ஹைதராபாத் பப்பில் ஆபாச நடனம்: 40 பெண்கள் உட்பட 140 பேர் கைது; நடந்தது என்ன?
வாடிக்கையாளர்களைக் கவரும் நோக்கத்தில் பெண்களை வைத்து ஆபாச நடனம் நிகழ்வு நடத்திய பப்புக்கு சீல் வைக்கப்பட்டது.
காவல்துறையினர் சோதனை:
ஹைதராபாத்தில் உள்ள பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள பப்பில், சனிக்கிழமை இரவு, காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ஆபாச நடன நிகழ்ச்சிகளுக்காக 40 பெண்கள் உட்பட 140 பேர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து, பப்புக்கு போலீசார் சீல் வைத்தனர்.
வாடிக்கையாளர்களைக் கவரும் வகையிலும், லாபத்தை அதிகரிக்கும் வகையிலும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பெண்களை ஆபாச நடனம் ஆடுவதற்கு இந்த பப் பணியில் அமர்த்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது “ உதவி ஆணையர் (ஏசிபி) வெங்கட் ரமணா தலைமையிலான காவல்துறைக் குழு, நகரில் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எதிராக பப்பில் சோதனை நடத்தியதாக தெரிவித்தனர்.
140 பேர் கைது :
” நேற்று இரவு மதுபான விடுதியில் சோதனை நடத்தியதில், சட்டவிரோத செயல்களுக்காக 100 ஆண்கள் மற்றும் 40 பெண்களை கைது செய்துள்ளோம். மதுபான விடுதிக்கு சீல் வைத்துள்ளோம்," என்று காவல் உதவி ஆணையர் (ACP) வெங்கட் ரமணா தெரிவித்தார்.
Police raided TOS Pub in #BanjaraHills, arresting 140 individuals, including 42 women, for inappropriate dancing and alleged obscene acts. Management, cashier, and DJ were also detained. Investigations continue as authorities look into the illegal activities. #Hyderabad pic.twitter.com/ixRiH6KNeY
— Neelima Eaty (@NeelimaEaty) October 19, 2024
"கைது செய்யப்பட்டவர்களின் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, மேலும் பதிவு செய்யப்பட்டவர்களில் பப் உரிமையாளர்கள், பவுன்சர்கள், DJ ஆபரேட்டர்கள் மற்றும் பலர் அடங்குவர்" என காவல்துறை தெரிவித்துள்ளது.
அமலாக்கத்துறை இணை ஆணையர் முகமது குரேஷியின் மேற்பார்வையில் நடத்தப்பட்ட சோதனையில், சிலர் போதைப்பொருட்கள் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில், மதுபான விடுதியில் கைது செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.