மேலும் அறிய

கோவை | கொரோனாவால் பாதிக்கப்பட்ட தனியார் மருத்துவமனை ஆய்வக ஊழியர் தற்கொலை

கோவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மருத்துவமனை ஆய்வக ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா இரண்டாவது அலை காரணமாக தினசரி 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்று பலரும் வீடு திரும்பியும் வருகின்றனர். தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக கோவை மாவட்டத்தில் சென்னையை காட்டிலும் அதிகளவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. கோவை பீளமேட்டைச் சேர்ந்தவர் வெங்கட்சிவையா. அவருக்கு வயது 44. இவர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆய்வக ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், அவர் கடந்த சில தினங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தார். இதையடுத்து, அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர், மருத்துவமனையில் 5 நாட்கள் சிகிச்சை நிறைவடைந்த நிலையில் வீடு திரும்பியுள்ளார். கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால், அவர் கடந்த ஒரு வாரமாகவே மிகுந்த மனவேதனையுடன் காணப்பட்டு வந்தார்.


கோவை | கொரோனாவால் பாதிக்கப்பட்ட தனியார் மருத்துவமனை ஆய்வக ஊழியர் தற்கொலை

கடும் மன உளைச்சலுடன் காணப்பட்ட அவர் தனது வீட்டில் மொட்டை மாடிக்கு சென்று அங்கிருந்து கீழே குதித்தார். இதனால், படுகாயம் அடைந்த அவரை குடும்பத்தினர் மற்றும் அக்கம்பக்கத்தினர் உடனே மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். ஆனால், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலே  இறந்து விட்டதாக கூறியுள்ளனர். அவர் கீழே விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக, அவரது குடும்பத்தினரிடமும், அக்கம்பக்கத்தினரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொரோனா சிகிச்சை பெற்று வீடு திரும்பிய மருத்துவமனை ஊழியரே, தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களுக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல இடங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதியவர்கள் பலரும் மிகுந்த மன வலிமையுடன் மீண்டு போராடி மீண்டு வந்துள்ளனர். இந்த சூழலில், கொரோனாவால் மன உளைச்சலுடன் காணப்படுவதும், கொரோனா பாதித்துள்ளதால் மீண்டு வர முடியாது என்று கருதுவதும் மிகவும் தவறு என்றும், கொரோனாவில் இருந்து மீண்டு வர மன உறுதி மிகவும் அவசியம் என்றும் மருத்துவர்களும், உளவியல் நிபுணர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.

மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்க்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050

 

 

 

 

 

 

தலைப்பு செய்திகள்

"பணத்தை கொடு...வெளியே சொன்னா வெட்டுவோம்" – டீ கடையில் அரங்கேறிய திகில் சம்பவம்
"வாழ்க்கையை சீரழித்த குடி" பிரிந்து சென்ற மனைவியை அழைக்கச் சென்ற கணவனுக்கு நேர்ந்த சோகம்
"41 ஆபாச தளங்களில் சிறுமி வீடியோ" நீக்கலனா தளத்தையே முடக்குங்க !! நீதிமன்றம் அதிரடி உத்தரவு
இன்ஸ்டாகிராம் பழக்கம் !! ரகசிய வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் அத்துமீறல்
இன்ஸ்டாகிராம் பழக்கம் !! ரகசிய வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் அத்துமீறல்

வீடியோ

கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN By Election: 600 வாக்குச்சாவடிகள்.. மதுராந்தகம், தாராபுரத்தில் இன்று இடைத்தேர்தல்.. ஓட்டுப்போட ரெடியாகிய மக்கள்!
TN By Election: 600 வாக்குச்சாவடிகள்.. மதுராந்தகம், தாராபுரத்தில் இன்று இடைத்தேர்தல்.. ஓட்டுப்போட ரெடியாகிய மக்கள்!
TN Weather News: மதுராந்தகம், தாராபுரத்தில் கனமழை? இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
மதுராந்தகம், தாராபுரத்தில் கனமழை? இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
Rasi Palan Today (06.10.2026): தனுசுக்கு மகிழ்ச்சி.. மீனத்துக்கு சுபம்.. மற்ற ராசிக்காரர்களுக்கு இன்று நாள் எப்படி? - பலன்கள் இதோ!
Rasi Palan Today (06.10.2026): தனுசுக்கு மகிழ்ச்சி.. மீனத்துக்கு சுபம்.. மற்ற ராசிக்காரர்களுக்கு இன்று நாள் எப்படி? - பலன்கள் இதோ!
ABP Nadu Exclusive:
ABP Nadu Exclusive: "தவெக அரசுதான் தமிழ் உணர்வோடு செயல்படுகிறது.. கேட்காமலே பதவி.." புஷ்பவனம் குப்புசாமி ஏபிபி நாடுக்கு பிரத்யேக பேட்டி
"தொட்டு தொட்டுப் பேசும் சுல்தானா... இயல் இசைக்கு இனி நீதானா.." தவெக ஆட்சியில் புஷ்பவனம் குப்புசாமிக்கு முக்கிய பதவி!
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
GOLD LOAN : அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Embed widget