நானே இரண்டாவது... உனக்கென்ன மூனாவது! கள்ளக்காதலி கதையை முடித்த இளைஞர்!

உளுந்தூர்பேட்டையில் மூன்றாவது நபருடன் தொடர்பில் இருப்பதாக சந்தேகித்த இரண்டாது காதலன், முதல் காதலனின் மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்து கைதாகியுள்ளார்.

FOLLOW US: 

உளுந்தூர்பேட்டையில் ஆத்திரத்தில் இளம்பெண்ணின் கழுத்தை நெறித்து கொலை செய்த கள்ளக்காதலன்  கைது செய்யப்பட்டார். ஏன் நடந்தது இந்த கொலை?நானே இரண்டாவது... உனக்கென்ன மூனாவது! கள்ளக்காதலி கதையை முடித்த இளைஞர்!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள நாச்சியார் பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை மகள் எழில்செல்வி(வயது 22). இவரும் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள நைனாகுப்பம் கிராமத்தை சேர்ந்த சிவா என்பவரும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.  இந்த நிலையில் உளுந்தூர்பேட்டை தாலுகா ஒலையனூர் கிராமத்தை சேர்ந்த அய்யப்பன் என்பவருடன் எழில்செல்விக்கு பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. தொடர்ந்து குழந்தையுடன் வீட்டை விட்டு வெளியேறிய எழில்செல்வி உளுந்தூர்பேட்டையில் வாடகை வீட்டில் அய்யப்பனுடன் வசித்து வந்தார்.  இதற்கிடையே எழில்செல்வியின் நடவடிக்கைகளில் அய்யப்பனுக்கு சந்தேகம் ஏற்பட்டதை அடுத்து அவர்களுக்கிடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு ஏற்பட்டு வருவது வழக்கமாக இருந்துள்ளது அடிக்கடி சண்டை இட்டுக் கொள்வதும் அடித்துக்கொள்வது போன்ற சம்பவங்களும் அரங்கேறியுள்ளன. இந்த நிலையில் காலையிலும் இது தொடர்பாக இருவருக்கும் மீண்டும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு ஆகியது அப்போது ஆத்திரம் அடைந்த அய்யப்பன், எழில்செல்வியின் கழுத்தை நெரித்தார். கழுத்தை நெரித்து உடன் எழில்செல்வி மயக்க நிலையை அடைந்து கீழே சாய்ந்து உள்ளார்.நானே இரண்டாவது... உனக்கென்ன மூனாவது! கள்ளக்காதலி கதையை முடித்த இளைஞர்!

மயக்கத்தால் விழுந்த எழில் செல்வியை உடனடியாக அய்யப்பன் தனது உறவினர்கள் சிலர் உதவியுடன் ஆட்டோவில் ஏற்றி சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு தனது மனைவிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாகவும், அவருக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் எனவும் டாக்டர்களிடம் அய்யப்பன் கூறினார். இதையடுத்து எழில்செல்வியை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதற்கிடையே இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்து மருத்துவமனைக்கு வந்த உளுந்தூர்பேட்டை போலீசார், அய்யப்பனிடம் விசாரித்த போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினார். இதனால் இது தொடர்பாக போலீசார் சந்தேகத்ததின் பேரில், அவரை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், எழில்செல்வியை கொலை செய்ததை அய்யப்பன் ஒப்புக்கொண்டார்.நானே இரண்டாவது... உனக்கென்ன மூனாவது! கள்ளக்காதலி கதையை முடித்த இளைஞர்!

இது தொடர்பாக அவர் போலீசாருக்கு அளித்த வாக்குமூலத்தில் எழில் செல்வியின் நடத்தையில் எனக்கு சந்தேகம் ஏற்பட்டதால் அவருடன் வாக்குவாதம் செய்ததாகவும், தனக்கு துரோகம் செய்துவிட்டு வேறு ஒருவருடன் செல்போனில் பேசி வந்தது தெரியவந்ததால் ஆத்திரம் அடைந்த நான் எழில் செல்வியின் கழுத்தை நெரித்து கொலை செய்ததாகவும் கூறினார்.  அதைத்தொடர்ந்து அய்யப்பனை போலீசார் கைது செய்தனர். பின்னர் அய்யப்பனை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார் இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags: murder kallakurichi crime Strangulation

தொடர்புடைய செய்திகள்

ஆன்மிக பணிக்கு விருப்பம் தெரிவித்த மனைவி; காவல் நிலையம் முன் உயிரோடு கொளுத்த முயன்ற குடும்பம்

ஆன்மிக பணிக்கு விருப்பம் தெரிவித்த மனைவி; காவல் நிலையம் முன் உயிரோடு கொளுத்த முயன்ற குடும்பம்

மதனின் வங்கி கணக்கு முடக்கம் - ரூ.4 கோடி இருந்தது கண்டுபிடிப்பு

மதனின் வங்கி கணக்கு முடக்கம் - ரூ.4 கோடி இருந்தது கண்டுபிடிப்பு

Sivashankar Baba: சிவசங்கர் பாபாவை 5 நாள் காவலில் எடுக்க சிபிசிஐடி முடிவு

Sivashankar Baba: சிவசங்கர் பாபாவை 5 நாள் காவலில் எடுக்க சிபிசிஐடி முடிவு

PUBG Madhan Arrested: பப்ஜி மதன் கைது: போலீஸ் காலில் விழுந்து கதறினார்! கைது நடந்தது எப்படி?

PUBG Madhan Arrested: பப்ஜி மதன் கைது: போலீஸ் காலில் விழுந்து கதறினார்! கைது நடந்தது எப்படி?

PUBG Madhan: தலைமறைவு இன்றல்ல 2017 ல் இருந்தாம்.... கடன் மோசடி செய்த மதனின் பகீர் பின்னணி!

PUBG Madhan: தலைமறைவு இன்றல்ல 2017 ல் இருந்தாம்.... கடன் மோசடி செய்த மதனின் பகீர் பின்னணி!

டாப் நியூஸ்

BREAKING: பப்ஜி மதன் மனைவி கிருத்திகா வங்கி கணக்கு முடக்கம்!

BREAKING: பப்ஜி மதன் மனைவி கிருத்திகா வங்கி கணக்கு முடக்கம்!

NEET Exam 2021: நீட் தேர்வை நடத்த திட்டம்? - விரைவில் அறிவிப்பு

NEET Exam 2021: நீட் தேர்வை நடத்த திட்டம்? - விரைவில் அறிவிப்பு

WTC Final Preview : நிறைவடைந்த கவுண்டவுன் - இன்று தொடங்கும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் யுத்தம்!

WTC Final Preview : நிறைவடைந்த கவுண்டவுன் - இன்று தொடங்கும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் யுத்தம்!

‛எனக்காடா எண்ட் கார்டு போடுறீங்க... எனக்கு எண்டே இல்லடா...’ வாராரு வாராரு வடிவேலு வாராரு...!

‛எனக்காடா எண்ட் கார்டு போடுறீங்க... எனக்கு எண்டே இல்லடா...’ வாராரு வாராரு வடிவேலு வாராரு...!