மேலும் அறிய
Advertisement
சென்னையில் பயங்கரம் : 5 சிறுமிகளை பாலியல் தொந்தரவு செய்த கூல்டிரிங்ஸ் கடைக்காரர் கைது : இரு பெண்கள் கைது
சென்னையில் 5 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த கூல்ட்ரிங்ஸ் கடை உரிமையாளர் உட்பட அவருக்கு உடந்தையாக இருந்த 2 பெண்கள் போக்சோ சட்டத்தில் கைது
சென்னை அடுத்த டிபி சத்திரம் பகுதியில் உள்ள ஜோதி அம்மாள் நகரில் கூல்டிரிங்ஸ் கடை நடத்தி வருபவர் பெருமாள் வயது 48. இவர் அந்த பகுதியில் நீண்ட காலமாக கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் பெருமாள் அந்தப் பகுதியை சார்ந்த, ஒன்பது வயது சிறுமி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக புகார் எழுந்தது. அதுமட்டுமின்றி ஒன்பது வயது சிறுமியின் நான்கு தோழிகளுக்கும் பெருமாள் பாலியல் தொந்தரவு அளித்ததாக சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர்.
பெற்றோர் அளித்த புகாரில் ,கூல்ட்ரிங்ஸ் கடை நடத்தி வரும் பெருமாள் தன்னுடைய மகள் உட்பட நான்கு குழந்தைகளுக்கு, பாலியல் தொந்தரவு அளித்ததாக டிபி சத்திரம் காவலி நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து குழந்தை பாலியல் புகார் என்பதால் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு வழக்கு மாற்றப்பட்டது, பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் பெருமாளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அதுமட்டுமின்றி பெருமாள் சிறுமிகளிடம் பாலியல், அத்துமீறலில் ஈடுபடுவதற்கு உடந்தையாக இருந்த இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். மூன்று நபர்களும் போக்சோ சட்டத்தில் கைது காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
க்ரைம்
தமிழ்நாடு
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion