தட்டிக்கேட்ட சிறுமிகள்! தவிக்க விட்ட சிறுவர்கள்! – சுத்துப்போட்ட போலீஸ் – என்ன நடந்தது?
ஒசூர் பகுதியை சேர்ந்த 5 சிறுவர்கள் அப்பகுதியில் சுற்றித்திரிவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

ஓசூர் அருகே 9 மற்றும் 13 வயதுடைய இரண்டு சகோதரிகளை அவர்களது வீட்டின் மொட்டை மாடியில் பாலியல் வன்கொடுமை செய்ததாக 13 முதல் 15 வயதுக்குட்பட்ட ஐந்து சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர்.
ஒசூர் பகுதியை சேர்ந்த 5 சிறுவர்கள் அப்பகுதியில் சுற்றித்திரிவதை வழக்கமாக கொண்டுள்ளனர். கட்டுமானத்தின் போது விடுபட்ட பொருட்களை எடுத்து விற்பதை வாடிக்கையாக வைத்திருந்துள்ளனர்.
இந்நிலையில் வழக்கம்போல் சனிக்கிழமை மதியம் இந்த சிறுவர்கள் 5 பேரும் பக்கத்தில் உள்ள கட்டிடத்தின் மாடிப்பகுதிக்கு சென்றுள்ளனர். அப்போது அங்கிருந்த 4 வது மற்றும் 5வது படிக்கும் இரண்டு சிறுமிகள் சிறுவர்களை தட்டிக்கேட்டுள்ளனர்.
அப்போது சிறுவர்கள் ஒரு சிறுமியின் வாயில் துணியை திணித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து 13 வயது சகோதரி சிறுவர்களைத் தடுக்க முயன்றார், ஆனால் அவர்கள் அவரது கைகளைக் கட்டி வாயை அடைத்ததாகக் கூறப்படுகிறது. இரண்டு சிறுமிகளும் மயக்கமடைந்ததாகவும், சிறுவர்கள் அவர்களை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகவும் தெரிகிறது.
இதுகுறித்து போலீசார் கூறுகையில் “5 சிறுவர்களில் 3 பேர் அரசுப் பள்ளியில் 8 மற்றும் 9வது படிக்கிறார்கள். மீதமுள்ள 2 பேர் பள்ளிக்கு செல்லாமல் ட்ராப் அவுட் ஆனவர்கள்.
கட்டுமானத்தின் போது விடுபட்ட பொருட்களை விற்பது, அக்கம்பக்கத்தில் உணவு கேட்டு செல்வது போன்ற செயல்களை இவர்கள் வாடிக்கையாக வைத்திருந்துள்ளனர்” எனத் தெரிவித்தனர்.
மேலும், “அவர்கள் மாடியில் தனியாக இருந்த சிறுமிகளை வாயை பொத்தி அடைத்து வைத்து பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளனர். சிறிது நேரத்திற்குப் பிறகு, பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர் அவரது மொட்டை மாடிக்கு வந்து, இரண்டு சிறுமிகளும் பக்கத்து பால்கனியில் மயங்கிக் கிடப்பதைக் கண்டு, அவர்களின் பெற்றோருக்குத் தகவல் கொடுத்தார்
சம்பவம் நடந்த நேரத்தில், அவர்களது பெற்றோரில் ஒருவர் வேலையில் இருந்தார், மற்றவர் வெளியூரில் இருந்தார்.
சனிக்கிழமை மாலை, சிறுமிகளின் தந்தை ஓசூர் நகர காவல் நிலையத்திற்கு புகார் அளிக்கச் சென்றார், அங்கு அவர் ஓசூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்குமாறு போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தேடுதல் வேட்டையைத் தொடங்கினர்.
இதைத்தொடர்ந்து சனிக்கிழமை இரவு மூன்று சிறுவர்களையும் ஞாயிற்றுக்கிழமை மற்ற இருவரையும் கைது செய்தனர்” எனத் தெரிவித்தனர்.
அவர்கள் ஐந்து பேர் மீதும் போக்சோ சட்டத்தின் பிரிவு 7 (பாலியல் வன்கொடுமை) r/w 8 இன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு ஞாயிற்றுக்கிழமை கிருஷ்ணகிரியில் உள்ள சிறார் நீதி வாரியத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
குழந்தைகள் தொடர்பான புகார்களை 1098 என்ற சைல்ட்லைன் மூலம் தெரிவிக்கலாம்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

