Crime: குழந்தைக்கு பாலியல் தொல்லை.. கழுத்தில் குத்தி, தொண்டையை அறுத்து கொடூரக் கொலை.. ”ஜாலியா இருந்துச்சு”
US Indian Origin Crime: குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை கொடூரமாக கொலை செய்ததாக, இந்தியா வம்சாவளியை சேர்ந்த நபர் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

US Indian Origin Crime: குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை கொலை செய்தபோது, மகிழ்ச்சியாக இருந்ததாக கைது செய்யப்பட்ட நபர் தெரிவித்துள்ளார்.
71 வயது முதியவர் கொடூரக் கொலை
அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் ஃப்ரீமாண்ட் பகுதியில், பாலியல் தொல்லை வழக்கில் கைதாகி சிறை தண்டனை அனுபவித்து விடுதலையான 71 வயதான டேவிட் ப்ரிம்மர் என்பவரை, இந்திய வம்சவளியை சேர்ந்த வருண் சுரேஷ் (29) என்பவர் கொடூரமாக கொலை செய்துள்ளார். சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்ட அவர், குறிவைத்து திட்டமிட்டு இந்த கொலையை நிகழ்த்தியுள்ளதாக காவல்துறை விளக்கமளித்துள்ளது. பலமுறை கத்தியால் தாக்கப்பட்டு காயமடைந்ததால், அவசர சிகிச்சை அளிக்கப்பட்டும், பலனின்றி டேவிட் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொலை செய்தது ஏன்? - வருண் சுரேஷ் விளக்கம்
கொலை தொடர்பாக வெளியான நீதிமன்ற ஆவணங்களின்படி, “பாலியல் குற்றம் செய்தவரை கொல்ல வேண்டும் என்ற ஆசை தனக்கு நீண்ட நாட்களாக இருந்தது. அவர்கள் குழந்தைகளை காயப்படுத்துகிறார்கள். அவர்கள் கொல்லப்பட வேண்டியவர்கள் தான். வயது மற்றும் வயது முதிர்ச்சி வேகமாக செயல்படும் திறன்று இருந்தது ஆகியவற்றை கருத்தில் கொண்டே டேவிட்டை தேர்வு செய்தேன். இதற்கான நான் வருந்தவில்லை. அது எனக்கு மோசமானதாக தெரியவில்லை. உண்மையில் அது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அவர் குழந்தைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்தவர். அத்தகைய நபர்களை அனைவரும் வெறுக்கின்றனர். சம்பவ இடத்திலிருந்து தப்பிச் செல்லும் எண்ணம் தனக்கு இல்லை. காவல்துறையினர் வரவில்லை என்றாலும் நானே அவர்களைத் தொடர்பு கொண்டிருப்பேன். குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் இனி நிகழக்கூடாது என்பதற்காகவே இதை செய்தேன்” என வருண் சுரேஷ் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.
டேவிட் ப்ரிம்மரை தேர்வு செய்தது ஏன்? எப்படி?
கடந்த 1995 ஆம் ஆண்டு குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்கில், குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட டேவிட் ப்ரிம்மல் 9 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்தார். இந்நிலையில், கலிபோர்னியாவின் மேகன் சட்ட தரவுத்தளத்தைப் பயன்படுத்தி, குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபவ்ட்டவர்களில் ஒருவரான டேவிட்டை தேர்வு செய்துள்ளார். கொலை முயற்சி சம்பவம் தொடர்பாக காவல்துறைக்கு தொலைபேசி அழைப்பு வருவதற்கு, வெறும் 45 நிமிடங்களுக்கு முன்பு தான், குறிப்பிட்ட தரவு தளத்தில் இருந்து டேவிட்டின் விவரங்களை வருண் சேகரித்ததும் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவத்திற்கு முன்பு வரை, இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்தது கூட இல்லை எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொடூரக் கொலை நிகழ்ந்தது எப்படி?
சம்ப்வத்தன்று கத்தியை மறைத்துக்கொண்டு, குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்த கணக்காளரை போன்று வீடு வீடாக சென்று ஆய்வு செய்துள்ளார். கையில் ஒரு பை, நோட்டு புத்தகம் மற்றும் காஃபி கோப்பையை ஏந்தியபடி சென்றுள்ளார். அதன்படி, டேவிட்டின் வீட்டிற்கு சென்று அவரது அடையாளங்களை கொண்டு உறுதி செய்தபிறகு, டேவிட்டுடன் கையை குலுக்கு சரியான நபரை பிடித்துவிட்டேன் என எனக்கு தெரியும் என தெரிவித்துள்ளார். சந்தேகமடைந்து தப்பித்து ஓடிய டேவிட், அருகிலிருந்த வீட்டின் கராஜ் மற்றும் சமையலறைக்குள் நுழைந்து தப்பியோட முயன்றுள்ளார். ஆனால், ஓடிச் சென்று அவரைப் பிடித்து கழுத்தில் குத்திய வருண் மனந்திருந்துங்கள் என கூறியுள்ளார். ரத்தம் கொட்ட தவழ்ந்து தப்பிச் செல்ல முயன்றபோது தொண்டையை அறுத்துள்ளார். தொடர்ந்து, பல முறை கத்தியால் குத்தியுள்ளார்.
பழைய வழக்குகள்...
வருண் சுரேஷ் 2021 ஆம் ஆண்டு போலி வெடிகுண்டு மிரட்டல், குற்றவியல் மிரட்டல்கள் மற்றும் கொள்ளைச் சம்பவங்களுக்காக ஏற்கனவே சிறை சென்றுள்ளார். ஹயாட் ஹோட்டல்களின் தலைமை நிர்வாக அதிகாரி குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கக் கூடிய நபர் என்று தான் நம்புவதாகவும், அவரைக் கொல்வதற்காக சிறிது காலமாக பின்தொடர்ந்து வருவதாகவும், வருண் காவல்துறை விசாரணையில் கூறியதாக கூறப்படுகிறது.




















