மேலும் அறிய
Madurai HC: வீட்டில் கஞ்சா செடி வளர்த்தவருக்கு நிபந்தனை ஜாமின் - உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
மனுதாரருக்கு எதிராக முந்தைய வழக்கு எதுவும் நிலுவையில் இல்லை. சிறையில் இருந்த காலத்தையும் கருத்தில் கொண்டு, நிபந்தனையுடன் ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்

மதுரைக் கிளை
ராமநாதபுரம் மாவட்டம், தனுஸ்கோடி பகுதியில் வீட்டில் கஞ்சா செடிகள் வளர்த்தவருக்கு நிபந்தனையுடன் ஜாமின் வழங்கி உயர்நீதிமன்ற கிளை உத்தரவு.
மாதத்தின் முதல் வேலை நாளில விசாரணை நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்து இட வேண்டும் என்ற நிபந்தனை யுடன் ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.
கஞ்சா விற்பனை:
தென்மண்டலத்திற்கு உட்பட்ட 10 மாவட்டங்கள் மற்றும் திருநெல்வேலி மாநகர் ஆகிய பகுதிகளில் கஞ்சா விற்பனை கஞ்சா கடத்தல் ஆகியவற்றை தடுப்பதற்கு தென்மண்டலத்தில் சிறப்பு காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர். சமீபத்தில் போதைக் காளான், கஞ்சா வைத்திருந்த வழக்கில், 3 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ஒரு லட்ச ரூபாய் அபராதமும் விதித்து மதுரை போதை பொருள் தடுப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இப்படி போதைப் பொருட்களுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம், தனுஸ்கோடி பகுதியில் வீட்டில் கஞ்சா செடிகள் வளர்த்தவருக்கு நிபந்தனையுடன் ஜாமின் வழங்கி உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம், தனுஸ்கோடி பகுதியை சேர்ந்த உமயச்சந்திரன் என்பவர் தனக்கு ஜாமின் வழங்க கோரி உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், நான் எனது வீட்டில் 450 கிராம் மற்றும் 600 கிராம் எடையுள்ள இரண்டு கஞ்சா செடிகளை வளர்த்து வந்தேன். இந்த தகவல் அறிந்த போலீசார் என் வீட்டில் சோதனை மேற்கொண்டு என்னை கைது செய்தனர். என்னை போலீசார் அக்டோபர் 12 ம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர். இனி மேல் இது போன்ற தவறுகளில் ஈடுபட மாட்டேன். எனக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

ஜாமின் மனு:
இந்த மனு நீதிபதி சிவஞானம் முன் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் , கஞ்சா செடிகள் வளர்த்து உள்ளார். இதற்கு முன் இது போன்ற வழக்கு இல்லை என வாதிட்டார். இதை தொடர்ந்து நீதிபதி உத்தரவில்,
மனுதாரருக்கு எதிராக முந்தைய வழக்கு எதுவும் நிலுவையில் இல்லை. சிறையில் இருந்த காலத்தையும் கருத்தில் கொண்டு, நிபந்தனையுடன் ஜாமின் வழங்கி உத்தரவிட்டார். மாதத்தின் முதல் வேலை நாளில விசாரணை நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்து இட வேண்டும் என்ற நிபந்தனை யுடன் ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.
மேலும் செய்திகள் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் ' - பாகிஸ்தான் கலைஞர்களுக்கு தடையா? இதுதான் உங்க தேச பக்தியா? - சரமாரியாக சாடிய உச்ச நீதிமன்றம்!
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் ' - Uttarkashi Tunnel Disaster: உத்தரகாசி சுரங்க விபத்து - மீட்பு பணியில் தினசரி எடுக்கப்பட்ட முயற்சிகளும், முடிவுகளும்
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement


470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk
தலைப்பு செய்திகள்
இந்தியா
லைப்ஸ்டைல்
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement