மேலும் அறிய
Advertisement
கோகுல்ராஜ் கொலை வழக்கில், யுவராஜ் உள்ளிட்டோர் ரத்து செய்யக்கோரிய மனு.. இறுதி விசாரணைக்கு ஒத்திவைப்பு !
தண்டனையை ரத்து செய்யக் கோரி யுவராஜ் உள்ளிட்ட 10 நபர்கள் தாக்கல் செய்த வழக்கு இறுதி விசாரணைக்காக ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.
பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் கொலை வழக்கில் கீழமை நீதிமன்றம் வழங்கிய தண்டனையை ரத்து செய்யக் கோரி யுவராஜ் உள்ளிட்ட 10 நபர்கள் தாக்கல் செய்த வழக்கு. இறுதி விசாரணைக்காக ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.
கோகுல்ராஜ் கொலை வழக்கில் கீழமை நீதிமன்றம் வழங்கிய தண்டனையை ரத்து செய்யக் கோரி யுவராஜ் உள்ளிட்ட 10 நபர்கள் தாக்கல் செய்த வழக்கு இறுதி விசாரணைக்காக ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.
— Arunchinna (@iamarunchinna) July 6, 2022
further reports to follow @abpnadu#Madurai | #case | #gogulraj | #yuvaraj | #jail | pic.twitter.com/oqWXdugpEH
கோகுல்ராஜ் கொலை வழக்கில் மதுரை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் வழங்கிய உத்தரவை ரத்து செய்யக்கோரி யுவராஜ், அருண், கிரிதர், ரஞ்சித் உள்ளிட்ட 10 பேரும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுக்களை தாக்கல் செய்தனர். மனுவில், "இந்த வழக்கில் நோக்கம், கண்காணிப்பு கேமரா காட்சிகள், தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி, தலை மறைவாக இருந்தது ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு கீழமை நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.
இந்த வழக்கில் சாட்சிகளாக ஏற்றுக் கொள்ளப்பட்டவர்கள் பெரும்பாலும் அதிகாரிகளும், நிபுணர்களுமே. இந்த வழக்கில் பல ஆண்டுகளாக சிறையில் உள்ள நிலையில் இவற்றைக் கருத்தில் கொண்டு, கீழமை நீதிமன்றம் வழங்கிய தண்டனையை ரத்து செய்தும், அதுவரை ஜாமீன் வழங்கியும் உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் ஹேமலதா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இந்த வழக்கை இறுதி விசாரணைக்காக ஜூலை 21ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
உடல்நலம்
பொழுதுபோக்கு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion