11 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை இழைத்த 6 சிறுவர்கள்.. ஜார்க்கண்டில் பயங்கரம்..
சிறுமி ஒரு திருமணத்தில் பங்கேற்பதற்காக பக்கத்து கிராமத்திற்குச் சென்றுள்ளார். ஒரு நடன நிகழ்ச்சியின் போது, தனக்கு முன்பிருந்தே தெரிந்த சிறுவர்களுடன் தகராறு செய்துள்ளார்.
ஜார்கண்ட் மாநிலத்தில் 11 வயது சிறுமி, சிறுவர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்கண்ட் மாநிலம் குந்தி மாவட்டத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு பதினொரு வயது சிறுமி ஆறு சிறுவர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்ட 6 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
என்ன நடந்தது?
சிறுமி ஒரு திருமணத்தில் பங்கேற்பதற்காக பக்கத்து கிராமத்திற்குச் சென்றுள்ளார். ஒரு நடன நிகழ்ச்சியின் போது, தனக்கு முன்பிருந்தே தெரிந்த சிறுவர்களுடன் தகராறு செய்துள்ளார்.
மேலும் படிக்க: பள்ளிக்கூட ஸ்டோர் ரூமில் ஆசிரியையுடன் உடலுறவு.. வீடியோவால் சிக்கிய ஹெட் மாஸ்டர்!
“நள்ளிரவில் சிறுமி தனது நண்பர்கள் இருவருடன் வீடு திரும்பியபோது, பின்னால் நடந்து வந்த சிறுவர்கள் அவரைத் தடுத்து, தனிமையான இடத்திற்கு அழைத்துச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர். அந்த இடத்திலிருந்து தப்பிய சிறுமியின் இரண்டு நண்பர்கள், சிறுமியின் பெற்றோருக்குத் தகவல் தெரிவித்தனர். உடனே, பெற்றோர் தனது மகளை தேடி வந்தனர். ஆனால் சிறுவர்கள் அவர்களைப் பார்த்ததும் தப்பி ஓடிவிட்டனர்" என்று போலீசார் தெரிவித்தனர்.
நடந்ததைக் கேள்விப்பட்ட சிறுமியின் குடும்பத்தினர், அசிங்கமாகிவிடும் என நினைத்து முதலில் காவல்துறையில் புகார் அளிக்கத் தயங்கியதாகக் கூறப்படுகிறது.
இறுதியாக, வியாழக்கிழமை, குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் விசாரணையைத் தொடங்கினர். குற்றம் சாட்டப்பட்ட 6 பேரும் தடுத்து வைக்கப்பட்டு சீர்திருத்த நிலையத்திற்கு அனுப்பப்பட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தைகள், பெண்கள், ஆண்கள் யாராக இருந்தாலும், பாலியல் சீண்டல், வன்கொடுமைகளுக்கு ஆளானால், துணிச்சலுடன் வெளியில் வந்து காவல்துறையில் முறையிடவேண்டும். புகாரளிக்கவேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் தண்டிக்கப்படவேண்டும். மனிதர்கள் மானம், பிறப்புறுப்புகளில் இல்லை.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்