மேலும் அறிய

Pocso On Sivashankar | சிவசங்கர் பாபாவை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு !

புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிவசங்கர் பாபாவை மேலும் ஒரு போக்சோ வழக்கில் கைது செய்துள்ளனர் சிபிசிஐடி போலீஸார்

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியின் தாளாளராக இருந்து வந்த சிவசங்கர் பாபா அந்த பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக புகார் எழுந்தது. இந்த வழக்கு கடந்த 13 ஆம் தேதி சென்னை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. முன்னாள் மாணவிகள் பலர் புகார் அளித்த நிலையில் சிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு டெல்லியில் கைது செய்யப்பட்டு செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Pocso On Sivashankar | சிவசங்கர் பாபாவை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு !
செங்கல்பட்டு மாவட்டம் கிளை சிறையில் அடைக்கப்பட்ட சிவசங்கர் பாபாவிற்கு திடீரென்று உடல்நிலை குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து சிவசங்கர் பாபா தீவிர சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனைத்தொடர்ந்து தீவிர சிகிச்சையில் இருந்து வந்த சிவசங்கர் பாபா சிகிச்சையில் இருந்து நலம் பெற்ற பிறகு சிவசங்கர் பாபாவை புழல் சிறையில் அடைத்தனர். இதனைத் தொடர்ந்து சிவசங்கர் பாபாவை 3 நாள் காவலில் எடுத்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் சிவசங்கர் பாபாவிடம் இருந்து பல திடுக்கிடும் வாக்குமூலங்களை சிபிசிஐடி போலீசார் பெற்றிருந்தனர்.

Pocso On Sivashankar | சிவசங்கர் பாபாவை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு !
 
இந்நிலையில் சிவசங்கர் பாபா மூன்று மாணவிகள் கொடுக்கப்பட்ட புகார்களை போக்சோ வழக்காக பதிவு செய்வதற்காக சட்ட வல்லுநர்களுடன் சிபிசிஐடி ஆலோசனை நடத்தினர். இதனைத் தொடர்ந்து சிவசங்கர் பாபா அளித்த வாக்குமூலம் மற்றும் சட்ட வல்லுனர்களின் பரிந்துரையின் அடிப்படையில் சிவசங்கர் பாபாவின் மீது கடந்த ஞாயிற்றுக்கிழமை மூன்றாவது போக்சோ பதிவு செய்யப்பட்டுள்ளது.

Pocso On Sivashankar | சிவசங்கர் பாபாவை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு !
இதுவரை 8 முன்னாள் மாணவிகள் புகார் அளித்துள்ள நிலையில், 3 போக்சோ வழக்கு போடப்பட்டு இருந்தாலும் சிவசங்கர் பாபா ஒரே போக்சோ வழக்கில் மட்டும் சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டிருந்த நிலையில்,  தற்போது அவர் இரண்டாவது போக்சோ வழக்கில் சென்னை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.  புழல் சிறையில் இருக்கும் சிவசங்கர் பாபாவை மீண்டும் சென்னை சிபிசிஐடி போலீசார் கைது செய்ததை தொடர்ந்து, கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபா செங்கல்பட்டு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் பட உள்ளார்.
 
கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபா செங்கல்பட்டு சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் இன்று சிபிசிஐடி போலீசார் ஆஜர்படுத்தினர்.


இதனை விசாரித்த நீதிபதி தமிழரசி சிவசங்கர் பாபாவை பதினைந்து நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்த சிவசங்கர் பாபா புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.


Pocso On Sivashankar | சிவசங்கர் பாபாவை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு !
 முன்னதாக பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதிகள் முன்னிலையில், மாணவிகள் குற்றச்சாட்டு குறித்து ரகசிய வாக்குமூலம் பெறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.இதனிடையே, முன்னதாக நடத்தப்பட்ட விசாரணையில் சிவசங்கர் பாபா பல ஆண்டுகளாக ஆபாசமாக சாட் செய்து, பயன்படுத்தி வந்த யாஹூ ஈமெயில் முடக்கப்பட்டது. சுஷில் ஹரி இன்டெர்நேஷனல் பள்ளி ஈமெயில் முகவரி மூலம் சிவசங்கர் பாபா மாணவிகளிடம் ஆபாசமாகப் பேசி வந்ததற்கான ஆதாரமும் கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

தலைப்பு செய்திகள்

மாணவிக்கு சாக்லேட் கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்த மளிகை கடை ஊழியர்
மாணவிக்கு சாக்லேட் கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்த மளிகை கடை ஊழியர்
"ஸ்வீட் வாங்கித் தர்றேன் வா..." - 8 வயது சிறுமியிடம் செக்யூரிட்டி சில்மிஷம்.. கம்பி எண்ணும் நிலை
திருவிடைமருதூரில் 2வது திருட்டு சம்பவம்... 40 பவுன் நகைகள் மாயம்: தொடர் திருட்டால் மக்கள் அச்சம்
திருவிடைமருதூரில் 2வது திருட்டு சம்பவம்... 40 பவுன் நகைகள் மாயம்: தொடர் திருட்டால் மக்கள் அச்சம்
தஞ்சை பெரியகோவில் முன்பு யாசகர் கத்தியால் குத்திக்கொலை: மற்றொரு யாசகர் கைது
தஞ்சை பெரியகோவில் முன்பு யாசகர் கத்தியால் குத்திக்கொலை: மற்றொரு யாசகர் கைது

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
Netanyahu Fail in Polls: பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
Gold and Silver Rate Aug.19th: காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Araghchi Vs Trump: “பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
“பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
Skoda Comeback Cars: ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Embed widget