சிறுமி பாலியல் தொல்லை விவகாரம்: இயக்குனர் சங்கர் மருமகன் உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்கள் முன்ஜாமீன் பெற முயற்சி!
தலைமறைவாக இருந்து வரும் 5 பேரையும் கைது செய்ய போலீசார் தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
புதுச்சேரியில் கிரிக்கெட் பயிற்சியின் போது மாணவிக்கு பாலியல் சீண்டலில் ஈடுபட்ட கிரிக்கெட் வீரர், இயக்குனர் சங்கரின் மருமகன் ரோஹிட்(Rohith Damodaran) உள்ளிட்ட 5 பேர் மீது போஸ்கோ சட்டதின் கீழ் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள ஐந்து பேரையும் தேடி வருகின்றனர். புதுச்சேரி முத்திரையர் பாளையம் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் கிரிக்கெட் பயிற்சி மையம் உள்ளது. இங்கு வீரர், வீராங்கனைகள் பயிற்சி பெற்று வருகின்றனர். சோரப்பட்டை சேர்ந்த தாமரைக்கண்ணன் பயிற்சியாளராக உள்ளார். இவர், கிரிக்கெட் பயிற்சிக்கு வந்த 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக கூறப்படுகிறது.
அப்போது பயிற்சியில் ஈடுபட்ட 17 வயது மாணவியிடம் கிரிக்கெட் வீரர் தாமரைக் கண்ணன் பாலியல் சீண்டலில் ஈடுப்பட்டுள்ளார். இது குறித்து அச்சிறுமி கிரிக்கெட் சங்க நிர்வாகிகளிடம் புகார் தெரிவித்துள்ளார். இதற்கு கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் பயிற்சி அளிப்பவரை அனுசரித்து செல்லுமாறு கூறியுள்ளனர் .மேலும் சிறுமியின் புகாரை கண்டு கொள்ளவில்லை இந்த நிலையில் அச்சிறுமி புதுச்சேரி குழந்தைகள் நல குழுவிடம் புகார் தெரிவித்துள்ளார்.
இதை தொடர்ந்து சிறுமிக்கு பயிற்சியளித்த கிரிக்கெட் வீரர் தாமரை கண்ணன் மீது பாலியல் சீண்டல் பிரிவின் கீழும் மற்றொரு கிரிக்கெட் வீரர் ஜெயக்குமார், அப்போதைய கிரிக்கெட் கிளப் தலைவர் தாமோதரன், செயலாளர் வெங்கட், கிரிக்கெட் கிளப் கேப்டனும் திரைப்பட இயக்குனர் சங்கரின் மருமகனுமான ரோஹித் உள்ளிட்ட 5 பேர் மீது தவறுக்கு உடந்தையாக இருந்ததாக போக்சோ பிரிவின் கீழ் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து தலைமறைவாக உள்ள 5 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் தலைமறைவாக இருந்து வரும் 5 பேரையும் கைது செய்ய போலீசார் தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். கைதாகாமல் இருக்கும் வகையில் 5 பேரும் முன் ஜாமீன் பெற முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால் அதற்கு முன் அவர்களை கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்