்  காவல் நிலையத்தில் தன்னை 5 பேர் சேர்ந்த கும்பல்  வன்கொடுமை செய்ததாக புகார் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் அந்தப் பெண்ணிடம் நேரில், சென்று விசாரணை மேற்கொண்டார்.
மது போதையில் இளம் பெண் மயக்கம்... காரில் நாசம் செய்த நண்பர்கள்... காஞ்சிபுரம் கொடூரம்!

அதன்பேரில் வழக்கறிஞர் ஜெபநேசன் , குணசேகரன், அஜித், மற்றும் தொழிலதிபர் குணசீலன் ஆகிய 4 பேரை அதிரடியாக கைது செய்து பாலுசெட்டி சத்திரம் காவல் நிலையத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் தலைமறைவான காமராஜர் என்பவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட 4 நபர்கள் மீது கூட்டு பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டது, உள்ளிட்ட ஏழு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தலைப்பு செய்திகள்

தஞ்சையை சேர்ந்தவர்களிடம் ரூ. 7.75 லட்சம் பணம் மோசடி: சைபர் க்ரைம் போலீசார் விசாரணை
தஞ்சையை சேர்ந்தவர்களிடம் ரூ. 7.75 லட்சம் பணம் மோசடி: சைபர் க்ரைம் போலீசார் விசாரணை
" இளம் பெண்ணிடம் எல்லை மீறிய மெடிக்கல் ரெப் " பணம் கேட்டு மிரட்டிய பெண் வழக்கறிஞர்
மாமூல் தர மறுத்த அரிசிக்கடை மீது பெட்ரோல் குண்டுவீச்சு: புதுச்சேரியில் ரவுடியின் வெறியாட்டம்!
மாமூல் தர மறுத்த அரிசிக்கடை மீது பெட்ரோல் குண்டுவீச்சு: புதுச்சேரியில் ரவுடியின் வெறியாட்டம்!
கொள்ளிடம் ரயில்வே சுரங்கப்பாதையில் ரகசியச் சதி... சிக்கிய ரௌடி மொட்டை சிவா!
கொள்ளிடம் ரயில்வே சுரங்கப்பாதையில் ரகசியச் சதி... சிக்கிய ரௌடி மொட்டை சிவா!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
TN Weather News: இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Maruti Baleno: ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Embed widget