Crime: ஆசிரியருக்கு 101 முறை கத்திக்குத்து... 30 ஆண்டுகால பகையை மனதில் வைத்து கொடூர கொலை
ஆசிரியர் மரியா, உவெண்ட்ஸை மரியாதைக்குறைவாக பேசி அவமானப்படுத்தி இருப்பதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த உவெண்ட்ஸ் பகையை மனதில் வைத்திருக்கிறார்.
பெல்ஜியம் நாடு ஆண்ட்வெர்ப் பகுதியைச் சேர்ந்த ஆசிரியர் மரியா வெர்லிண்டன் கடந்த 2020-ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். கொடூரமாக கத்தியில் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்த இந்த சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
மரியாவின் உடலை கைப்பற்றிய காவல்துறையினர், பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அப்போது, அவரது உடலில் 101 முறை குத்தி இருப்பது தெரிய வந்தது. அவரை கொலை செய்தது யார் என கண்டுபிடிக்க காவல் துறையினர் தீவிர விசாரணை செய்து வந்தனர்.
இந்நிலையில், கொலை நடந்து 16 மாதங்களுக்கு பிறகு இந்த வழக்கில் துப்பு கிடைத்திருக்கிறது. அதன் அடிப்படையில், தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. ஆசிரியர் மரியாவை கொலை செய்தது அவரது முன்னாள் மாணவர் என்று காவல் துறையினர் கண்டுபிடித்தனர்.
37 வயதான கண்டென் உவெண்ட்ஸ் என்பவர் தனது ஆரம்ப பள்ளி காலத்தில் ஆசிரியர் மரியாவிடம் பயின்றிருக்கிறார். அப்போது உவெண்ட்ஸ் பற்றி ஆசிரியர் மரியா சில கருத்துகளை தெரிவித்திருப்பார் என தெரிகிறது. அப்போது மரியா உவெண்ட்ஸை மரியாதைக்குறைவாக பேசி அவமானப்படுத்தி இருப்பதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த உவெண்ட்ஸ் பகையை மனதில் வைத்திருக்கிறார்.
கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு பிறகு தன்னை அவமானப்படுத்திய ஆசிரியரை தேடிச்சென்று 101 முறை குத்தி கொடூரமாக கொலை செய்திருப்பது தெரிய வந்துள்ளது. சந்தேகத்தின்பேரில் அவரை கைது செய்த காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டதில் உவெண்ட்ஸ் வாக்குமூலம் அளித்திருக்கிறார். தனது டி.என்.ஏ மாதிரியை அளித்திருந்ததால், காவல்துறையினர் கண்டுபிடித்துவிடுவார்கள் என்பதை உணர்ந்து அவரே தனது குற்றத்தை ஒப்புக்கொண்டிருக்கிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மேலும் படிக்க:
#JUSTIN | அஜித் நடிக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியானது
— ABP Nadu (@abpnadu) March 18, 2022
விக்னேஷ் சிவன் இந்த படத்தை இயக்குகிறார், அனிருத் இசை அமைக்கிறார்
இந்த ஆண்டின் இறுதியில் படப்பிடிப்பு தொடங்கும் எனவும், அடுத்தாண்டு படம் வெளியாகும் எனவும் தயாரிப்பு நிறுவனம் தகவல்#AK62 #AjithKumar #Ajith pic.twitter.com/0SbRQhnxRX
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்