Crime : ரேஸ் பைக் மோதியதில் ஓய்வு பெண் காவலர் ஆய்வாளர் மரணம்.. ஒரு மணிநேரமாக சாலையில் கிடந்த சடலம்..!
சென்னையில் ரேஸில் ஈடுபட்ட இளைஞர் மோதியதில் பெண் காவலர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
![Crime : ரேஸ் பைக் மோதியதில் ஓய்வு பெண் காவலர் ஆய்வாளர் மரணம்.. ஒரு மணிநேரமாக சாலையில் கிடந்த சடலம்..! Female guard killed in race bike collision in Chennai Bike race and Its consequences Crime : ரேஸ் பைக் மோதியதில் ஓய்வு பெண் காவலர் ஆய்வாளர் மரணம்.. ஒரு மணிநேரமாக சாலையில் கிடந்த சடலம்..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/06/13/0334b3795395850315cafd30b5023314_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சென்னையில் ரேஸில் ஈடுபட்ட இளைஞர் மோதியதில் பெண் காவலர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளர் செல்வகுமாரி. இவர் நேற்று காலை தனது ஸ்கூட்டியில் வழிதவறி மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் சென்றதாக தெரிகிறது. மண்ணிவாக்கம் அருகே சென்ற போது அதே சாலையில் மோட்டார் ரேஸில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் தங்களது பைக்குகளில் வேகமாக வந்துள்ளனர்.
அதில் அதிவேகத்தில் வந்த நவீன் என்பவரின் பைக்கானது செல்வகுமாரி பைக் மீது வேகமாக மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட செல்வகுமாரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதே போல நவீனுடன் வந்த விஷ்வா என்பவரின் பைக்கும் விபத்துக்குள்ளானது. இதில் விஷ்வாவுக்கு கால் மற்றும் கையில் எலும்புமுறிவு ஏற்பட்டது. இதனையடுத்து விஷாவுடன் நவீனும் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கழித்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உயிரிழந்த பெண் காவலரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)