Crime: விரட்டிய சீனியர் மாணவர்கள்; இரண்டு மணி நேரம் நிர்வாணமாக ஓடிய கொடூரம்.. ஜாதவ்பூர் மாணவர் தற்கொலையில் ஷாக் தகவல்!
ஜாத்வ்பூர் பல்கலைக்கழக மாணவர் மரணம் தொடர்பாக காவல்துறை விசாரணை நடத்தி வரும் நிலையில், சில திடுக்கிடும் தகவல்களை வெளியாகியுள்ளன.
![Crime: விரட்டிய சீனியர் மாணவர்கள்; இரண்டு மணி நேரம் நிர்வாணமாக ஓடிய கொடூரம்.. ஜாதவ்பூர் மாணவர் தற்கொலையில் ஷாக் தகவல்! Jadavpur University student death Was disrobed he ran from one room to another to hide before death Crime: விரட்டிய சீனியர் மாணவர்கள்; இரண்டு மணி நேரம் நிர்வாணமாக ஓடிய கொடூரம்.. ஜாதவ்பூர் மாணவர் தற்கொலையில் ஷாக் தகவல்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/24/49f374d84d223034e374ce7da31e6e7c1692874354541572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Crime: ஜாத்வ்பூர் பல்கலைக்கழக மாணவர் மரணம் தொடர்பாக காவல்துறை விசாரணை நடத்தி வரும் நிலையில், சில திடுக்கிடும் தகவல்களை வெளியாகியுள்ளன.
உயிரிழந்த ஜாத்வ்பூர் பல்கலை. மாணவர்:
மேற்கு வங்க மாநிலம் ஜாதவ்பூர் பல்கலைக் கழகத்தில் ஸ்வப்னோதீப் குண்டு என்ற மாணவர் வங்க மொழியில் இளங்கலை முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர் கடந்த 9ஆம் தேதி இரவு விடுதியின் இரண்டாவது மாடியில் இருந்து கீழே விழுந்துள்ளார். ரத்த வெள்ளத்தில் கிடந்த இவரை சக மாணவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். விடுதியில் நடந்த ராகிங் கொடுமையால் தான் இந்த விபரீத முடிவு ஸ்வப்னோதீப் குண்டு எடுத்துள்ளதாக தெரிகிறது. இந்நிலையில், ஸ்வப்னோதீப் குண்டு மரணம் தொடர்பாக அதிர்ச்சிக்குரிய தகவல்கள் வெளியாகி உள்ளது.
பகீர் தகவல்கள்:
ஸ்வப்னோதீப் குண்டு இறப்பதற்கு சில மணி நேரம் முன்பு அனுபவித்த சித்ரவதைகள் குறித்து சக விடுதி மாணவர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. அதன்படி, ”விடுதியின் இரண்டாவது மாடியில் ஸ்வப்னோதீப் இருந்துள்ளார். அதே மாடியில் சீனியர் மாணவர்களும் இருந்துள்ளனர். சம்பவத்தன்று அதாவது ஆகஸ்ட் 9ஆம் தேதி இரவு 9 மணியளவில் ஸ்வப்னோதீப் படிக்கட்டில் நடந்துக் கொண்டிருக்கும் போது சீனியர் மாணவர்கள் அவரை ராகிங் செய்தனர். அவரது ஆடைகளை கழற்றி ஆபாச வார்த்தைகளால் பேசி உள்ளனர். இதனால் மாணவர் ஸ்வப்னோதீப் அங்குமிங்கும் நிர்வாணமாக ஓடி ஒரு அறைக்குள் நுழைந்தார். அவரை பின்தொடர்ந்த சீனியர் மாணவர்கள் அங்கு அவருக்கு பாலியல் துன்புறுத்தல்கள் செய்தனர். கிட்டதட்ட நிர்வாணமாக இரவு 11 மணி வரை ஸ்வப்னோதீப் ஓடியுள்ளார். 2 மணி நேரத்திற்கு மேலாக ராகிங் நீடித்ததால், ஸ்வன்போனதீப் கடும் மன உலைச்சலுக்கு ஆளானார். பின்னர், இரவு 11.45 மணிக்கு அறை என் 59 மற்றும் 68க்கும் இடையில் கட்டிடத்தில் இரண்டாவது மாடியில் இருந்து விழுந்துள்ளார். மேலும், ஓரினச்சேரிக்கைக்கு கட்டாயப்படுத்தி உள்ளனர்" என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது:
இந்த சம்பவம் தொடர்பாக 6 தற்போதைய மாணவர்கள், 6 முன்னாள் மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். தீப்சேகர் தத்தா, மனோதோஷ். ஆசிப் அஸ்மல், சர்தா உள்ளிட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 13 பேரில் 12 பேருக்கு எதிரான ஆதாரத்தை போலீசார் திரட்டி உள்ளனர். குற்றவாளிகள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து குறித்து போலீசார் பரிசீலித்து செய்கின்றனர்.
மேலும் படிக்க
BRICS New Members: பிரிக்ஸ் அமைப்பில் இணையும் மேலும் 6 நாடுகள்.. யார் யார் தெரியுமா?
National Film Awards 2023 LIVE: 69வது தேசிய விருதுகள்...இந்த ஆண்டு எந்தெந்த படங்களுக்கு வாய்ப்பு?
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)