மேலும் அறிய

கோவையில் மது குடித்த 2 பேர் உயிரிழந்த விவகாரம்: சயனைடு கலந்த மது கொடுத்து கொலை செய்த இளைஞர் கைது

குடும்ப தகராறு காரணமாக மனோகரனின் மருமகன் சத்யராஜ் (30) மதுபாட்டிலில் சயனைடு கலந்து கொடுத்ததும், இது தெரியாமல் அவர் தனது நண்பரான வேலுசாமியுடன் சேர்ந்து குடித்ததில் இருவரும் உயிரிழந்ததும் தெரியவந்தது.

கோவை மாவட்டம் நெகமம் அருகே உள்ள பொன்னாக்காணி பகுதியை சேர்ந்தவர் வேலுச்சாமி. 56 வயதான இவர் விவசாயியாக இருந்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த மனோகரன் என்ற 58 வயதான விவசாயி வேலுச்சாமியின் உறவினர். இந்நிலையில் இருவரும் பொன்னாக்கணி பகுதியில் உள்ள வேலுசாமியின் விவசாய நிலத்தில்  விவசாயப் பணிகளை முடித்துவிட்டு, இருவரும் மது அருந்தி உள்ளனர். மது குடித்த சிறிது நேரத்தில் இருவரும் மயங்கி விழுந்தனர். இதில் வேலுச்சாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனைப் பார்த்து அருகில் இருந்தவர்கள் மனோகரனை மீட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்ந்தனர். அங்கு அவரைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் மனோகரன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர். இதையடுத்து இருவரது உடல்களும் உடற்கூராய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து சுல்தான்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. பின்னர் சம்பவம் நடந்தப் பகுதி நெகமம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதி என்பது தெரியவந்ததை அடுத்து, நெகமம் காவல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதன் பேரில் நெகமம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். 

வேலுசாமி
வேலுசாமி

மது அருந்திய இருவரும் சிறிது நேரத்தில் உயிரிழந்ததால் இருவரும் குடித்தது போலி மதுவா? அல்லது கள்ளச் சாரயமா? என்ற கோணத்தில் நெகமம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இறந்தவர்கள் குடித்த மது பாட்டில், உணவு வகைகளை தடயவியல் நிபுணர்கள் சேகரித்து ஆய்வுக்கு உட்படுத்தினர். இந்நிலையில் விசாரணையில் திடீர் திருப்பமாக சயனைடு கலந்த மதுவினை குடித்து இருவரும் கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.

இருவரும் குடிபோதையில் இறந்ததாகவும், உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்ப விரும்பவில்லை என்றும் இருவரது குடும்பத்தினரும் காவல் துறையினரிடம் தெரிவித்தனர். பின்னர், மனோகரனின் மருமகன் சத்யராஜ், இறந்தவர்களின் உடல்களை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பக் கூடாது என்று குடும்பத்தினரை மூளைச் சலவை செய்தது காவல் துறையினருக்கு தெரியவந்தது. அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த காவல் துறையினர், சூலூர் அருகே பாப்பம்பட்டியில் உள்ள தனியார் கோழி தீவன தயாரிப்பு நிறுவனத்தில் விற்பனை மேலாளராக பணிபுரியும் பி.இ. பட்டதாரி சத்யராஜிடம் விசாரணை நடத்தினர். 

இதில் குடும்ப தகராறு காரணமாக மனோகரனின் மருமகன் சத்யராஜ் (30) மதுபாட்டிலில் சயனைடு கலந்து கொடுத்ததும், இது தெரியாமல் அவர் தனது நண்பரான வேலுசாமியுடன் சேர்ந்து குடித்ததில் இருவரும் உயிரிழந்ததும் தெரியவந்தது. சத்யராஜ், மனோகரன் மகள் மாசிலாமணி (26) என்பவரை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்த நிலையில், அவர்களுக்கு இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்தது. பிரச்னை ஏற்படும்போதெல்லாம் மனோகரன் தலையிட்டு மகளை அழைத்துச் சென்றார். ஆறு மாதங்களுக்கு முன், தம்பதியிடையே ஏற்பட்ட பிரச்னையால், மனோகரன், தன் மகள் மாசிலாமணியை, பொன்னாக்காணி கிராமத்தில் உள்ள வீட்டுக்கு அழைத்துச் சென்றார். மகளை சத்யராஜுடன் செல்ல அனுமதிக்க மறுத்துவிட்டார். 

இதற்கிடையில், மனோகரன் அண்மையில் தனது நிலத்தை 32 லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்து, அந்தத் தொகையை பொன்னகனியில் உள்ள தனது வீட்டில் வைத்திருந்தார். அந்த தொகையை கொள்ளையடிக்க சத்யராஜ் திட்டமிட்டதாக கூறப்படுகிறது. இதனிடையே 7 ஆயிரம் ரூபாய் செலவழித்து ஆன்லைனில் சயனைடு வாங்கினார். மதுவில் கலந்து விட்டு, மனோகரனுக்கு வழங்கியுள்ளார். பின்னர் அந்த மதுவை தனது நண்பர் வேலுசாமியுடன் இணைந்து குடித்து உயிரிழந்துள்ளனர். இதையடுத்து கொலை வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் சத்யராஜை கைது செய்தனர். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TN SIR Voter List: உங்க பேரு வாக்காளர் பட்டியலில் இருக்கா? SIR வரைவு பட்டியல் வெளியீடு: 3 வழியில் சரிபார்க்கலாம்- எப்படி?
TN SIR Voter List: உங்க பேரு வாக்காளர் பட்டியலில் இருக்கா? SIR வரைவு பட்டியல் வெளியீடு: 3 வழியில் சரிபார்க்கலாம்- எப்படி?
SIR 2026 Voter List: தமிழ்நாட்டில் லட்சக்கணக்கில் நீக்கப்பட்ட வாக்காளர்கள் - எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை பேர்?
SIR 2026 Voter List: தமிழ்நாட்டில் லட்சக்கணக்கில் நீக்கப்பட்ட வாக்காளர்கள் - எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை பேர்?
TN SIR Voter List LIVE: தமிழ்நாட்டில் 97.37 லட்ச வாக்காளர்காள் நீக்கம்... தேர்தல் ஆணையம் கொடுத்த ஷாக்... மாவட்ட வாரியாக எத்தனை பேர் நீக்கம்?
TN SIR Voter List LIVE: தமிழ்நாட்டில் 97.37 லட்ச வாக்காளர்காள் நீக்கம்... தேர்தல் ஆணையம் கொடுத்த ஷாக்... மாவட்ட வாரியாக எத்தனை பேர் நீக்கம்?
TN SIR Voter List: வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா.? புதிதாக பெயரை சேர்க்க என்ன செய்ய வேண்டும்.? இதோ ஈசியான வழிமுறை
வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா.? புதிதாக பெயரை சேர்க்க என்ன செய்ய வேண்டும்.? இதோ ஈசியான வழிமுறை
ABP Premium

வீடியோ

Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்
TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN SIR Voter List: உங்க பேரு வாக்காளர் பட்டியலில் இருக்கா? SIR வரைவு பட்டியல் வெளியீடு: 3 வழியில் சரிபார்க்கலாம்- எப்படி?
TN SIR Voter List: உங்க பேரு வாக்காளர் பட்டியலில் இருக்கா? SIR வரைவு பட்டியல் வெளியீடு: 3 வழியில் சரிபார்க்கலாம்- எப்படி?
SIR 2026 Voter List: தமிழ்நாட்டில் லட்சக்கணக்கில் நீக்கப்பட்ட வாக்காளர்கள் - எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை பேர்?
SIR 2026 Voter List: தமிழ்நாட்டில் லட்சக்கணக்கில் நீக்கப்பட்ட வாக்காளர்கள் - எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை பேர்?
TN SIR Voter List LIVE: தமிழ்நாட்டில் 97.37 லட்ச வாக்காளர்காள் நீக்கம்... தேர்தல் ஆணையம் கொடுத்த ஷாக்... மாவட்ட வாரியாக எத்தனை பேர் நீக்கம்?
TN SIR Voter List LIVE: தமிழ்நாட்டில் 97.37 லட்ச வாக்காளர்காள் நீக்கம்... தேர்தல் ஆணையம் கொடுத்த ஷாக்... மாவட்ட வாரியாக எத்தனை பேர் நீக்கம்?
TN SIR Voter List: வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா.? புதிதாக பெயரை சேர்க்க என்ன செய்ய வேண்டும்.? இதோ ஈசியான வழிமுறை
வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா.? புதிதாக பெயரை சேர்க்க என்ன செய்ய வேண்டும்.? இதோ ஈசியான வழிமுறை
PIT BULL , ROTTWEILLER DOG: பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் இனி அவ்வளவு தான்.. நாளை முதல் ரூ.1 லட்சம் அபராதம்
பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் இனி அவ்வளவு தான்.. நாளை முதல் ரூ.1 லட்சம் அபராதம்
TN SIR Voter List: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
TN SIR Voter List: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
Country Chicken : ‘நாட்டுக்கோழியை கண்டுபிடித்து வாங்குவது எப்படி?’ சென்னை மக்களுக்கு ஒரு அடடே அப்டேட்..!
‘நாட்டுக்கோழியை கண்டுபிடித்து வாங்குவது எப்படி?’ சென்னை மக்களுக்கு ஒரு அடடே அப்டேட்..!
BS6 Vs BS5 Vs BS4: கார்களுக்கு விதிக்கப்பட்ட தடை.. BS6 Vs BS5 Vs BS4 என்ன வித்தியாசம்? ஏன் அவசியம்?
BS6 Vs BS5 Vs BS4: கார்களுக்கு விதிக்கப்பட்ட தடை.. BS6 Vs BS5 Vs BS4 என்ன வித்தியாசம்? ஏன் அவசியம்?
Embed widget