மேலும் அறிய
Advertisement
காஞ்சிபுரம் : குடிபோதையில் கொல்ல வந்த கணவன் : அதே கத்தியை பிடுங்கி குத்திக்கொன்ற மனைவியும், அவரது தம்பியும் கைது..!
தன்னை கொலைசெய்ய வந்த கணவனை அதே கத்தியால் சரமாரியாக வெட்டி துண்டுத்துண்டாக போட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மளிகை செட்டித்தெரு பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் நவ்ஷாத். இவர் கடந்த 12 வருடங்களுக்கு முன்னதாக ரேவதி என்ற பெண்ணை காதலித்து வந்த நிலையில், தன்னை திருமணம் செய்ய வேண்டுமென்றால் நீ மதம் மாற வேண்டும் என்று கூறி, ரேவதியின் பெயரை நசியா என்று மாற்றி திருமணம் செய்துள்ளார். காதலன் தன்னை கண்கலங்காமல் பார்த்துக்கொள்வான் என்ற நம்பிக்கையில் ரேவதியும் நசியாவாக மாறி தனது வாழ்க்கை பயணத்தை தொடங்கியுள்ளார். இவர்கள் இருவருக்கும் தற்போது 9 வயதுடைய மகனும், 6 வயதுடைய மகளும் உள்ளனர்.
இந்நிலையில், நவ்ஷாத்துக்கு மது அருந்தும் பழக்கம் ஏற்படவே, ஆட்டோ ஓட்டுவதில் வரும் பெரும் பங்கு வருமானத்தை மதுவுக்கு செலவிட்டுள்ளார். மேலும், தினமும் மது அருந்திவிட்டு மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார்.மதுபோதையில் வீட்டிற்கு வரும் நவ்ஷாத் அவ்வப்போது மனைவியை அடித்து துன்புறுத்தியும் வந்த நிலையில், குழந்தைகளை பாதுகாக்க பக்கத்து வீடுகளுக்கு அனுப்பி வைத்து நசியா தங்க வைத்துள்ளார்.
இந்நிலையில், வழக்கம் போல குடித்துவிட்டு மனைவியுடன் கடுமையாக நவ்ஷாத் சண்டையிட்டுள்ளார். குழந்தைகள் வழக்கம் போல பக்கத்து வீட்டில் இருந்துள்ளனர். இந்த சண்டையில் ஆத்திரத்தின் உச்சிக்கு சென்ற நவ்சாத் மனைவியை கொலை செய்ய திட்டமிட்டு இறைச்சி வெட்டும் கத்தியுடன் துரத்தியுள்ளார். பயந்துபோன நசியா வீட்டின் கழிவறைக்குள் சென்று கதவை தாழிட்டு இருந்துள்ளார். வெளியே இருந்த நவ்ஷாத் மனைவியை கொலை செய்ய வேண்டும் என்று கதவை வெட்டியுள்ளார். ஆத்திரத்தின் உச்சிக்கு சென்ற நசியா கதவை ஆவேசத்துடன் திறந்ததில் நவ்சாத் கீழே விழுந்துவிடவே, அவர் கையில் இருந்த கத்தியை வாங்கி காதல் கணவனை சரமாரியாக வெட்டிக்கொலை செய்துள்ளார்.
மேலும், இறைச்சி கடையில் இறைச்சிகளை வெட்டுவது போல வெட்டியதில், நசியாவின் உடல் முழுவதும் இரத்தம் தெரித்துள்ளது. பின்னர், நசியாவே நேரடியாக காவல் நிலையத்திற்கு கத்தியுடன் சென்று விஷயத்தை கூறி சரணடைந்துள்ளார். காவல்துறை பிரேதத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்து நசியா மற்றும் அவரது உறவினர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். அப்போது நசியாவின் தம்பி லோகேஷ் தானும் வெட்டியதாகவும், குடும்பத்தின் நலன் கருதி வெளியே சென்று விடுமாறு அக்கா கூறியதால் சென்று விட்டதாகவும் தெரிவித்தார்.
கணவனின் குடிப்பழக்கத்தால் காதல் திருமணம் செய்த மனைவியே, கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இரண்டு பச்சிளம் குழந்தைகள் ஆதரிக்க ஆட்கள் இல்லாமல் விழிபிதுங்கி இருக்கின்றனர்.
இதேபோல் காஞ்சிபுரம் அடுத்த கீழ்கதிர்பூர் கிராமத்தில் கடந்த வாரம் குடிபோதையில் தொடர்ந்து தொல்லை கொடுத்து, வந்த தன் கணவரை உருட்டு கட்டையால் அடித்துக் கொன்ற மனைவி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஒரே வாரத்தில் போதையின், காரணமாக காஞ்சிபுரத்தில் இருவேறு இடங்களில் கணவனை மனைவி, கொலை செய்துள்ள சம்பவம் காஞ்சிபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
க்ரைம்
இந்தியா
க்ரைம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion