பிரபல பைவ் ஸ்டார் ஹோட்டல் ஊழியரிடம் மோசடி..! நூதன முறையில் 2.5 லட்சம் பணத்தை அபேஸ் செய்த திருடன்..!
பிரபல பைவ் ஸ்டார் ஹோட்டலின் நிர்வாகியை மர்மநபர் ஒருவர் நூதன முறையில் ஏமாற்றி ரூபாய் 2.5 லட்சம் பணத்தை திருடியுள்ளான்.
மும்பையின் பிரபல ஓட்டலான லீலா பேலஸ் அண்ட் ரிசார்ட் என்ற ஹோட்டலில் செயலாளராகப் பணிபுரியும் 53 வயதுப் பெண்மணியை, அவரது முதலாளியும் ஹோட்டலின் தலைமைச் செயல் அதிகாரியுமான அனுராக் பட்நாகர் போல் ஆள்மாறாட்டம் செய்து ₹2.5 லட்சம் ரூபாய் பணத்தை மர்ம நபர் மோசடி செய்துள்ளார்.
காவல்துறையின் அறிக்கைப்படி, குற்றம் சாட்டப்பட்டவர் முதலில் அந்தப் பெண்ணிடம் அமேசான் இ வவுச்சர் கிஃப்ட் கார்டுகளை வாங்கச் சொல்லியிருக்கிறார். தான் அனுராக் போல் காட்டிக்கொண்டு, அடுத்த நாள் பணத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என்று கூறியிருக்கிறார்.
மும்பையின் அந்தேரி கிழக்குப் பகுதியில் வசிப்பவர், 53 வயதான சரிதா ரோஜாரியோ. இவர் மும்பையின் பிரபல ஓட்டலான லீலா பேலஸ் அண்ட் ரிசார்ட் என்ற ஹோட்டலில் செயலாளராகப் பணிபுரிகிறார். சரோஜாவிற்கு கடந்த திங்களன்று இரவு 9 மணியளவில் தெரியாத எண்ணிலிருந்து முதல் வாட்ஸ்அப் செய்தி வந்துள்ளது.
அந்த வாட்சப்பில், ”மாலை வணக்கம்! சரிதா.” என செய்தி இருந்துள்ளது. அதில் அவருடைய ஃப்ரோபைல் படத்தைச் சரிபார்த்தபோது, அது சிஓஓ அனுராக் பட்நாகரின் படம் எனத் தெரியவந்துள்ளது. ஒரு முக்கியமான மீட்டிங்கில் சிக்கிக் கொண்டதாலும், கிஃப்ட் கார்டுகளை வாங்கும் அவரது முக்கியமான வேலை நிலுவையில் இருந்ததாலும், அனுராக் தன்னிடம் உதவி கேட்பதாக சரிதா நம்பியிருக்கிறார்.
முதல் தகவல் அறிக்கை (எப்ஐஆர்) பதிவு செய்யப்பட்டுள்ள அந்தேரி கிழக்கில் உள்ள எம்ஐடிசி காவல் நிலையத்தைச் சேர்ந்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ” மோசடி நபர் சரிதாவிடம் தலா ரூபாய் 10,000 மதிப்புள்ள பத்து கிஃப்ட் கார்டுகளை வாங்கச் சொல்லியிருக்கிறார். ரொஜாரியோ பத்து கிஃப்ட் கார்டுகளை வாங்கி மொபைல் எண்ணில் இணைப்பை அனுப்பினார். பின்னர் மேலும் பதினைந்து பரிசு அட்டைகளை வாங்கும்படி அவரிடம் அந்த நபர் கேட்டுள்ளார்.
சில பரிசு அட்டைகளை வாங்குவதில் சிக்கல் இருந்ததால், இரவு முழுவதும் ரோஜாரியோ விழித்திருந்திருக்கிறார். ஆனால் எப்படியோ சுமார் 23 கிஃப்ட் கார்டுகளை வாங்கியிருக்கிறார், ஆனால் கடைசி இரண்டை வாங்குவதில் சிக்கலை எதிர்கொண்டிருக்கிறார். மறுநாள் காலை, 9 மணியளவில் அவர் அலுவலகத்தை அடைந்ததும், மதியம் அவர் மீதமுள்ள இரண்டு பரிசு கிப்ட் கார்டுகளை வாங்கியிருக்கிறார், தனது பாஸ் அலுவலகத்திற்குச் சென்று, அனைத்து பரிசு அட்டைகளையும் வாங்கியதாக பட்நாகரிடம் தெரிவித்திருக்கிறார். இருப்பினும், அவர் சரிதாவிடம் தான் அவ்வாறு எதுவும் கேட்கவில்லை என்று மறுத்திருக்கிறார் ” என்று போலீஸ் அதிகாரி கூறினார்.
"உடனடியாக, ரோஜாரியோ ஏதோ தவறாக இருப்பதை உணர்ந்தார், மேலும் தான் மோசடி பேர்வழியால் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்பதை உணர்ந்தார், மேலும் அவரது குடும்ப உறுப்பினர்களுடன் நடந்த உரையாடலுக்குப் பிறகு அந்தேரி கிழக்கில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார்" என்று போலீஸ் அதிகாரி மேலும் கூறினார்.
போலீசார் ஆள்மாறாட்டம் செய்தல், ஏமாற்றுதல் மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
“வாட்சப் புகைப்படத்தின் காரணமாக அவர் உண்மையான பாஸ் என்று நான் நினைத்தேன். தெரியாத எண்களுக்கு பதிலளிக்க நான் இப்போது பயப்படுகிறேன், ”என்று ரோஜாரியோ கூறியுள்ளார்.
இந்த மோசடியில் ரொஜாரியோ ரூபாய் 2.5 லட்சத்தை இழந்துள்ளதாகவும், தெரியாத எண்களுடன் சாட் செய்யும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், குறிப்பாக பணம் கேட்கும் போது உண்மையான நபரிடம் அதை சரிபார்க்க வேண்டும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
இதுகுறித்துகாவல் நிலையத்தின் மூத்த காவல் ஆய்வாளர் சதீஷ் கெய்க்வாட் கூறுகையில், நாங்கள் தொடர்ந்து விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறோம்.”கிஃப்ட் கார்டுகள் எப்படி பணமாக்கப்பட்டன என்பதையும், குற்றம் சாட்டப்பட்டவர்களைக் கண்டுபிடிக்க பரிசு அட்டைகள் மூலம் ஆன்லைனில் ஏதேனும் பொருட்கள் வாங்கப்பட்டிருக்கிறதா என்பதையும் கண்டறிய முயற்சிக்கிறோம்” என்று கூறினார்.