பக்கா ஸ்கெட்ச் போட்டு கடத்திய குட்கா; போலீசிடம் சிக்கியது தொக்கா!

போலீசில் கண்ணில் மண்ணைத்தூவி பக்க ஸ்கெட்ஜ் போட்டு கடத்திவரப்பட்ட குட்கா பொருட்கள், தொக்கா போலீசாரிடம் மாட்டியது.

FOLLOW US: 

அரகண்டநல்லூர் அருகே மினிவேனில் கடத்தப்பட்ட ரூ.12 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்கள் பறிமுதல் மூவர் கைது.

தமிழகத்தில் கொரோனா தொற்று இரண்டாவது அலை வீசுகிறது. இதனால் நாடெங்கும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் அத்தியாவசிய காரணங்களுக்கு மட்டுமே வெளியே வரவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ள நிலையில். ஊரடங்கு முடியும் வரை டாஸ்மாக் கடைகள் திறக்கப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகம் மட்டுமல்லாமல் புதுச்சேரியில் டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டது. விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா 2-வது அலை அதிதீவிரமாக பரவி வருகிறது. ஒவ்வொரு நாளும் சராசரியாக 400 முதல் 500 பேர் வரை பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதுபோல் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், உயிரிழக்கும் எண்ணிக்கையும் கடந்த இரண்டு நாட்களாக குறைந்து வருகின்றன, இந்த நிலையில் ஊரடங்கு காலத்தில் குட்கா மற்றும் பான்மசாலா போன்ற பொருட்களை அதிக விலைக்கு சில சமூக விரோதிகள் விற்பனை செய்து வருகின்றனர். பக்கா ஸ்கெட்ச் போட்டு கடத்திய குட்கா; போலீசிடம் சிக்கியது தொக்கா!

இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் பகுதியில் கடந்த சில நாட்களாக குட்கா பான் மசாலா போன்ற வற்றை எடுத்துவந்து மறை முகமாக ஊரடங்கு நேரத்தில் அனைத்து கடைகளுக்கும் விற்பனை செய்து வருவதாக காவல் துணை கண்காணிப்பாளர் ஹரி குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது, இதனடிப்படையில் மூன்று நாட்களாக தீவிர வாகன சோதனையில் போலீசாரை அமல்படுத்தி வாகன சோதனை நடத்தினர், இந்த நிலையில் பகல் நேரங்களில் வாகனங்களில் எடுத்துச் சென்றால் மாட்டிக் கொள்வோம் என்ற காரணத்தினால் இரவு நேரத்தில் கடத்தும் பணியில் குட்கா கும்பல் ஈடுபட்டது. பக்கா ஸ்கெட்ச் போட்டு கடத்திய குட்கா; போலீசிடம் சிக்கியது தொக்கா!

ஸ்கெட்ஜ் போட்டு போலீஸ் கண்ணில் மண்ணை தூவி கொண்டு செல்லலாம் என முடிவு செய்து திட்டத்தை துவக்கினர். இந்த நிலையில் தேவனூர் கூட்டு சாலையில் வாகன சோதனையில் காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவின் பேரில் துணை காவல் கண்காணிப்பாளர் ஹரிகுமார் தலைமையில் உதவி காவல் ஆய்வாளர் செல்வம் மற்றும் அவரது குழுவினர் அவ்வழியாக வந்த மினி வேனை சோதனை செய்வதற்காக நிறுத்த சொல்லியுள்ளனர் இருப்பினும் மினி வேன் டிரைவர் நிறுத்தாமல் சென்றுள்ளார். வேனை பின் தொடர்ந்த போலீசார், சேஸிங் செய்து மடக்கிப் பிடித்தனர் சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் மினி வேனை சோதனை செய்தனர். அப்பொழுது அதில் பெங்களூரில் இருந்து கடத்திவரப்பட்ட சுமார் இரண்டரை லட்சம் மதிப்புள்ள குட்கா மற்றும் பான் மசாலா அடங்கிய 51 சாக்கு மூட்டைகளில் கட்டப்பட்ட பண்டல்கள் இருப்பது தெரியவந்தது, இதையடுத்து போலீசார் வாகனத்தை பறிமுதல் செய்தனர். மேலும் கடத்தி வந்த சதீஷ், பாண்டியன், மணிபாலன் ஆகியோரை போலீசார் கைது செய்து காவல் நிலையத்தில் விசாரணை நடத்தினர். விசாரணையில் ஊரடங்கு காலத்தில் குட்கா மற்றும் பான்மசாலா போன்ற பொருட்களை அதிக விலைக்கு விற்பதற்காக இரவு நேரங்களில் கடத்தப்பட்டு இருசக்கர வாகனங்கள் மூலம் விநியோகிக்கவும் கடத்தி வந்ததையும் ஒப்புக்கொண்டனர். மினி வேனில் கடத்தப்பட்டகுட்கா மற்றும் பான் மசாலாவின் மதிப்பு சுமார் 12 லட்சம் ஆகும்.பக்கா ஸ்கெட்ச் போட்டு கடத்திய குட்கா; போலீசிடம் சிக்கியது தொக்கா!

Tags: lockdown crime vilupuram gutka pan masala

தொடர்புடைய செய்திகள்

ஆன்மிக பணிக்கு விருப்பம் தெரிவித்த மனைவி; காவல் நிலையம் முன் உயிரோடு கொளுத்த முயன்ற குடும்பம்

ஆன்மிக பணிக்கு விருப்பம் தெரிவித்த மனைவி; காவல் நிலையம் முன் உயிரோடு கொளுத்த முயன்ற குடும்பம்

மதனின் வங்கி கணக்கு முடக்கம் - ரூ.4 கோடி இருந்தது கண்டுபிடிப்பு

மதனின் வங்கி கணக்கு முடக்கம் - ரூ.4 கோடி இருந்தது கண்டுபிடிப்பு

Sivashankar Baba: சிவசங்கர் பாபாவை 5 நாள் காவலில் எடுக்க சிபிசிஐடி முடிவு

Sivashankar Baba: சிவசங்கர் பாபாவை 5 நாள் காவலில் எடுக்க சிபிசிஐடி முடிவு

PUBG Madhan Arrested: பப்ஜி மதன் கைது: போலீஸ் காலில் விழுந்து கதறினார்! கைது நடந்தது எப்படி?

PUBG Madhan Arrested: பப்ஜி மதன் கைது: போலீஸ் காலில் விழுந்து கதறினார்! கைது நடந்தது எப்படி?

PUBG Madhan: தலைமறைவு இன்றல்ல 2017 ல் இருந்தாம்.... கடன் மோசடி செய்த மதனின் பகீர் பின்னணி!

PUBG Madhan: தலைமறைவு இன்றல்ல 2017 ல் இருந்தாம்.... கடன் மோசடி செய்த மதனின் பகீர் பின்னணி!

டாப் நியூஸ்

BREAKING: தமிழ்நாடு திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்

BREAKING: தமிழ்நாடு திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்

NEET Exam 2021: நீட் தேர்வை நடத்த திட்டம்? - விரைவில் அறிவிப்பு

NEET Exam 2021: நீட் தேர்வை நடத்த திட்டம்? - விரைவில் அறிவிப்பு

WTC Final Preview : நிறைவடைந்த கவுண்டவுன் - இன்று தொடங்கும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் யுத்தம்!

WTC Final Preview : நிறைவடைந்த கவுண்டவுன் - இன்று தொடங்கும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் யுத்தம்!

‛எனக்காடா எண்ட் கார்டு போடுறீங்க... எனக்கு எண்டே இல்லடா...’ வாராரு வாராரு வடிவேலு வாராரு...!

‛எனக்காடா எண்ட் கார்டு போடுறீங்க... எனக்கு எண்டே இல்லடா...’ வாராரு வாராரு வடிவேலு வாராரு...!