மேலும் அறிய
Passenger Train Fire: திக்! திக்! மகாராஷ்டிராவில் குபுகுபுவென எரியும் பயணிகள் ரயில்.. பயணிகளின் நிலைமை என்ன..?
Passenger Train Fire: மகாராஸ்டிரா மாநிலத்தில் பயணிகள் ரயிலில் தீ விபத்து ஏற்பட்டு 5 பெட்டிகள் எரிந்து நாசமாகியது.

தீ பற்றி எரியும் பயணிகள் ரயில்
இன்று பிற்பகல் 3 மணியளவில் மகாராஷ்டிராவின் அகமதுநகரில் இருந்து அஸ்திக்கு ஓடும் புறநகர் ரயிலின் ஐந்து பெட்டிகளில் தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் ரயிலில் தீ பற்றி எரியும் காட்சிகள் குறித்த வீடியோக்கள் இணையத்தில் பரவி வருகின்றது.
தீ பரவுவதற்கு முன்னர் பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர் எனவும் அதிகாரிகள் ஊடகங்களிடம் தெரிவித்ததாக, ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த விபத்து தொடர்பாக ரயில்வே காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றது. சமீப காலமாக ரயில்கள் தொடர்ந்து ஏதேனும் விபத்துகளை எதிர்கொண்டு வருவதால் பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















