சிவகங்கையில் பாஜக பிரமுகர் கொலை வழக்கு : குற்றஞ்சாட்டப்பட்டவர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதால் பரபரப்பு!
காவலரை தாக்கி விட்டு, தப்ப முயன்ற வசந்த் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். சார்பு ஆய்வாளர் பிரதாப்பிற்கு காயம் ஏற்பட்டுள்ளதும் குறிப்பிடதக்கது.
![சிவகங்கையில் பாஜக பிரமுகர் கொலை வழக்கு : குற்றஞ்சாட்டப்பட்டவர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதால் பரபரப்பு! In the Sivagangai BJP leader's murder case, there was a stir because the accused was shot சிவகங்கையில் பாஜக பிரமுகர் கொலை வழக்கு : குற்றஞ்சாட்டப்பட்டவர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதால் பரபரப்பு!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/29/f6b4aa50b21a1265014011daceea37491722270338861184_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
காயமடைந்த காவல்துறை அதிகாரியும், துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபரும், சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பா.ஜ.க நிர்வாகி கொலை
சிவகங்கையை அடுத்துள்ள வேலாங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வக்குமார். இவர் அதே பகுதியில் செங்கல் சூளை நடத்தி வருகிறார். பா.ஜ.க கூட்டுறவு பிரிவு மாவட்ட செயலாளராகவும் இருந்துவருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன் இரவு, தனது இரு சக்கர வாகனத்தில் சிவகங்கை இளையான்குடி சாலையில் சென்றுள்ளார். அப்போது வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் அவரை வெட்டி கீழே சாய்த்துவிட்டு தப்பி சென்றுள்ளனர். அதனை தொடர்ந்து அவ்வழியாக வந்த அதே கிராமத்தை சேர்ந்தவர்கள் இதனை கண்டு அதிர்ச்சியடைந்து, 108 ஆம்புலன்ஸ் மற்றும் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
- தமிழகத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யாத மத்திய அரசை கண்டித்து ரயில் மறியல் போராட்டம் - சு.வெங்கடேசன்
போராட்டத்தில் பொதுமக்கள்
இதனை அடுத்து சம்பவ இடம் வந்த 108 ஊழியர்கள் அவரை பரிசோதித்து அவர் இறந்ததாக கூறிய நிலையில் ஆத்திரமடைந்த கிராம மக்கள் அங்கேயே அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக சம்பவ இடம் வந்த காவல்துறையினர், அவர்களை சமாதானம் செய்து சடலத்தை பிரேத பரிசோதனைக்காக எடுத்து செல்ல முயற்சித்தனர். ஆனால் அவர்கள் சமாதானம் ஆகாமல் தொடர்ந்து குற்றவாளிகளை கைது செய்ய கோரி மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு மாவட்ட எஸ்.பி டோங்க்ரே பிரவின் உமேஷ் வந்து குற்றவாளிகளை உறுதியாக பிடிப்பதாக உத்தரவாதம் கொடுத்தார்.
அதனைத் தொடர்ந்து அங்கிருந்து நபர்கள் கலைந்து சென்றனர். இறந்தவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு எடுத்து செல்ல அனுமதித்தனர். அதனை அடுத்து உடலை எடுத்து சென்றதுடன் குற்றவாளிகள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் பாஜக பிரமுகர் கொலை வழக்கில் குற்றவாளியாக கருதப்படும் நபர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.
போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்
பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட கூட்டுறவு பிரிவு செயலாளர் செல்வகுமார் கொலை வழக்கில், ஐந்து பேரை பிடித்து காவல்துறை விசாரித்து வந்தனர். இந்தநிலையில் காவலரை தாக்கி விட்டு, தப்ப முயன்ற வசந்த் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். சார்பு ஆய்வாளர் பிரதாப் காயம் ஏற்பட்டுள்ளது. இருவரும் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதால் சிவகங்கையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - ஜம்மு காஷ்மீரில் தொடர் பதற்றம்.. கேஸ் சிலிண்டர் வெடித்து 4 பேர் மரணம்.. பயங்கரவாதிகள் சதியா?
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - "மோடியின் சக்கர வியூகம்.. அபிமன்யுவை போல் இந்தியாவை கொன்று வருகிறார்கள்" கொதித்த ராகுல் காந்தி!
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)