Idukki Murders: நடு இரவில் எரிந்த வீடு! கதறி கருகிய 4 பேர்! அமைதியாய் வேடிக்கை பார்த்த முதியவர்! ஷாக் சம்பவம்!
உதவிக்காக பக்கத்து வீட்டினரை கூச்சலிட்டு அழைத்திருக்கின்றனர். உதவி செய்ய வருபவர்களையும் தீ வைத்து கொன்றுவிடுவேன் என ஹமீது மிரட்டி இருக்கிறார்.
![Idukki Murders: நடு இரவில் எரிந்த வீடு! கதறி கருகிய 4 பேர்! அமைதியாய் வேடிக்கை பார்த்த முதியவர்! ஷாக் சம்பவம்! Father kills a family of 4 by setting fire over land dispute shocks idukki Idukki Murders: நடு இரவில் எரிந்த வீடு! கதறி கருகிய 4 பேர்! அமைதியாய் வேடிக்கை பார்த்த முதியவர்! ஷாக் சம்பவம்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/19/885c3fd2e7508777ad836393578e64e0_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரை 79 வயது மிக்க முதியவர் ஒருவர் தீ வைத்து கொலை செய்திருக்கும் சம்பவம் கேரளா இடுக்கி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இடுக்கி சீனிக்குழி கிராமத்தைச் சேர்ந்தவர் ஹமீது. அவரது மகன் ஃபைசல், மனைவி, 2 பெண் குழந்தைகளுடன் அதே பகுதியில் வசித்து வந்துள்ளார். ஹமீதுக்கும் ஃபைசலுக்கும் இடையே நில தகறாறு இருந்து வந்துள்ளது. ஹமீதுக்கு சொந்தமான 72 செண்ட் நிலத்தை கவனித்து கொள்ளுமாறு ஃபைசலிடம் தெரிவித்திருக்கிறார். ஆனால், ஃபைசல் சரிவர செய்யாததால், ஹமீது நிலத்தை திருப்பி கேட்டுள்ளார்.
நிலத்தை திருப்பி தர மறுத்ததால் ஃபைசல்மீது ஹமீதுக்கு அதிருப்தி ஏற்பட்டிருக்கிறது. இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்று மோதலாக மாறி இருக்கிறது. அதனை அடுத்து, ஃபைசல், அவரது மனைவி சீபா, மகள்கள் மெஹர், அஸ்னா ஆகியோர் உறங்கச் சென்றபின் வீட்டின் கதவுகளை வெளியில் இருந்து பூட்டி இருக்கிறார் ஹமீது. பிறகு தீ வைத்து வீட்டில் இருப்பவர்களை கொடூரமாக கொலை செய்திருக்கிறார்.
வீட்டில் தீ பிடித்ததை உணர்ந்த ஃபைசல் குடும்பத்தினர், உதவிக்காக பக்கத்து வீட்டினரை கூச்சலிட்டு அழைத்திருக்கின்றனர். உதவி செய்ய வருபவர்களையும் தீ வைத்து கொன்றுவிடுவேன் என ஹமீது மிரட்டி இருக்கிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த பக்கத்துவீட்டார், செய்வது அறியாது இருந்துள்ளனர். நிலைமையை சமாளித்து எவராலும் உரிய நேரத்தில் வந்து உதவி செய்ய முடியாததால், நால்வரும் தீயில் கருகி உயிரிழந்துள்ளனர். தீயணைப்பு துறையினர் சம்பவம் இடத்திற்கு விரைந்து தீயை அணைத்துள்ளனர். ஹமீது மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்படுகிறது
பிற முக்கிய செய்திகள்:
அடுத்த வீட்டு வாசலில் சிறுநீர் கழித்த விவகாரம்.. ஏபிவிபி முன்னாள் தலைவர் சுப்பையா கைது!#chennai https://t.co/JcdwIRL0lZ
— ABP Nadu (@abpnadu) March 19, 2022
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)