Hyderabad : ‛கொலை.. கொலை...’ போலீசை வரவழைத்து அலர்ட் செக் செய்த இளைஞர் கைது!
ஹைதராபாத்தில் போலீசாருக்கு அழைப்பு விடுத்து கொலை நடந்ததாக பொய்யான தகவல் அளித்து காமெடி செய்த இளைஞரை, போலீசார் கைது சிறையில் அடைத்தனர்.
தெலுங்கானாவின் ஹைதராபாத் நகரைச் சேர்ந்தவர் பனோத் லாலு. இவருக்கு வயது 36. பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள நந்தி நகரில் வசித்து வருகிறார். இந்த நிலையில், இவர் கடந்த 17-ந் தேதி இரவு 100 என்ற எண்ணுக்கு அழைப்பு விடுத்துள்ளார். காவல்துறையின் கட்டுப்பாட்டு அறைக்கு அழைப்பு விடுத்த பனோத் லாலு, ‘எனது பெற்றோரை எனது அண்ணன் கொலை செய்துவிட்டார்’ என்று பதற்றத்துடன் கூறியுள்ளார்.
இதனால், காவல் கட்டுப்பாட்டு அறையினர் அந்த பகுதியில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு 7 நிமிடங்களில் காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் உள்பட காவல்துறையினர் விரைந்து சென்றனர். முழு காவல்துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொலையான சடலங்களை தேடினர். ஆனால், அந்த பகுதியில் அசம்பாவிதம் நடைபெற்றதற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை.
இதையடுத்து, பனோத் லாலுவிடம் போலீசார் விசாரித்தனர். விசாரணையில் அவர் முன்னுக்கு பின் முரணான தகவல் அளித்தார். போலீசார் அவரிடம் தீவிரமாக கேள்வி எழுப்பியதை அடுத்து, தான் வேடிக்கைக்காகதான் அழைப்பு விடுத்தாகவும், இதுபோன்று அசம்பாவித சம்பவங்கள் ஏற்பட்டால் போலீசார் எவ்வாறு தயாராக இருக்கின்றனர் என்று சோதிப்பதற்காகவும்தான் அழைப்பு விடுத்தாகவும் கூறியுள்ளார். இதனால், கடுப்பான போலீசார் அவரை அப்படியே கைது செய்து காவல் நிலையத்திற்குஅழைத்துச் சென்றனர்.
நீதிமன்றத்தின் முன்பு ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு நீதிபதிகள், போலீசாரின் நேரத்தை வீணடித்ததற்காக மனோத்லாலுவிற்கு மூன்று நாட்கள் சிறைத்தண்டனை விதித்தனர். கொலை நடைபெற்றதாக மனோத்லாலு ஏற்படுத்திய வதந்தியால், சிறிது நேரம் போலீசார் பரபரப்புக்குள்ளாகினர் என்பது குறிப்பிடத்தக்கது. மன உளைச்சலுக்கு மத்தியில் பணியாற்றும் காவல்துறையினருக்கு இதுபோன்று தேவையற்ற இன்னல்களை ஏற்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், ஓய்வு பெற்ற காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும் படிக்க : Watch Video: ‛மூக்கு மேல ராஜா’ சீக்காவுக்கு பிறந்தநாள்... டூப் சீக்காவின் வாழ்த்து வீடியோ!
மேலும் படிக்க : தொப்புள்கொடியுடன் பச்சிளங்குழந்தை... இரவு முழுவதும் பாதுகாத்த நாய்க்குட்டிகளும், தாய் நாயும்!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்