மேலும் அறிய

சூளகிரியில் இரு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: 2 பேர் உயிரிழப்பு!

சூளகிரியில் கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 2 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த சூளகிரி பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சினிமாவில் சித்தரிப்பதைப் போன்று  விபத்து நடைப்பெற்றது.  இந்த கோர விபத்தில் 2 நபர்கள் உயிரிழப்பு . கர்நாடக மாநிலம் பெங்களூரு வயாலிகாவல் பகுதியை சேர்ந்த சத்யபிரசாத் மகன் சுமந்த் வயது ( 30). இவர், தனியார் தொழிற் சாலையில்   ஊழியராக பணியாற்றி வருகின்றார். காலையில் பெங்களூருவில் இருந்து கிருஷ்ணகிரிக்கு தனது நண்பரை பார்க்க காரில் வந்தார். 

அப்போது சூளகிரி தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் பகுதியில் சென்ற போது கார் திடீரென ஒட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து  ஓடியது. சாலையில் இருந்த தடுப்புச்சுவரை இடித்துக் கொண்டு சென்ற கார், சாலையில் மற்றொரு புறத்துக்குள் நுழைந்து  சாலையின் நடுவே ஓடியது 

சூளகிரியில் இரு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: 2 பேர் உயிரிழப்பு!

அந்த வழியாக பெங்களூரை நோக்கி சென்ற காரும், சுமந்த் வந்த காரும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டன . இதில் 2 கார்களும் தூக்கி வீசப்பட்டதுடன் அப்பளம் போல் நொறுங்கியது. கண் இமைக்கும் நேரத்தில் இந்த பயங்கர விபத்து நடைப்பெற்றது.
இதில் சுமந்த், எதிரே வந்த காரில் இருந்தவரும் சம்பவ இடத்திலேயே பலியானார். தகவல் அறிந்த சூளகிரி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

விபத்தில் இறந்த 2 நபர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் சிக்கி நொறுங்கிய கார்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இந்த விபத்தால் கிருஷ்ணகிரி-ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் நீண்ட நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து சூளகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். 

சூளகிரியில் இரு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: 2 பேர் உயிரிழப்பு!

இந்த விசாரணையில், எதிரே வந்த காரில் இருந்தவர் திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது மகன் வின்சென்ட் கோபி வயது (34) என்பதும், இவர் பெங்களூரு கோரமங்களாவில் டாக்சி டிரைவராக வேலை செய்து வந்துள்ளார் என்பது தெரியவந்தது. இவர், சொந்த ஊருக்கு வந்து விட்டு பெங்களூரு சென்ற போது விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

விபத்தில் இறந்த சுமந்துக்கு திருமணம் ஆகி 2 ஆண்டுகள் ஆகிறது. நைய்னா வயது (24) என்ற மனைவி உள்ளார். பலியான வின்சென்ட் கோபிக்கு மரியா என்ற மனைவியும், செபின் வயது  (10), ஆல்ஸ்டின் வயது (6) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இந்த பயங்கர விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

என் குடும்பத்திலும் தற்கொலை - நீட் குறித்து சாய் பல்லவி! NEET Suicide | Sai Pallavi | NEET Exam

தலைப்பு செய்திகள்

காவல் நிலையத்தில் என்ன நடந்தது? அய்யா பரமசிவம் மரணத்திற்கு காரணம் யார்? கேள்வி கேட்கும் வேல்முருகன்
காவல் நிலையத்தில் என்ன நடந்தது? அய்யா பரமசிவம் மரணத்திற்கு காரணம் யார்? கேள்வி கேட்கும் வேல்முருகன்
நடுக்கடலில் துப்பாக்கிச்சூடு: ரத்த வெள்ளத்தில் மிதந்த தமிழக மீனவர்... ஆட்சியர் அலுவலகத்தில் மனைவி தரையில் புரண்டு கதறல்!
நடுக்கடலில் துப்பாக்கிச்சூடு: ரத்த வெள்ளத்தில் மிதந்த தமிழக மீனவர்... ஆட்சியர் அலுவலகத்தில் மனைவி தரையில் புரண்டு கதறல்!
பள்ளிவாசல் அருகே மதுக்கடையா? கொதித்தெழுந்த பெருந்தோட்டம் கிராம மக்கள்!
பள்ளிவாசல் அருகே மதுக்கடையா? கொதித்தெழுந்த பெருந்தோட்டம் கிராம மக்கள்!
போலீஸ் கண்முன்னே கொடூரம்! காஞ்சிபுரம் ஆடித் திருவிழாவில் கதற கதற 2 பேர் வெட்டிக்கொலை!
போலீஸ் கண்முன்னே கொடூரம்! காஞ்சிபுரம் ஆடித் திருவிழாவில் கதற கதற 2 பேர் வெட்டிக்கொலை!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
New Audi Q3: அசத்தல் லுக்கில் அதிரடி காட்ட வரும் ஆடி Q3 SUV- டிசைன், விலை, வசதிகள் விவரம்!
New Audi Q3: அசத்தல் லுக்கில் அதிரடி காட்ட வரும் ஆடி Q3 SUV- டிசைன், விலை, வசதிகள் விவரம்!
குப்பை அல்ல... வருமானம்! கைகளில் உருவாகும் தன்னம்பிக்கைப் பொருட்கள்... தூய்மை பணியாளர்களின் அட்டகாச முயற்சி
குப்பை அல்ல... வருமானம்! கைகளில் உருவாகும் தன்னம்பிக்கைப் பொருட்கள்... தூய்மை பணியாளர்களின் அட்டகாச முயற்சி
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
Free Health Insurance: : 1 பைசா செலவு இல்லை.! ரூ.5 லட்சம் இலவச மருத்துவக் காப்பீடு வாங்குவது எப்படி? ஆவணங்கள் என்னென்ன தேவை- லிஸ்ட் இதோ
1 பைசா செலவு இல்லை.! ரூ.5 லட்சம் இலவச மருத்துவக் காப்பீடு வாங்குவது எப்படி? ஆவணங்கள் என்னென்ன தேவை- லிஸ்ட் இதோ
18 Years of Kohli: விராட் கோலி எனும் பேரரசன்.. நாட்டிற்காக18 ஆண்டுகளை நிறைவு செய்த நம்பர் 18!
18 Years of Kohli: விராட் கோலி எனும் பேரரசன்.. நாட்டிற்காக18 ஆண்டுகளை நிறைவு செய்த நம்பர் 18!
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
Embed widget