"மோடியின் சக்கர வியூகம்.. அபிமன்யுவை போல் இந்தியாவை கொன்று வருகிறார்கள்" கொதித்த ராகுல் காந்தி!
நரேந்திர மோடி, அமித் ஷா, மோகன் பகவத், அஜித் தோவல், அம்பானி மற்றும் அதானியின் சக்கர வியூகத்தில் இந்தியா சிக்கியிருப்பதாக மக்களவையில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் இன்றைய விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, பாஜக மீது சரமாரி விமர்சனங்களை முன்வைத்தார். இந்தியாவை அபிமன்யு உடன் ஒப்பிட்டு பேசிய அவர், "பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் குருக்ஷேத்திரத்தில் ஆறு பேர் சேர்ந்து அபிமன்யுவை சக்கர வியூகத்தில் சிக்க வைத்து கொன்றனர்.
நாடாளுமன்றத்தில் அதிரடி காட்டிய ராகுல் காந்தி: கொஞ்சம் ஆராய்ச்சி செய்தேன். அப்போதுதான், சக்கர வியூகத்திற்கு பத்ம வியூகம் என்று பெயர் இருப்பது தெரிய வந்தது. அதாவது, தாமரை வடிவிலானது என்பது தெரிந்தது. சக்கர வியூகம் என்பது தாமரை வடிவில் உள்ளது. 21 ஆம் நூற்றாண்டில், ஒரு புதிய 'சக்கரவியூகம்' உருவாகி இருக்கிறது.
அதுவும் தாமரை வடிவில் உள்ளது. அந்த சின்னத்தை பிரதமர் மார்பில் அணிந்துள்ளார். அபிமன்யுவுக்கு என்ன நடந்ததோ, அதேதான் இந்தியாவுக்கும் நடக்கிறது. இளைஞர்கள், விவசாயிகள், பெண்கள், சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் சிக்கியுள்ளனர்.
இன்றும் சக்கர வியூகத்தில் ஆறு பேர் உள்ளனர். இன்றும் ஆறு பேர் கட்டுப்படுத்துகிறார்கள். நரேந்திர மோடி, அமித் ஷா, மோகன் பகவத், அஜித் தோவல், அம்பானி மற்றும் அதானி கட்டுப்படுத்தி வருகிறார்கள்" என்றார்.
மக்களவையில் தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, "இந்தியாவைக் கைப்பற்றியுள்ள சக்கர வியூகத்திற்கு பின்னால் 3 படைகள் உள்ளன. 1) ஏகபோக முதலாளித்துவம். இந்தியச் செல்வம் முழுவதையும் 2 பேர் சொந்தமாக்க அனுமதிக்கிறது.
#WATCH | LoP in Lok Sabha Rahul Gandhi says, "The 'Chakravyuh' that has captured India has 3 forces behind it. 1) The idea of monopoly capital - that 2 people should be allowed to own the entire Indian wealth. So, one element of the 'Chakravyuh' is coming from the concentration… pic.twitter.com/hoRgjBOZkc
— ANI (@ANI) July 29, 2024
எனவே, சக்கர வியூகத்தின் ஒரு அம்சம் நிதி அதிகார குவியலால் வருகிறது. 2) இந்த நாட்டின் நிறுவனங்கள், ஏஜென்சிகள், CBI, ED, IT, 3) அரசியல் நிர்வாகிகள். இந்த மூன்றும் சேர்ந்து, சக்கர வியூகத்தின் மையமாக உள்ளனர். அவை இந்த நாட்டை சீரழித்துவிட்டன" என்றார்.