Crime : ரேகையே மாத்துவீங்களா? அடேங்கப்பா.. ரயில்வே தேர்வில் நூதனமான முறையில் ஆள்மாறாட்டம்..
Gujarat: ரயில்வேயில் D கேட்டகரி பணிக்கான தேர்வில் நூதனமான முறையில் ஆள்மாறாட்டம் செய்த பிகாரைச் சேர்ந்த இரண்டு நபர்களை குஜராத் போலீசார் கைது செய்துள்ளனர்.
ரயில்வேயில் D கேட்டகரி பணிக்கான தேர்வில் நூதனமான முறையில் ஆள்மாறாட்டம் செய்த பிகாரைச் சேர்ந்த இரண்டு நபர்களை குஜராத் போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆகஸ்ட் 22 அன்று குஜராத்தின் வதோதரா நகரில் நடத்தப்பட்ட ரயில்வே பணிக்கான தகுதித் தேர்வு நடைபெற்றது. தேர்வுக்கு முன்னதாக பயோமெட்ரிக் சரிபார்ப்பின் போது தேர்வுக் கண்காணிப்பாளர், தேர்வு எழுத வந்த ஒருவர் கட்டை விரலில் சானிடைசரைத் தெளித்துள்ளார். அப்போது அவரது கையில் ஒட்டப்பட்டிருந்த, அவரது நண்பரின் கட்டைவிரல் தோல் உறிந்து விழுந்ததுள்ளது. இந்த சம்பவம் குறித்து தேர்வு கண்காணிப்பு அதிகாரி இன்று (வியாழக்கிழமை) கூறியதாவது,
பீகாரில் உள்ள முங்கர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மணீஷ் குமார். இவர் தான் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த நபர். இவரது நண்பர் ராஜ்யகுரு குப்தா. இதில் ராஜ்யகுரு குப்தா தனது நண்பருக்கு உதவும் நோக்கில் ஆள்மாறட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அதுவும் மிகவும் நூதனமாக மணீஷ் குமாரின் கட்டை விரலின் தோலினை ராஜ்யகுரு குப்தா தனது கட்டை விரலில் ஒட்டிக்கொண்டு வந்துள்ளார். பயோமெட்ரிக்கில் பரிசோதிக்கும்போது பலமுறை முயற்சி செய்தும், கை விரல் ரேகை சரியாக பதிவாகவில்லை. மேலும் ராஜ்யகுரு குப்தா தனது கையை தனது பேண்ட் பாக்கெட்டில் வைத்து மறைத்துக் கொண்டே இருந்தார். இதனால் அவர் மீது சந்தேகம் எழுந்தது. அவரது கையில் சானிடைசர் தெளித்து பார்க்கும் போது, கையில் ஒட்டப்பட்டிருந்த தோல் விழுந்தது. உடனே காவலர்களை வரவழைத்து அவரை விசாரிக்கையில் அவர் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டத்தினை ஒப்புக்கொண்டுவிட்டார். மேலும், தான் ராஜ்யகுரு குப்தா. மணீஷ் குமார் தனது நண்பர் என்றும் தெரிவித்ததாக கூறினார்.
இந்த சம்பவம் தொடர்பாக ஏமாற்றுதல் மற்றும் மோசடி செய்ததற்காக வதோதரா போலீஸார் புதன்கிழமை இருவரையும் கைது செய்ததாக கூடுதல் காவல் ஆணையர் எஸ்.எம்.வரோதாரியா தெரிவித்தார். மேலும், இருவரும் 20 வயதுக்கு இடைப்பட்டவர்கள் மற்றும் இருவரும் 12 ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், என்றார். வதோதராவின் லக்ஷ்மிபுரா காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட எஃப்ஐஆர் படி, ரயில்வேயால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு தனியார் நிறுவனம், ஆகஸ்ட் 22 அன்று, இங்குள்ள லக்ஷ்மிபுரா பகுதியில் நடைபெற்ற ரயில்வே 'டி' குரூப் காலியிடங்களுக்கான தகுதித் தேர்வை ஏற்பாடு செய்தது. எந்தவிதமான மோசடியையும் நடக்காமல் தடுக்க, அனைத்து விண்ணப்பதாரர்களும் தங்கள் கட்டைவிரல் பதிவை, விண்ணப்பத்தின்போது கொடுக்க வேண்டும், அது தேர்வுக்கு முன் பயோமெட்ரிக் சாதனம் மூலம் அவர்களின் ஆதார் தரவுகளுடன் சரிபார்க்கப்படும்.
இதில், பலமுறை முயற்சித்த போதிலும், மணிஷ் குமார் என்ற தேர்வு எழுத வந்தவரின் கட்டைவிரல் தோற்றத்தை பதிவு செய்யும் போது சாதனம் ரெட் அலார்ட் காட்டிக்கொண்டே இருந்துள்ளது. மேலும் பேன்ட் பாக்கெட்டுக்குள் இடது கையை வைத்து எதையோ மறைக்க முயன்றதைக் கண்ட பரீட்சை மேற்பார்வையாளருக்கு சந்தேகம் ஏற்பட்டது. "மேற்பார்வையாளர் தனது இடது கட்டை விரலில் சானிடைசரை தெளித்தபோது, அதில் ஒட்டப்பட்டிருந்த தோல் விழுந்துவிட்டது" என்று அந்த அதிகாரி கூறினார். மோசடி பற்றி அறிந்ததும், ஏஜென்சி காவல்துறையை அழைத்து, இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 465 (போலி), 419 (ஆள்மாறாட்டம் மூலம் ஏமாற்றுதல்) மற்றும் 120-பி (குற்றச் சதி) ஆகியவற்றின் கீழ் புகார் அளித்தது. பிடிபட்ட நபர் போலீசாரிடம் தனது உண்மையான பெயர் ராஜ்யகுரு குப்தா என்றும், தனது நண்பர் மணீஷ் குமார் போல் காட்டி தேர்வெழுத வந்ததாகவும் கூறினார். குப்தா படிப்பில் சிறந்து விளங்கியதால், ரயில்வே வேலைக்கு விண்ணப்பித்திருந்த மணீஷ் குமார், போலி அடையாளத்தைப் பயன்படுத்தி குப்தாவை தகுதித் தேர்வுக்கு அனுப்பியதால் வந்ததாக போலீஸ் அதிகாரியிடம் கூறியதாக கூறப்படுகிறது.
குஜராத்தில் உள்ள ரயில்வே வேலையைப் பெறுவதற்கான தீவிர முயற்சியில், ஒரு வேட்பாளர் சூடான சட்டியைப் பயன்படுத்தி தனது கட்டைவிரல் தோலைக் கழற்றி, தனது நண்பரின் கட்டைவிரலில் ஒட்டினார், பிந்தையவர் பயோமெட்ரிக் சரிபார்ப்பை முடித்துவிட்டு அவருக்குப் பதிலாக ஆட்சேர்ப்புத் தேர்வில் தோன்றுவார் என்ற நம்பிக்கையுடன். ஆனால்,