மேலும் அறிய

Thanjavur School Girl Suicide | தஞ்சை மாணவி தற்கொலை : அதிரவைக்கும் இறுதி வாக்குமூலம்.. வெளியான அதிர்ச்சி தகவல்..

நீதித்துறை நடுவர் பெற்ற மரண வாக்குமூலத்தில் அந்த மாணவியிடம் உங்கள் பெயர், எத்தனையாவது வகுப்பு, உங்கள் அம்மா அப்பா என்ன செய்கிறார்கள் என்ற அடிப்படை கேள்விகளை முன்வைத்துள்ளதாக தெரிகிறது

தஞ்சையில் உள்ள திருக்காட்டுப்பள்ளியில் 12-ஆம் வகுப்பு பயின்று வந்த மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. மாணவி தற்கொலை செய்துகொண்டதற்கு விடுதி வார்டனின் தொல்லையே காரணம் என்று முதலில் தகவல்கள் பரவியது. பின்னர், மாணவியை மதம் மாற்றம் செய்ய வற்புறுத்தியதாலே மாணவி தற்கொலை செய்துகொண்டதாக வீடியோ வெளியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தநிலையில், மாணவி அளித்த இறுதி வாக்குமூலம் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில், மருத்துவமனையில் நீதித்துறை நடுவர் பெற்ற மரண வாக்குமூலத்தில் அந்த மாணவியிடம் உங்கள் பெயர், எத்தனையாவது வகுப்பு, உங்கள் அம்மா அப்பா என்ன செய்கிறார்கள் என்ற அடிப்படை கேள்விகளை முன்வைக்கப்பட்டுள்ளது.

அதனைத்தொடர்ந்து, முழுமனதோடுதான் இந்த வாக்குமூலம் அளிக்க விருப்பமா என்று கேட்டதற்கு அந்த மாணவியும் ஆம் என்று பதில் அளித்துள்ளார். தொடர்ந்து, யாரின் கட்டாயத்தில் அல்லது சொல்லிகொடுத்து வாக்குமூலம் அளித்தீர்களா என்ற கேள்விக்கு இல்லை என்றும் பதில் அளித்துள்ளார். 

அதன்பிறகு, மாணவி வாக்குமூலம் அளிக்க தகுதியானவர் என்பதை அறிந்துகொண்ட நீதித்துறை நடுவர், அருகில் மருத்துவர் மற்றும் செவிலியர் இருக்கும் தகவலை தெரியபடுத்திக்கொண்டு வாக்குமூலத்தை பெற்றுக்கொண்டார். 

மாணவியிடம் கேள்வியாக :

உங்களுக்கு இந்த நிலைமை எப்படி ஏற்பட்டது ? 

தஞ்சையில் உள்ள திருக்காட்டுப்பள்ளியில் 8 ம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்து வருகிறேன். எங்கள் ஊர் வெகுதொலைவில் உள்ளத்தால் இந்த பள்ளியில் உள்ள ஹாஸ்டலில் கடந்த 5 வருடமாக தங்கி பள்ளிக்கு சென்று படிப்பை மேற்கொண்டேன். அந்த ஹாஸ்டலில் வார்டன் சிஸ்டர் என்னிடம் மட்டும் எப்பொழுதும் ஹாஸ்டல் கணக்கு வழக்குகளை பார்க்க சொல்வார்.

என்னை எப்பொழுது எதாவது சொல்லி திட்டியும்,அடித்து கொண்டே இருப்பார். அனைவரும் விடுமுறை நாட்களில் வீட்டுக்கு சென்றாலும் என்னை மட்டும் அனுப்பமாட்டார். எனது வீட்டில் இருந்து ஏன் அனுப்பவில்லை என்று கேட்டாலும் அவள் இங்கு இருந்தால்தான் ஒழுங்கா படிப்பாள் என்றும் கூறுவார். 

ஒரு சில நேரத்தில் நான் படிக்க வேண்டும் என்று தெரிவித்தாலும் தொடர்ந்து ஹாஸ்டல் கணக்கு வழக்குகளை பார்க்க சொல்லி அடிப்பார். கடந்த நாலு வருசமா நீ தான பார்த்த, இந்த வருசமும் நீயே பாரு என்று வார்டன் தொல்லை கொடுத்தார். 

அதேபோல், கிறிஸ்மஸ் பண்டிகையின்போது அனைவரும் ஊருக்கு சென்றாலும் ஏதோ ஒரு காரணம் சொல்லி என்னை ஊருக்கு அனுப்பாமல் கணக்கு வழக்குகளை பார்க்க சொல்வார். இன்னும் ஒரு வருடம் தான் படிப்பு உள்ளது, நான் படிக்க வேண்டும் என்ற காரணத்தில் பொறுத்து கொண்டேன். 

உடம்பு சரியில்லை என்றாலும் ஊருக்கு விடமாட்டார். ஹாஸ்டலில் fees கட்டிவிட்டாலும் ஒழுங்காக உணவுகளை தரமாட்டார். திருச்சியில் உள்ள ஹாஸ்டேஜ் அழைத்து சென்று அங்கு உள்ள கணக்குகளையும் பார்க்க சொல்வார். தொடர்ந்து காரணமே இல்லை என்றாலும் திட்டுவார். 

ஹாஸ்டலில் எந்தவொரு பொருள் காணவில்லை என்றாலும் என் மீது குற்றம் சுமத்துவார். கடந்த 9 ம் தேதியன்று ஹாஸ்டலில் இருந்த பூச்சிமருந்து எடுத்து குடித்துவிட்டேன். அது யாருக்கும் தெரியாது. உடனே எனக்கு வாந்தி வந்துவிட்டது. என் வாயில் இருந்து பச்சை நிறத்தில் ஏதோ ஒரு திரவம் வெளியேறியது. அதுபற்றி என்னிடம் கேட்டதற்கு எதுவும் சொல்லவில்லை. 

அடுத்தநாளான 10 ம் தேதி உடம்பு சரியில்லை என்று ஊருக்கு சென்றேன். அங்கு சென்றதும் எனக்கு வாய்,நாக்கு,தொண்டையில் எரிச்சலாக இருந்தது. இதன் காரணமாக மெடிக்கல் மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றேன். இருந்தும், தொடர்ந்து அந்த எரிச்சல் என் வயிற்றில் பரவ தொடங்கியது. 

இதனால் எரிச்சல் தாங்க முடியாமல் மருந்து குடித்ததை வீட்டில் சொன்னேன். அவர்கள் உடனடியாக இந்த மருத்துவமனையில் அனுமதித்தனர். என் நிலைமைக்கு அந்த வார்டன்தான் காரணம். அவர் என்னை தொடர்ந்து கணக்கு வழக்கு பார்க்க சொன்னதால்தான் இந்த முடிவுக்கு வந்தேன் என்று அந்த மாணவி மரண வாக்குமூலத்தில் தகவல் தெரிவித்துள்ளார். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ISRO BlueBird: இன்று விண்ணில் பறக்கிறது பாகுபலி ராக்கெட் - டவரே இல்லாமல் சிக்னல் - ப்ளூபேர்டின் இலக்கு என்ன?
ISRO BlueBird: இன்று விண்ணில் பறக்கிறது பாகுபலி ராக்கெட் - டவரே இல்லாமல் சிக்னல் - ப்ளூபேர்டின் இலக்கு என்ன?
JanaNayagan Vs Parasakthi: எஸ்கேப் ஆன சூர்யா, சிக்கித் தவிக்கும் SK? கையில் துப்பாக்கி, பாடாய்படுத்தும் பராசக்தி?
JanaNayagan Vs Parasakthi: எஸ்கேப் ஆன சூர்யா, சிக்கித் தவிக்கும் SK? கையில் துப்பாக்கி, பாடாய்படுத்தும் பராசக்தி?
Trump Epstein Files: புதிய எப்ஸ்டீன் கோப்புகள்; ட்ரம்ப் மீது பாலியல் பலாத்கார குற்றச்சாட்டு; நீதித்துறை சொல்வது என்ன.?
புதிய எப்ஸ்டீன் கோப்புகள்; ட்ரம்ப் மீது பாலியல் பலாத்கார குற்றச்சாட்டு; நீதித்துறை சொல்வது என்ன.?
அதிமுக கூட்டணியில் பாமக, அமமுக, தேமுதிக, ஓபிஎஸ் தரப்பு.. பாஜக முடிவுக்கு சம்மதம் தெரிவித்த இபிஎஸ்?
அதிமுக கூட்டணியில் பாமக, அமமுக, தேமுதிக, ஓபிஎஸ் தரப்பு.. பாஜக முடிவுக்கு சம்மதம் தெரிவித்த இபிஎஸ்?
ABP Premium

வீடியோ

Piyush Goyal on Vijay | ”விஜய் ஒரு SPOILER
TVK Ajitha | காரை மறித்த பெண் நிர்வாகி தவெகவில் இருந்து நீக்கம்?ஆக்‌ஷனில் இறங்கிய விஜய்
அதிமுக - பாஜக MEETING! MISS ஆன அண்ணாமலை! ஒதுக்கி வைக்கும் பாஜக
ஆதவ் அர்ஜூனாவுடன் ஒரே மேடையில் காங்கிரஸ் கட்சியினர்! கூட்டணிக்கான அச்சாரமா?
விஜய் சொன்னது பொய் கதை?”மக்களை அடிமையாக்கிய ஜோசப்” சர்ச்சையான KUTTY STORY உண்மை இதுதான்? | Christmas TVK Vijay Speech |

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ISRO BlueBird: இன்று விண்ணில் பறக்கிறது பாகுபலி ராக்கெட் - டவரே இல்லாமல் சிக்னல் - ப்ளூபேர்டின் இலக்கு என்ன?
ISRO BlueBird: இன்று விண்ணில் பறக்கிறது பாகுபலி ராக்கெட் - டவரே இல்லாமல் சிக்னல் - ப்ளூபேர்டின் இலக்கு என்ன?
JanaNayagan Vs Parasakthi: எஸ்கேப் ஆன சூர்யா, சிக்கித் தவிக்கும் SK? கையில் துப்பாக்கி, பாடாய்படுத்தும் பராசக்தி?
JanaNayagan Vs Parasakthi: எஸ்கேப் ஆன சூர்யா, சிக்கித் தவிக்கும் SK? கையில் துப்பாக்கி, பாடாய்படுத்தும் பராசக்தி?
Trump Epstein Files: புதிய எப்ஸ்டீன் கோப்புகள்; ட்ரம்ப் மீது பாலியல் பலாத்கார குற்றச்சாட்டு; நீதித்துறை சொல்வது என்ன.?
புதிய எப்ஸ்டீன் கோப்புகள்; ட்ரம்ப் மீது பாலியல் பலாத்கார குற்றச்சாட்டு; நீதித்துறை சொல்வது என்ன.?
அதிமுக கூட்டணியில் பாமக, அமமுக, தேமுதிக, ஓபிஎஸ் தரப்பு.. பாஜக முடிவுக்கு சம்மதம் தெரிவித்த இபிஎஸ்?
அதிமுக கூட்டணியில் பாமக, அமமுக, தேமுதிக, ஓபிஎஸ் தரப்பு.. பாஜக முடிவுக்கு சம்மதம் தெரிவித்த இபிஎஸ்?
அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கு! இந்த தேதிக்குள்ளாக... அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!
அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கு! இந்த தேதிக்குள்ளாக... அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!
நாளை மின் தடை: கோவை, திருப்பூர், சேலம் உட்பட பல மாவட்டங்களில் மின்சாரம் இருக்காது! முக்கிய அறிவிப்பு!
நாளை மின் தடை: கோவை, திருப்பூர், சேலம் உட்பட பல மாவட்டங்களில் மின்சாரம் இருக்காது! முக்கிய அறிவிப்பு!
விமானப் பாதுகாப்பு துறையில் புது மைல்கல்! ஐஐடி சென்னை வழங்கும் உயர்தர பயிற்சி! விண்ணப்பிப்பது எப்படி?
விமானப் பாதுகாப்பு துறையில் புது மைல்கல்! ஐஐடி சென்னை வழங்கும் உயர்தர பயிற்சி! விண்ணப்பிப்பது எப்படி?
விஜய் ஒரு Spoiler .! அதிமுக- பாஜக கூட்டணியின் வெற்றிக்கு சிக்கல்.? போட்டுடைத்த பியூஸ் கோயல்
விஜய் ஒரு Spoiler .! அதிமுக- பாஜக கூட்டணியின் வெற்றிக்கு சிக்கல்.? போட்டுடைத்த பியூஸ் கோயல்
Embed widget