மேலும் அறிய

வயதான தம்பதியை கொலை செய்து கொள்ளையடித்த வழக்கில் 2 பேருக்கு இரட்டை ஆயுள்!

புதுச்சேரியில் வயதான தம்பதியை கொலை செய்து வெளிநாட்டு கரன்சி, நகைகளை கொள்ளையடித்த 2 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து புதுச்சேரி நீதிமன்றம்  பரபரப்பு தீர்ப்பு

புதுச்சேரியில் வயதான தம்பதியை கொலை செய்து வெளிநாட்டு கரன்சி, நகைகளை கொள்ளையடித்த 2 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து புதுச்சேரி நீதிமன்றம்  பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. புதுச்சேரி அண்ணா நகர் 14-வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 72). இவரது மனைவி ஹேமலதா (65). இவர்கள்  வேளாண் துறை அமைச்சர் தேனீ.ஜெயக்குமாரின் சம்மந்தி ஆவர்.

பாலகிருஷ்ணனின் 2 மகன்களும், ஒரு மகளும் பிரான்ஸ் நாட்டில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். பாலகிருஷ்ணன், ஹேமலதா தம்பதி மட்டும் அண்ணா நகர் வீட்டில் தனியாக வசித்தனர். கடந்த 21.11.2018-ந் தேதி படுக்கை அறையில் தம்பதி கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தனர். வீட்டில் பீரோக்கள் திறக்கப்பட்டு, நகைகள் மற்றும் வெளிநாட்டு பணம் கொள்ளை போயிருந்தது.

இது குறித்த புகாரின் பேரில் உருளையன்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கொலை நடந்த வீட்டில் டிரைவர் ஒருவரின் அடையாள அட்டை கிடந்தது. அதனை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். அதன் அடிப்படையில் கோட்டக்குப்பம் பகுதியைச் சேர்ந்த முகமது காசிம் (31), அவரது நண்பர் முகமது இலியாஸ் (30) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதில் பாலகிருஷ்ணன் வீட்டில் முகமது காசிம் மாற்று டிரைவராக பணியாற்றியவர் என்பது தெரியவந்தது.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், பாலகிருஷ்ணன் அதிகளவில் வெளிநாட்டு பணம் வைத்திருந்ததை பார்த்துள்ளார். அதை கொள்ளையடிக்கும் நோக்கில் தனது நண்பர் முகமது இலியாசுடன் சேர்ந்து தம்பதியை முகமதுகாசிம் கொலை செய்துள்ளார். வீட்டில் அதிக அளவில் பணம் இல்லாததால் ஹேமலதா கழுத்தில் அணிந்திருந்த 16 பவுன் நகைகள் மற்றும் சிங்கப்பூர் கரன்சிகளை அவர்கள் கொள்ளையடித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.5 லட்சத்து 75 ஆயிரம் ஆகும்.


வயதான தம்பதியை கொலை செய்து கொள்ளையடித்த வழக்கில் 2 பேருக்கு இரட்டை ஆயுள்!

இந்த கொலை வழக்கு புதுச்சேரி 2-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி இளவரசன் முன்னிலையில் நடைபெற்று வந்தது. வழக்கின் விசாரணை முடிவடைந்து  இன்று தீர்ப்பு கூறப்பட்டது. இதில் குற்றம் சாட்டப்பட்ட முகமது காசிம், முகமது இலியாஸ் ஆகிய 2 பேருக்கும் இரட்டை ஆயுள் தண்டனையும், தலா ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி இளவரசன் தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் பாலமுருகன் ஆஜரானார்.

புதுவை காலாப்பட்டு சிறையில் 11 கைதிகள் தற்கொலை முயற்சி- ஆணிகளை விழுங்கியதால் பரபரப்பு...!

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட முகமது காசிம், முகமது இலியாஸ் ஆகிய 2 பேருக்கும் இதுவரை ஜாமீன் வழங்கப்படவில்லை. தொடர்ந்து காலாப்பட்டு சிறையில் அவர்கள் இருந்து வந்தநிலையில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.  வழக்கிற்காக புதுவை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் 2 பேரும் தீர்ப்பிற்கு பிறகு மீண்டும் காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

 

மேலும் படிக்க : Today Headlines : பொங்கல் பஸ்...இன்றும் ஆதார் இணைப்பு... ஆஸி., வெற்றி... இன்னும் பல செய்திகள்!

 

parliament Winter session : அவையின் கேள்வி நேரத்தை அலட்சியப்படுத்திய 9 பாஜக உறுப்பினர்கள் - வலுக்கும் கண்டனங்கள்

 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

 

பேஸ்புக் பக்கத்தில் தொடர

 

ட்விட்டர் பக்கத்தில் தொடர

 

யூடிபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!
சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்
தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்
கள்ளத் தொடர்பு சந்தேகத்தில் காதலி கொலை !! தனிமையில் இருந்த போது நேர்ந்த கொடூரம்
கள்ளத் தொடர்பு சந்தேகத்தில் காதலி கொலை !! தனிமையில் இருந்த போது நேர்ந்த கொடூரம்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
வெளியான 10ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள்; மார்க் ஷீட் பெறுவது எப்படி? மறுகூட்டல், மறுமதிப்பீடு விவரம்!
வெளியான 10ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள்; மார்க் ஷீட் பெறுவது எப்படி? மறுகூட்டல், மறுமதிப்பீடு விவரம்!
TN Budget 2026: தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
TN Budget 2026 : ‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் விஜயின் வாக்குறுதிகள் என்னென்ன இடம்பெறவில்லை..?
‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் இடம்பெறாத தவெக வாக்குறுதிகள்..!
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
Trump on Iran War: “போரே வேணாம்டா சாமி, என்ன விட்டுடுங்க.!“ என்ன விலை கொடுத்தாவது ஈரானுடன் ஒப்பந்தம்; ட்ரம்ப் முனைப்பு
“போரே வேணாம்டா சாமி, என்ன விட்டுடுங்க.!“ என்ன விலை கொடுத்தாவது ஈரானுடன் ஒப்பந்தம்; ட்ரம்ப் முனைப்பு
MG Hector Hawk: 530 கிமீ ரேஞ்ச்.! மஹிந்திரா XUV 7XO-க்கு சங்கு ஊதுமா MG Hector Hawk; பிளக்-இன் ஹைப்ரிட், EV பதிப்புகளில் அறிமுகம்
530 கிமீ ரேஞ்ச்.! மஹிந்திரா XUV 7XO-க்கு சங்கு ஊதுமா MG Hector Hawk; பிளக்-இன் ஹைப்ரிட், EV பதிப்புகளில் அறிமுகம்
Gold Rate Today Aug.5th: அடப்பாவமே.! தங்கம் விலை ஒரே நாள்ல இவ்ளோ உயர்ந்துடுச்சே.! இப்போ விலை எவ்ளோ தெரியுமா.?
அடப்பாவமே.! தங்கம் விலை ஒரே நாள்ல இவ்ளோ உயர்ந்துடுச்சே.! இப்போ விலை எவ்ளோ தெரியுமா.?
Embed widget